வெண்மணிச் சம்பவத்துக்கு ஒரு வாரம் முன்பு எர்ணாகுளத்தில் கட்சி மாநாடு. நாங்க 3, 4 பேர் தவிர எல்லோரும் அங்க போயிருந்தாங்க. என் மேல வழக்கு. நாகப்பட்டினத்த விட்ட வெளியே போகக் கூடாது. தினமும் போலீஸ் ஸ்டேன்ல கையயழுத்துப் போடனும். அதனால நான் மாநாட்டுக்குப் போகல. மாநாட்டு கடைசி நாள் நிகழ்ச்சிக்கு இங்கிருந்து அனுப்ப 5 பஸ் ஏற்பாடு பண்ணனும். ஒரு பஸ் தேவூரிலிருந்து புறப்பட ஏற்பாடு. இப்படி ஒவ்வொரு பஸ்ஸையும் ஏற்பாடு பண்ணி அனுப்ப டாக்கிசியில் ராத்திரி 9 மணிக்கு மேல போறோம். தேவூருக்குப் போய் சேரும் போது இரவு 11 மணிக்கு மேல ஆயிட்டு. அங்க கோபால்னு நம்ம தலைவர். அவர் தான் பின்னால் நடந்த இரிஞ்சூர் கொலை வழக்கில் ஏ1. அவர் வீடு தேவூர் பாரதி தெரு கடைசி. அங்கிருந்து பார்த்தா வெண்மணி தெரியும். அங்க ஒரே கூட்டம்.
நான், தோழர்கள் ஜி.பி. கணேசன் எல்லோரும் போறோம். அங்க இறங்கி என்னன்ன கேட்டா அப்பத்தான் ஒரே நெருப்பு பிழம்பா வெண்மணி எரிஞ்சி தணலா அமுங்கிற நேரம். அங்க நிக்கிற போதே போலீஸ் வேன் போச்சு. முன்னாலேயே 2 வேன் போயிருக்கன்னாங்க. இதுக்குப் பிறகு இங்க நிக்க வேணாம். நீங்க போயி மற்ற வேலைகளைப் பாருங்க. நான் என்னன்ன தெரிஞ்சுகிட்டு வர்றேன் அப்படின்னு நான் மட்டும் இறங்கிக்கிட்டு அவங்களை அனுப்பிட்டேன். வெண்மணியிலிருந்து அடிப்பட்டவங்க 8,10 பேர் வந்தாங்க. எல்லோரையும் பார வண்டியில் ஏத்தி ஆஸ்பத்திரிக்கு அனுப்பிட்டு, ஜனங்கள பார்த்தா ஒரே கொந்தளிப்பா இருக்காங்க. விபரம் கேட்டா எல்லாரும் தப்பிச்சக்கிட்டு ஓடிட்டாங்க என்பது தான் அப்போதைய தகவல். போலீசும் நிறைய போயிருக்கு. இப்ப ஒன்னும் வேணாம். விடிஞ்சி பார்த்துக்கலாம்னு சொல்லி அவுங்கள அமைதிப்படுத்திட்டு நான் ஆஸ்பத்திரிக்குப் போயிட்டேன்.
மறுநாள் காலையில் 9 மணிக்குத் தான் எங்களுக்கு முழு விபரமும் தெரியும். நடந்த சம்பவம் என்னன்னா, வெண்மணியில முத்துசாமிங்கிறவர் நம்ம தலைவர். டீக்கடை வச்சிருந்தார். 4 பேர் அவரு கடைக்கு வந்து சாதியச் சொல்லித் திட்டுறான். போயிடுறான். திரும்பவும் இன்னும் கொஞ்சம் ஆட்களோட வந்து டீ கிளாசையயல்லாம் உடைக்கிறான். நம்ம ஆட்கள் அதிகமில்லை. வெளியில் வேலைக்குப் போயிட்டாங்க. மறுபடியும் வந்த கும்பல் முத்துசாமிய அடிச்சத் தூக்கிட்டுப் போய் மேல வெண்மணியில ஒரு வீட்டில் அடைச்ச வச்சிட்டாங்க. இதெல்லாம் பகல்ல நடக்குது. சாயந்திரம் ஆறு , ஆறரை மணிக்கு ஊருக்குத் திரும்புன நம்ம ஆட்களுக்குச் சேதி தெரிஞ்சு, கொதிச்சுப் போய் திரண்டு கம்பு, கத்தி கையிலே கெடச்ச ஆயுதங்களோட போறாங்க. கும்பலப் பார்த்த உடனே எல்லாரும் சிதறி ஓடிர்றான். வீட்டில இருந்த பெண்கள் பயத்தில பின் பக்கக் கதவைத் திறந்து விட முத்துசாமிய வெளியே கொண்டு வந்திட்டாங்க.
இது வியம் தெரிஞ்ச பக்கத்து ஊர்கள்லேருந்தும் தோழர்கள் பதட்டத்தோடு வர்றாங்க. சூழ்நிலையை யோசிச்சு நம்ம ஆளக் கடத்திப் பிரச்சனைப் பண்ணினவன் அவன். நாமளும் திரண்டு பேய் மீட்டுக்கிட்டு வந்திட்டோம். இப்போதைக்கு பிரச்சனை இதோட இருக்கட்டும். எச்சரிக்கையா மட்டும் இருங்க. மேற்கொண்டு நாம மேலேயும் சொல்லி முடிவு பண்ணிக்கலாம். அப்படின்னு சொல்லிட்டுப் போயிட்டாங்க.
ராத்திரி ஏழரை மணி வாக்கிலே இருக்கை ராமுப்பிள்ளை தன்னோட அடியாட்களோட வெண்மணி தெருவுக்குள்ளே பூந்திருக்கான். எப்பவுமே கிராமங்கள்ல ஆயத்தமா இருந்தா யாரும் உள்ளே நுழைஞ்சி ஒன்னும் பண்ணிட முடியாது. அதானல் தான் போலீசே ஊர் அடங்கின பிறகு ராத்திரி 11 மணிக்கு மேல கிராமத்த சுத்தி வளைச்சு நின்னுகிட்டு, ஒவ்வொரு வீடா ஆள்களைக் கிளப்பிக்கிட்டு வந்து அடிச்சு அங்கேயே வச்சிகிட்டு மறுபடி ஒவ்வொரு வீடா தட்டிக் கிளப்பிக்கிட்டு வருவான். உஷார்படுத்தறதுக்கோ, ஒன்னு கூடவோ விட மாட்டான். நம்ம மேலே நடந்த தாக்குதல்கள் எல்லாம் இப்படித்தான். இங்க நாமளும் உஷார இருந்ததால் உடனே ஒன்னா கூடிட்டாங்க. ஆனா அவன் நுழைஞ்ச உடனேயே நாட்டுத் துப்பாக்கியால சுட ஆரம்பிச்சுட்டான். நம்ம பல பேரு உடம்புல குண்டு துளைச்சிருச்சு. இவங்க எதிர்த்து கல்லால அடிச்சிருக்காங்க. எதிர்ப்பு பலமா இருந்ததால திரும்பப் போயிட்டான். இப்படி ஒரு ஆள் செத்துப் போனத முதல்ல இரு தரப்புக்கமே தெரியாது. இது நடந்து அரை மணி நேரம் கழிச்சி கோபாலகிருஷ்ண நாயுடு பெரும் கும்பலோட வந்து நுழைஞ்சு சுட ஆரம்பிச்சுட்டாரு. பெரும் கும்பல். கடுமையான தாக்குதல் எதிர்த்து நிக்க முடியாம எல்லோரும் சுத்துப்பட்ட கிராமங்கள நோக்கி ஓடிர்றாங்க. தப்பிச்ச ஓட முடியாம ராமையாங்கிறவர் வீட்டுக்குள்ள பல பேரு ஓடி உள்ள நுழைஞ்சத பார்த்த அவங்க ஆள் ஒருத்தன் வெளித்தாழ்ப்பாள் போட்டுட்டு வீட்டைக் கொளுத்திர்றானுங்க. ஒரு ஆள் மட்டும் மேல் கூரையைப் பிச்சிக்கிட்டு தப்பிக்க முயற்சி பண்ணும் போது அவரையும் கம்பால அடிச்சு நெருப்புக்குள்ள போட்டுர்றானுவ. இதுதான் நாடு முழுவதையும் அதிர வைச்ச வெண்மணிச் சம்பவம்.
முதல்ல வெண்மணி பகுதியில தொழிலாளர் மேல ஒரு மோசமான தாக்குதலுக்கு ஆயத்தம் இருக்குன்னு அரசுக்கு 6 மனுக்கள் அனுப்பியிருக்கோம். கடைசியா அனுப்புனது சம்பவம் நடக்க ஒர வாரம் முன்னாடி. அப்போ அண்ணாதுரை முதல்வர். அன்னைக்கி விவசாயத் தொழிலாளர் போராட்டங்கள நசுக்கறதுல எல்லாக கட்சிகளும், கட்சிகளின் லோக்கல் தலைவர்களும் , நிலப்பிரபுக்கு ஆதரவா, ஒன்னா நின்னாங்க. அரசு நாங்க அனுப்பின பெட்டின் மேல ஒரு நடவடிக்கையும் எடுக்கல. களத்தில் கம்யூனிஸ்ட் கட்சி மட்டுமே தனியா நின்னது.
வெண்மணி சம்பவத்துக்கு பின்னாடி எல்லாக் கட்சிகளின் கோரிக்கையும் நீதி விசாரணை வேண்டும் என்பதுதான். சி.பி.எம். மேல் மட்டத்திலேயும் இதையே தான் சொன்னாங்க. நகை தாலுக்கா கமிட்டி மட்டும் குற்றவாளி யாருன்னு தெரியாம இருக்கும் போது தான் நீதி விசாரணை கோரணும். பகிரங்கமா இரிஞ்சூர் கோபாலகிருஷ்ண நாயுடு அடியாட்களோடு வந்து நேரடியா நடத்தின கொலை வெறித் தாக்குதல். அதனால குற்றவாளிகளைக் குறிப்பிட்டு வழக்கு போடணும். இதுதான் நாகை தாலுக்கா கமிட்டி சொன்னது. இதைச் சொன்னவுடனே தோழர் பி.ஆர். ஏத்துக்கிட்டாரு. அப்புறம்தான் வழக்க பதிவானது. இதுக்கு எதிர் நடவடிக்கை நிச்சயம் வேணுங்கிறது பரவலான கருத்து.
சம்பவம் 68 டிசம்பர்ல நடந்தது. 69-ல இதுக்கான பதில் நடவடிக்கை என்னங்கிறத பத்தி தாலுகா கமிட்டி முடிவு எடுத்திடுச்சு. வியம் விவாதத்தில இருந்தது. திடமான முடிவு எடுத்தாச்சு என்பதெல்லாம் மேல் மட்டத்துக்குத் தெரியும். அந்த நேரத்தில் நான் முக்கொலை வழக்கில் உள்ள போயிடுறேன். இந்த சந்தர்ப்பத்தில் தான் கட்சியின் மேல் மட்டம் எதிர் நடவடிக்கைக்கு ஆயத்தமானவர்களை எல்லாம் கட்சியிலிருந்து நீக்கிடுச்சு. தாலுக்கா கமிட்டி செகரட்டரி மீனாட்சிசுந்தரம் உட்பட தீவிரமான கட்சித் தோழர்களைக் கட்சி வெளியேத்திருச்ச.


No comments:
Post a Comment