கண்ணாடி காட்டும் உலகம்
இணைமிகு தோழா!
சென்ற கடிதத்தில் உள்ளது உள்ளபடி உலகத்தைப் பார்க்க எந்த சித்தாந்த கண்ணாடியை அணிந்திட வேண்டும் என பார்த்தோம். இந்த கடிதத்தில் அந்தக் கண்ணாடியின் மூலம் அகிலத்தைப் பார்ப்போம்.
இயற்கைவியல், சமூகவியல், பொருளியல், அரசியல், பண்பியல், அறிவியல், அமைப்பியல் ஆகியவற்றையும், இவை ஒவ்வொன்றும் உள்ளடக்கிக் கொண்டிருக்கிற பல்வேறு துறைகளையும், பிரிவுகளையும் ஒட்டு மொத்தமாக தன்னகத்தே ஈர்த்து தழுவிக் கொண்டிருப்பதே உலகம் என கூறுகிறோம்.
இயக்கவியல் சித்தாந்த விஞ்ஞான கண்ணோட்டத்தில், பொருளியல், அரசியல், பண்பியல், அமைப்பியல் ஆகியவற்றை தனது மேல் நோக்கிய வளர்ச்சிக்கு அவசியமாகவே தன்னுள் கொண்டிருக்கிற, மனிதச் சமூக வரலாற்றை ஆய்ந்தறிவதைத்தான் வரலாற்று இருப்பு முதல் வாத சித்தாந்தம் என குறிப்பிடுகிறோம். இது ஒரு சமூக விஞ்ஞானம்.
ஆதி முதலான இருப்பு தனது இயக்கத்திலும் மாற்றத்திலுமாக பல்வேறு படைப்புகளைப் படைத்தது எனவும், அத்தகைய படைப்புக்களின் தொடர்ச்சியாக இறுதியில் மனிதனைப் படைத்தது எனவும், அந்த மனிதன் இயற்கையின் படைப்பாக மட்டுமல்ல, அதன் வாரிசான படைப்பாளியாக உருபெற்றான் எனவும் நாம் அறிவோம்.
விலங்கிலிருந்து தான் மனிதன் தோன்றினான் என விஞ்ஞானம் ருசுப் பித்திருக்கிறது. விலங்காயிருக்கும் போதே மந்தையாயிருந்தது. மந்தை வாழ்வே அதன் வாழ்க்கைக்கு உத்திரவாதம் தந்தது. அவசியமற்றவை தேய்ந்து குறைந்து மறைவதும், அவசியமானவை உருபெற்று வளர்வுற்று, உயர்ந்து நிலை கொள்வதும் தொடர்ந்த பரிணாமத்தின் பகுதியல்லவா?
இந்த முறையில் தான் மந்தையான விலங்கினமும் மனிதக் கும்பலாக உருவெடுத்தது. மனிதக் கும்பல் நாளாவட்டத்தில், காலப்போக்கில் கும்பலான வாழ்வை கூட்டமான வாழ்வாக்கி பல்வேறு வகைகளிலும், அம்சங்களிலும் உறுதிப்படுத்திக் கொள்ளுவதைத்தான் மனிதச் சமூகம் என குறிப்பிடுகிறோம். ஆதிகால மனிதன் தன்னந்தனியனாகப் பிறந்து வாழத் தொடங்கி, பின்னர் கூட்டமாகி விடவில்லை. தொடக்கத்திலேயே மந்தையாயிருந்த நிலையில் தான் மனித கும்பல் பிறப்பெடுத்தது.
மந்தையில் தோன்றிய மனிதன், கும்பலாய், கூட்டமாய் வாழ்ந்த போது, இயற்கை உணர்வில் இனவிருத்தி செய்து பிறந்த போது தனிமனிதனாக பிறந்தாலும் பிறந்ததென்னவோ தனிப் பிறவி தான் என்றாலும், சமூகத்திலிருந்தே ஒரு தாயை அடையாளப்படுத்தி பிறந்தான் என்றாலும், பிறந்து தரை வீழ்ந்த பின் அச்சமூகத்தின் குழந்தையாகவே வளர்ந்தான். ஆகவே நாம் என்ற சூழலிலும், உணர்விலும் தான் மனிதப் பிறப்பிருந்தது. ‘நான்’ என்ற சூழலிலும் உணர்விலும் அவன் பிறப்பெடுக்கவில்லை.
இருப்பு தனது இயக்கத்திலும் மாற்றத்திலும் வடிவம் கொண்டு, வளர்ந்து மறைந்து, புது உருவெடுத்து தொடர்ந்தது. மனிதன் மனிதனாக உருவெடுத்து, மனிதச் சமூகத்தை தொடர்ந்து நிலை நாட்டியது மட்டுமல்ல, விலங்கிலிருந்தும் வேறுபட்ட வாழ்வு கொண்டான். அதற்கு காரணம் ஒரு இயற்கையான விதிமுறை மட்டுமல்ல, நோக்கத் தோடு கூடிய உழைப்பைச் செலுத்த மனிதனால் முடிந்ததாலும் ஆகும். திட்டமிட்ட உழைப்புத்தான் - உழைப்பு என்ற ஆயுதத்தை அவன் இயல்பாகவே பெற்றது தான் அவனை மனிதனாக்கியது.
உழைப்பு ஒவ்வொருவரதும் என்றாலும், அது சமூகத்திற்கு சொந்தமானது. உழைப்பை மூலதனமாகப் பெற்றச் சமூகம், தனது வாழ்க்கைக்கு ஏற்பட்ட தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்ள அவ்வுழைப்பை பயன்படுத்தியது. ஓரு இயற்கைச் சூழலில் சமூகம் பிறப்பெடுத்திருந்ததால், அது தன் தேவைகளை இயற்கையிடமிருந்தே பூர்த்தி செய்து கொள்ள வேண்டி ஏற்பட்டது. அத்தேவைகள் பூர்த்திக்கான முயற்சியில் உழைப்பை செலுத்தும் போது தான் இயற்கையை எதிர்த்து அதனை வென்று அதனைத் தன் ஆளுமைக்குக் கொண்டுவந்து அத்தேவைப் பூர்த்திகளை செய்து கொள்ள முடியும் என்ற கடுமையான பணியை புரிந்து கொண்டான்.
இந்த இயற்கையை எதிர்த்துக் கட்டுப்படுத்தும் கட்டாயப் பணியில் சமூகத்தை ஈடுபடுத்தி, உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டிய சமூகப் பணிகளையும் புரிந்து கொண்டார்கள். பிறப்பெடுப்பிலிருந்து அதுவரை‘ நான்’ என்பதையே அறியாத ‘நாம்’ ஆகவே வாழ்ந்தார்கள்.
தோழா! இதுவரை நான் மனிதனை ‘அவன் - இவன்‘ என்று குறிப்பிட்டு வந்தாலும் ஆண், பெண் உள்ளிட்ட சமூக உறுப்பினர்களின் மொத்தத்தையே அப்படிச் சுட்டிக் காட்டினேன் என்பதை நினைவில் கவனப்படுத்திக் கொள்.
‘கடமை’ என்ற வடிவம் பெற்ற அவ்வுழைப்புத் தான் சமூகத்திற்கு மதிப்பைத் தந்தது. மரியாதையைத் தந்தது. இயற்கை வளப்பங்களைத் தந்தது, உரிமையைத் தந்தது, உறவைத் தந்தது, அறிவைத் தந்தது, அனுபவத்தைத் தந்தது, சிந்தனையையும் மொத்தமாக ஒரு பெட்டகமாக உருமாற்றிக் கொண்டு ‘மானம்‘ என்ற சொல்லுக்கு இலக்கணம் தந்தது. சமூக மானத்தை உணர்ந்த அங்கம் தன்மானியாகவும், தன்மானி சமூக மானத்தைக் காக்கும் மனிதமானியாகவும் ஒவ்வொருவரும் பிணைப்புடன் வாழ்ந்தனர். இது ஆதிகாலச் சமத்துவச் சமூகம் அல்லது தொடக்கக் கால மனிதமானச் சமூகம் ஆகும்.
ஆதிகாலச் சமத்துவச் சமூகத்தில் நிறையவே பலவீனங்கள் இருந்தன. அனைத்து கோணங்களிலும், வகைகளிலும், முறைகளிலும், துறைகளிலும் பலவீனங்கள் மலிந்து கிடந்தன என்றாலும் மனித மானமிருந்தது; தன்மானமிருந்தது; உழைப்பு போராட்ட வடிவம் கொண்டபின், மனித வாழ்வு அதாவது சமூக வாழ்வு போராட்டத்தோடு பிணைக்கப்பட்டது; சமூகம் வாழ போராட்டம்; போராடவே சமூக வாழ்வு என வடிவம் கொண்டது.
இயற்கை வளங்கள் சமூகத்திற்குச் சொந்தம். சமூக உழைப்பு சமூக தேவை பூர்த்திக்காக; தேவைப்பூர்த்திக்கான உழைப்பு உற்பத்திக்கு உழைப்பு; உற்பத்தி துணைபுரிவது உற்பத்தி கருவிகள்; துணை நிற்பது உற்பத்திச் சாதனங்கள்; உற்பத்தி கருவிகளின் வளர்ச்சி சமூக வளர்ச்சி; உற்பத்தியில் மனிதர்களுக்கிடையேயான உறவு உற்பத்தி உறவு ; சமூகம் உற்பத்தியில் ஈடுபடுகிறது; உற்பத்தி பொருள்களை சமூகம் தேவைக்கு பகிர்ந்து கொள்ளுகிறது; உறவால் நெருக்கம் கொண்ட மனிதர்கள் தங்கள் கருத்து பரிமாற்றத்தின் கட்டாயத்தால், சைகைகாட்டி, ஓலமிட்டு, ஓலத்தை ஒழுங்குபடுத்தி, ஒழுங்கோடு உணர்வைக் கலந்து, உணர்வை வகைப்படுத்தி வார்த்தைக்கு வடிவம் தந்து மொழிக்கு உயிரூட்டினர். கருத்து பரிமாற்றத்துக்கு தோன்றிய மொழி கண்டு பிடிப்புகளுக்கும் கருவிகளின் வளர்ச்சிக்கும் ஊக்கமூட்டி, ருசிகரமான உறவு நெருக்கத்துக்கும், ருசுப்பித்தலுக்கான சான்றுகளுக்கும் சாட்சியமானது; சமூக முன்னேற்றத்திலும், மனிதர்களின் வாழ்விலும் உணர்விலும் ஒன்றிக் கலந்துவிட்டது. காலப்போக்கில் பேச்சாய் தொடங்கிய மொழி வரலாற்றுப் போக்கில் இலக்கணக் கட்டமைப்போடு எழுத்து வடிவம் பெற்றது.
பசிக்கு உற்பத்தி, பட்டபாட்டிற்கு உற்பத்தி, பற்றாக்குறை உற்பத்தி, போதுமான உற்பத்தி, பல்முனை உற்பத்திகளும் ஒரே மட்டமல்லாத உற்பத்தி என்ற நிலைகளில் வளர்ச்சி பெற்றுவந்தாலும், ஜீவனத்திற்கு மட்டுமல்ல, இயற்கைச் சூழலில் சமூகம் தன்னை தகவமைத்துக் கொள்ளவும், இயற்கையை புரிந்து கொள்ளவும் அதனை நெருங்கவும், எதிர்க்கவும், வெல்லவும், கட்டுப்படுத்தவும், வேலை வாங்கவுமான கட்டாயக் கடமைகளை சமூகம் உணர அவசியங்கள் நிர்ப்பந்தித்தன.
அறியாமை கோலோச்சிய காலம்; யூக கற்பனைகள் அச்சமூட்டிய காலம்; மடமை உள்நுழைந்து ஆளுமை பெற்ற காலம்; இவற்றை எதிர் கொள்ள முடியாது சமூகம் தவித்த காலம்; ஆனாலும் சமூகம் வாழ்ந்தாக வேண்டிய கட்டாயத்தில் இயற்கைக்கெதிரான உற்பத்தி பணியில் இறங்கித் தீர வேண்டிய காரணங்கள் நிர்ப்பந்தித்தன. இதன் விளைவாக அனுபவம் அறிவையூட்டியது; அறிவு உணர்வையூட்டியது; உணர்வு முயற்சிக்கு துணையானது; முயற்சி தன்னம்பிக்கையூட்டியது; நம்பிக்கை ஊக்கமூட்டியது என்றாலும் அந்நம்பிக்கை அறிவார்ந்த தன்னம்பிக்கை, அறியாமையோடு கூடிய அதீதநம்பிக்கை ஆகிய இரண்டிற்குமிடையே சமூகம் ஊசலாடியது.
இந்த ஊசலாட்டத்தில் உற்பத்திப் பணியை கைவிட முடியாத நிலையில் அச்சம் அறியாமை ஆசைகளால் ஏற்பட்ட மடமைக் களைகளை, பயண காலத்திற்கேற்ப விளக்க வியாக்யானங்களை செய்து சமூகத் தளையாக்கிக் கொண்டு உற்பத்திப் பணி தொடர்ந்தது. சமூக வளர்ச்சியில் ஏற்பட்ட, எதிர்ப்பட்ட, எதிர்நோக்கிய தேவைகளை பூர்த்திப் செய்யும் சமூகப் பணியும் தொடர்ந்தது.
உற்பத்தி சக்திகள், உற்பத்தி உறவுகளினது முரண்பட்டும் முறைப்பட்டுமான வளர்ச்சிப் போக்கில் சில உற்பத்தியின் பங்கீட்டிற்கதிகமான உபரி, சில தேவைகளின் பூர்த்திக்கு வழியற்ற நிலை, அதனை நிர்வகித்து ஈடுகட்டுவதற்கான பணி போன்றவை புதிய உழைப்பு பிரிவினைகளுக்கான அவசியத்தை ஏற்படுத்திற்று. உற்பத்தி பங்கீட்டை ஒழுங்குபடுத்தும் வேலை, வளர்ந்து கொண்டிருக்கும் சமூகத்தை நிர்வகித்து நெறிப்படுத்தும் பணி போன்ற கட்டாயங்களும் உழைப்பு பிரிவினைக்குக் காரணங்களாயின.
இப்படிச் சமூக வளர்ச்சி முன்னோக்கிப் பயணித்தது. இவ்வளர்ச்சியில் உற்பத்திச் சக்திகள் தான் தீர்மானகரமான சக்தி என்றாலும் உற்பத்தி சக்திகளும் உற்பத்தி உறவுகளும் முரண்பட்டும் உடன்பட்டுமான இசைவில் வளர்ச்சிக்கு துணை புரிய வேண்டும். அத்தகைய துணையாயிருக்க முடியாது, உற்பத்தி சக்திகளின் வீச்சுக்கும் விரிவுக்கும் இணைக்கப்பட முடியாத நிலை மட்டுமல்ல, அதன் வளர்ச்சிக்கு முட்டுக்கட்டைப் போட்டு தேக்கவும், உற்பத்தி உறவு முனையும் கட்டம் ஏற்படும். ஆனால் வளர்ச்சி அழிக்கப்பட முடியாததாகையால் உற்பத்தி சக்திகள் அத்தடையைத் தகர்த்தெறிந்து தனக்கிசைவான வேறொரு உற்பத்தி உறவுகளுடன் வளர்ச்சிப் பயணத்தை தொடரும் கட்டாயத்திற்கு தள்ளப்படுகிறது. இதுதான் ஆதி சமத்துவச் சமூகத்திலும் நடந்தது.
‘வரலாற்று இருப்பு முதல் வாதம்’ என்ற விஞ்ஞானப்பார்வை ஆதிச்சமத்துவச் சமுதாயம் பற்றி ஒன்றை தெளிவாக்கிவிட்டது. சமுதாயம், உற்பத்தியை அடிப்படையாகக் கொண்ட பொருளாதார அஸ்திவாரத்தின் மீதுதான் கட்டப்பட்டிருக்கிறது. அந்த அஸ்திவார கட்டமைப்பில் ஏற்படுகிற மாற்றங்கள் தான் சமூக வடிவில் பிரதிபலிக்கின்றன.
ஆதி சமத்துவச் சமுதாயம், அதன் வளர்ச்சிப் போக்கில் தடைபடாது தொடர வேண்டிய அவசியத்திலும்; அறியாமை, அச்சம், ஆசை, யூகம் போன்றவை தலைதூக்கிய நிலையிலும், விஞ்ஞானம், அனுபவம், சித்தாந்தம் போன்றவை வளர்ச்சியற்ற நிலையிலும், பேதப்பட்டச் சமூகமாக பிளவுபட வேண்டிய சூழ்நிலை உருவாயிற்று. சமத்துவச் சமுதாயம் வர்க்கச் சமூகமாக பிளவுபட்டது; பிளவுபட்ட சமுதாயத்தில் அடிப்படையாக முரண்பட்ட, பகைபட்ட வர்க்கங்களும், வர்க்கத்தட்டுக்களும் தோன்றின; சமத்துவச் சமூகத்தில் பிணைப்பு கொண்டிருந்த உரிமை, கடமை, மரியாதை, மதிப்பு, அனுபவம், அறிவு, உறவு, உடமை ஆகியவற்றின் ஒருமை சிதறடிக்கப்பட்டு சின்னாபின்னமாக்கப்பட்டது. வர்க்க போராட்டத்தின் வரலாறே சமூகத்தின் வரலாயிற்று.
உபரி உற்பத்தியும், உற்பத்திக் கருவி சாதனங்களும், உற்பத்தி பொருள்களும் சமூகத்தின் பெரும் திரளான பகுதியினரிடமிருந்து பறிக்கப்பட்டு, சிறுகுழு - கும்பலுக்குச் சொந்தமாக்கப்பட்டது. சமூக உடமைகள் தனி உடமையாக உருவெடுத்தன; ஆண் ஆதிக்கம் பிறப்பெடுத்தது; தனி உடமையை பாதுகாக்க ஆதிக்கம், ஆட்சி, அதிகாரம், ஆளுமை தேவைப்பட்டது. உடமைக்கும்பல் வெகுமக்கள் மீது ஆளுமை செலுத்தும் வர்க்கமாக தன்னை அமைத்துக் கொண்டது; சமூகத்தின் மேல்கட்டுமானத்தை உருவாக்கி, ஆதிக்க, அதிகார, ஆளுமை கொண்டது. வெகுமக்கள் திரளோ உழைப்பை மட்டுமே கொண்டு நின்றது; அச்சுரண்டல் கூட்டம், அடிமையாய் உழைப்பை தானமாக்கி, அல்லது விற்று ஜீவிக்க வேண்டிய கட்டாயத்தை ஏற்படுத்தி உழைப்பைச் சாக்கிட்டு உயிரைப் பறித்தோ அல்லது உழைப்பை கஞ்ச பஞ்ச விலை கொடுத்து பறித்தோ உழைக்கும் மக்களை ஓட்டாண்டியாக்கி ஒடுக்கிப்போட்டது.
சொந்த சுகபோகத்திற்காக சுரண்டல் கூட்டம் வெகுமக்களை அடக்க அரசு தேவைப்பட்டது; போராட்ட எழுச்சியை ஒடுக்க அரசு எந்திரங்கள் தேவைப்பட்டன; மக்களின் உணர்வை மழுங்கடிக்க மதங்கள் தேவைப்பட்டன; மக்களுக்கு எதிரான பாதகத்தை பாதுகாத்துக் கொள்ளவும், அநியாய அட்டூழியங்களை நியாயப்படுத்திக் கொள்ளவும் ஊடகங்களும், இலக்கியங்களும், பிரச்சாரங்களும் வேண்டியிருந்தன. தனி உடமை உழைப்பு உற்பத்தி கருவி சாதனம் இவற்றின் விளைபயன் ஆகிய மொத்தத்தையும் தனக்கே உடமையாக்கிடவும், பெண்ணுரிமை பறிக்கப்படவும் குடும்ப அமைப்பு அவசியப்பட்டது. படைப்பால், அனுபோகத்தால் ஒன்றிய உறவால் கொண்டிருந்த கலாச்சாரம் அழிக்கப்பட்டு மக்கள் மீது மயக்க, ரசிக, மடமை அடிமை கலாச்சாரம் திணிக்கப்பட்டது. ஆக மொத்தத்தில் இத்துணைக்குமான நச்சறிகுரி ஆதி சமத்துவச் சமூகத்தின் இறுதிக் கட்டத்தில் தென்பட்டது. இந்தச் சமூகத்தின் பலமும் பலவீனங்களும், நிலையானதும் நிலையற்றதுமான அம்சங்களுக்கிடையேயான போட்டா போட்டி தொடர் நிகழ்ச்சியாக தொடர்ந்தது.
இனிய தோழா! வரலாற்று இருப்பு முதல்வாதம் என்ற கண்ணாடி நுண்நோக்கியாக உலகச் சமூகங்களின் பரந்துபட்ட தோற்றத்தையும், தொடக்க கால சமத்துவச் சமூகங்களையும் படைப்பாளிகளுக்கு காட்டியதை கூர்ந்து கவனித்தாயா? அக்கண்ணாடி உள்நோக்கியாக காட்டியிருக்கும் இடைக்கால வர்க்க சமூகங்கள் பற்றியும், அது தொலைநோக்கியாக காட்டியிருக்கும் இறுதியாக அமைந்து தொடரும் விஞ்ஞானச் சமூகம் பற்றியும் இங்கு எழுத இடமில்லை; ஆனால் கண்ணாடி உன் கையில் இருக்கிறது; அவசரமின்றி அணிந்து கொண்டு பாரேன்.
Tuesday, January 18, 2011
உலகைக் காட்டும் கண்ணாடி
உலகைக் காட்டும் கண்ணாடி
இணைமிகு தோழா!
கடந்த இரு கடிதங்களில் தத்துவம் பற்றி ஓரளவு - என் அறிவுக்கு பட்ட அளவு - தொட்டுப் பார்த்தோம். இந்த கடிதத்தில் இன்னும் கொஞ்சம் தலை நுழைப்போம்.
சித்தாந்தம் என்பது அடிப்படை, போதனை, கோட்பாடு, படிப்பினை நிரூபணம் ஆகிய அம்சங்களை உள்ளடக்கிக் கொண்டிருப்பது. வேறு வார்த்தைகளில் கூறினால், தத்துவம் என்பது உண்மை, வழிகாட்டி, வழிநடத்தி, செயல்பாட்டு சாட்சியம் ஆகிய அம்சங்களை இணைவாக பிணைத்துக் கொண்டிருக்கிறது என்பதாகும்.
சித்தாந்தத்திற்கு எதிரான வேதாந்தமோ, தத்துவத்திற்கு நேர் பகையான அம்சங்களை உள்ளடக்கிக் கொண்டு பவனி புறப்பட்டிருக்கிறது. அதாவது பொய்மை, புரட்டு, புளுகு, மடமை, கற்பனை ஆகியவற்றில் முழுக்க முழுக்க புறையோடிக் கிடக்கிறது. வேறு வார்த்தைகளில் கூறினால், அச்சம் அறியாமை, தனிநலம், பேராசை, புராண இதிகாசம், மூட நம்பிக்கை, மூட பழக்க வழக்கம், யூகம் விரக்தி போன்ற சகதிகளில் சங்கமித்துக் கொண்டுவிட்டது.
சித்தாந்தம் செயலுக்கு உந்துசக்தி, வாழ்வுக்கு ஊக்கமூட்டி. வேதாந்தம் விரக்திக்கு இருப்பிடம். வேறுலக வாழ்வுக்கு பிறப்பிடம்.
முதலில் சித்தாந்தம் பற்றிய ஒரு குறிப்பைப் பார்ப்போம். ‘முரண் வாழ் இருப்பு முதல் வாதம்’. இது விஞ்ஞான சித்தாந்தம். ‘இருப்பு’ இருந்து கொண்டேயிருக்கிறது. இது யாராலும் படைக்கப்பட்டதல்ல, அப்படிப் படைக்கப்படாததால் தான் ‘இருப்பை’ யாராலும் அழிக்க முடிவதில்லை; இருப்புதான் எல்லா இருப்பிற்கும் அடிப்படை; இருப்பின்றி படைப்பில்லை; வடிவில்லை.
இவ்விருப்பு, முரணில் வாழ்வதால் போராட்டத்தில் ஜீவிக்கிறது. போராட்டத்தின் விளைவான இயக்கத்தில், தோற்றத்தில், மாற்றத்தில், மறு உருவேற்றத்தில் தானேயாகி நிற்கிறது. இவ்விருப்புத்தான் ஆதி முதலும் அந்தமும் என விளக்குவது தான் உண்மை சித்தாந்தம். இந்த சித்தாந்தம் எந்தவொன்றின் வளர்ச்சிப் போக்கிற்குமான அடிப்படை வளர்ச்சி விதிகளை விவரிக்கிறது. தெளிவாக்குகிறது.
அடிப்படை வளர்ச்சி விதிகள்தான், ஒன்றின் வரலாற்றைக் கண்டறிவதற்குச் சாதனமாகும். கடந்த நிகழ், எதிர்காலங்களில் ஒன்றின் வளர்ச்சிப் போக்கின் மொத்தமே அவ்வொன்றின் வரலாறாகிறது. கடந்த கால பரிணாம பாய்ச்சல்கள் நிகழ்காலத்தால் முன்னோக்கி உந்தப்பட்டு, எதிர்கால பரிணாம பாய்ச்சல்களாகிய படைக்கும் கட்டங்களை உள்ளடக்கிக் கொண்டிருப்பது அதன் வரலாறு. அடிப்படை வளர்ச்சி விதிகள் எவை?
ஒன்று, ‘உடன்படுதலும் முரண்படுதலும் அல்லது ஒன்றிடுதலும் போராடுதலும்’ என்ற விதி. இரண்டு, ‘பரிணாம மாற்றம், பண்பு மாற்றத்தில் முடியும் அல்லது இயல்பு மாற்றம் இயைபு மாற்றத்தில் முடியும்’ என்ற விதி. மூன்று, ‘அழித்தமர்வின் அழித்தமர்வு அல்லது இருத்தல் மறுத்தலின் இருத்தல் மறுப்பு’ என்ற விதி. இவ்விதிகளைப் பற்றியும் மிக மிகச் சுருக்கமாக புரிந்து கொள்வோம்.
முதலாவது உடன்படுதலும் முரண்படுதலும் என்ற விதி. நேர்மறை எதிர்மறை இணைவில் வடிவம் பெற்றுள்ள இருப்பு அல்லது படைப்பு, நேர்மறை எதிர்மறை முரண்பாட்டில் போரிடுவதும், அதனில் காணும் உடன்பாட்டால் ஒன்றுபடுதலும் அதன் தொடர்ச்சியான இயக்கம் தான் வளர்ச்சிக்கான உத்வேகமும், மாற்றமும் ஆகும். நேர்மறை முன்நோக்கிச் செல்லும் ஆற்றல் கொண்டது. எதிர்மறை அதனை தடுக்கும், தேக்கும் சக்தியாகும். இவ்விரண்டின் இணைவில் இருப்பு அல்லது படைப்பு இருப்பதால், நேர்மறை எதிர்மறையை வென்று இசைவோடு முன்நோக்கி செல்லுகிறது. சமயங்களில் அவசியமாக நேர்மறை முன்னேறிச் செல்ல முடியாது. பலமான தடையாக எதிர்மறை அமையுமானால், நேர்மறை அத்தடையை உடைத்தெறிந்து தனக்கு பொருத்தமான வேறொரு எதிர்மறையுடன் இணக்கம் பெற்று முன் செல்லும்.
இரண்டாவது பரிமாணாம மாற்றம் பண்பு மாற்றத்தில் முடியும் என்ற விதி. எந்தவொன்றின் அளவில் ஏற்படுகிற மாற்றங்கள், இறுதியாக அந்தவொன்றில் குணமாற்றத்தில் முடியும். அப்படி பரிணாம மாற்றம், பாய்ச்சலில் முடிகிற போது, அம்மாற்றத்திற்குள்ளான அவ்விருப்பு அல்லது படைப்பு, பழயதினின்று அடிப்படையாக மாறுபட்ட புதியதொன்றாகவே இருக்கும். மீண்டும் பரிணாமம் தொடரும்.
மூன்றாவது, அழித்தமர்வின் அழித்தமர்வு என்ற விதி. காலம் கடந்த ஒன்றை அப்புறப்படுத்தி காலத்தில் ஒன்று அவ்விடத்தில் நிலை கொள்வது தவிர்க்க முடியாதது. எதிர்காலத்தில் அவ்வொன்றும் அவசியத்தால் மற்றொன்றால் அப்புறப்படுத்தப்படக் கூடியதாகவே இருக்கும்.
இம்மூன்று அடிப்படையான விதிகளின் ஒழுங்கில் தான் வளர்ச்சிப் போக்குகள் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. இவ்வொழுங்கு விதியை ஒழுங்காக கடைப்பிடிப்பதன் மூலமே இயக்கம் மாற்றத்தை உருவாக்கும் போதே மாற்றங்கொண்டு முன் செல்லுவதே வளர்ச்சிப் போக்கு தொடர்வதாகும். சில நேரங்களில் வளர்ச்சிக்கு முற்றான சீர்குலைவை ஏற்படுத்தும் முட்டுக்கட்டை எதிர்படும் அல்லது எதிர்நோக்கும் போது அத்தடையை உடைத்தெறிந்து முன் செல்ல விதி மீறல் செய்து விதி ஒழுங்கை பாதுகாப்பதும் விதிமுறையேயாகும்.
இவ்விதி ஒழுங்கை காப்பதற்கான விதி மீறல் என்பது வளர்ச்சிப் போக்கு ஒருகாலும் பின்னோக்கிச் செல்வதில்லை. முன்னோக்கி மட்டுமே செல்லும் தன்மை கொண்டது என்பதற்கு சாட்சியமாகி விடுகிறது. எந்த ஒன்றின் முன்னோக்கிய வளர்ச்சியை தேக்கலாம்-தடுக்கலாம்-தாமதப்படுத்தலாம்-குறிப்பிட்ட காலம் முட்டுக் கட்டைப் போடலாம். என்றாலும் வளர்ச்சிக் போக்கை முற்றாக அழித்து விடவோ, அதனை பின்னோக்கி செலுத்திவிடவோ ஒருகாலும் முடியாது.
வளர்ச்சிப் போக்கு செங்குத்தாக முன் செல்லுவதுமில்லை, சக்கர வட்டத்தில் சுழன்று கொண்டிருப்பதுமில்லை. மாறாக வளர்ச்சி வளைவாக. ஆனால் வட்டப் பாதையல்லாத, முன்னோக்கி, ஆனால் நேர் செங்குத்தாக வின்றி, துள்ளிப் பாய்ந்து , ஆனால் மையத்தை விட்டு தூர விலகி விடாமல் புரிவில் வடிவிலான முன்னேற்றம் கொண்டதே வளர்ச்சி. மிகச் சிக்கலான கரடுமுரடான பாதைகளில் தடுத்தழிக்கப்படாது, நெளிவு சுழிவோடு ஒரு ஒழுங்கில் முன்னோக்கிப் பயணிப்பது தான் வளர்ச்சியாகும்.
மேலே கண்ட இந்த வளர்ச்சி விதிகளை விளக்குவதுதான் தத்துவத்தின் தத்துவம். ‘முரண்வாழ் இருப்பு முதல் வாதம்’ என்ற சித்தாந்தம். இதுதான் மார்க்ஸீயம். இதனை நிரூபித்துக் கொண்டிருப்பது தான் விஞ்ஞானம். இதனை உறுதிப்படுத்திக் கொண்டிருப்பவை தான் விஞ்ஞான கண்டுபிடிப்புகள்.
அடிப்படை வளர்ச்சி விதிகளை பிரயோகப்படுத்தி இப்பேரண்டத்தைக் கண்டறிய சில விஞ்ஞான, வழிநடத்தும் அளவுகோல்களையும் இவ்விஞ்ஞான தத்துவம் முன்வைத்தது. எந்த ஒன்றையும் அல்லது எந்தவொரு நிகழ்வுப் போக்கையும் சரியாக கண்டறிந்து உண்மையை வெளிப்படுத்த அவ்விஞ்ஞான அளவுகோல்கள் அவசியமாயிருந்தது. அவை தான்
1. ஒன்றின் தனித்துவமும் பொதுமையும்.
2. ஒன்றின் அகக் கட்டமைப்பும் வடிவமும்
3. ஒன்றின் அகதன்மையும் புறதோற்றமும்
4. ஒன்றின் காரணமும், காரிய வெளிப்பாடும்.
5. ஒன்றின் கட்டாயமும் திடீர் நிகழ்வும்.
6. ஒன்றின் எதார்த்தமும் சாத்தியமும்.
மேற்கண்டவை ஒவ்வொன்றிலும், அமைந்துள்ள கூட்டிணைவு ஒன்றுடன் ஒன்று பிண்ணிப் பினைந்தவை. பிரிக்கப்பட முடியாதவை, இறுக்கமான தொடர்புள்ளவை. இதனை மொத்தமாக போட்டு குழப்பிக் கொள்வதோ, ஒன்றை விட்டு ஒன்றை தொடர்பறுத்து பார்க்க முனைவதோ, ஒவ்வொன்றுள்ளும் தனித்து உட்புகுந்து பார்த்திட தவறுவதோ, ஒன்றைப் பற்றிய முபமையான கண்டறிவை பெற்றிட முடியாது.
இதனை ஒவ்வொன்றாக எடுத்துக் கொண்டு இக்கடிதத்தில் நாம் உள் நுழையப் போவதில்லை. அவகாசமும் இல்லை. அதற்காக இத்தோடு விட்டு விடாதே. சுயகல்வி, சுயமுயற்சி, சுயபயிற்சி உன்னோடு ஒட்டிக் கிடக்கும் போது இதனை உள் நுழைந்தறிவதில் உனக்கேது தடை? இந்த விஞ்ஞான அளவுகோல்களை பயன்படுத்தும் போது ஒவ்வொரு அசைவிலும், நாம் அடிக்கடி பேசிக் கொண்டிருப்போமே விஞ்ஞான வினாக்கள் அதனை எழுப்பி விடை காண்பது தான் முக்கியம். யார்? ஏன்? என்ன? எது? எங்கே? எப்படி? எப்போது? எவ்வளவு? ஏதற்காக? என்பவை தானே ஞானக் கேள்விகள்.
மேலே சொன்னவைகளையெல்லாம் மொத்தமாக உள்ளடக்கிக் கொண்டிருக்கிற முரண்வாழ் இருப்பு முதல்வாத சித்தாந்த வழியில் இந்த பேரண்டத்தில் நாம் அறிய முடியாதது எதுவுமில்லை. ஆனால் அறிய வேண்டியதிருக்கலாம். இவ்விஞ்ஞான சித்தாந்தம் தான் செயலுக்கு வழிகாட்டியாயிருப்பதால் நாம் செய்ய முடியாதது எதுவுமி ருக்க மடியாது. ஆனால் செய்தாக வேண்டியது இருக்கலாம்.
அன்பு தோழா! சித்தாந்தங்கள் பற்றி சொல்லும் போது வார்த்தைப் பிரயோகங்களை முறையாக வரையறுத்துக் கொள்ள வேண்டிய அவசியத்தால் உனக்கு கொஞ்சம் எரிச்சல் தட்டுகிறதா? எரிச்சல் தட்டினாலும் பரவாயில்லை, தட்டுக்கெட்டு தடுமாறி தடம் மாறிவிடக் கூடாதல்லவா?
இந்த விஞ்ஞான சித்தாந்தம் தான் அறிவுக்கு ஆழ் ஊற்று. அறிதலுக்கு நுண்சுரப்பி, ஆற்றலுக்கு வலுவூட்டி, செயலுக்கு துணிவூட்டி, மொத்தத்தில் வழிகாட்டி. மற்றொன்றையும் மறந்துவிடாதே. இந்த விஞ்ஞான சித்தாந்தத்தை, விஞ்ஞான கோட்பாட்டை அதாவது வழிகாட்டியையும், வழிநடத்தியையும் ஒவ்வொரு நொடியும் செழுமையூட்டி, நிரூபணம் செய்து கொண்டிருப்பதில் விஞ்ஞான கண்டுபிடிப்புக்கள் முதன்மை வகித்தாலும், படைப்பாளி மனிதன் செயல்படும் போது கிடைக்கும் படிப்பினைகள் இதனை செழுமைப்படுத்திக் கொண்டிருக்கின்றன. எனவே தான் சித்தாந்தம் வழிகாட்டியாக, கோட்பாடுகள் வழிநடத்தியாக, படிப்பினைகள் செயல்படுத்தியாக, மனித சமூகத்தை இயற்கையை வெல்லும் போர்வீரர்களாகவும், புது உலகைப் படைத்து பாதுகாத்து வளர்க்கும் படைப்பாளியாகவும் ஆக்கிக் கொண்டிருக்கின்றன.
இந்த விஞ்ஞான தத்துவத்திற்கு பகை சித்தாந்தம்தான். ஆத்மீக உணர்ச்சி முதல் வாதம் என்ற வேதாந்தம். அதனைப் பற்றி மிக விரிவாக இங்கே விளக்கிடப் போவதில்லை என்றாலும் ஒரு சில குறிப்பிட்ட அம்சங்களைப் பற்றி சொல்லித் தானேயாக வேண்டும்.
பேரண்டத்தில் அனைத்திற்கும், ‘ஆதி முதல்’ ஆண்டவன் என்கிறது வேதாந்தம், அவனால் தான் பேரண்டமும் அதனிலுள்ள அனைத்தும் படைக்கப்பட்டது. அவ்வொவ்வொன்றையும் அசைவுக்கு அசைவு அவனே இயக்குகிறான். அவை இயங்குவதற்கும் அவனே விதியை வகுத்து விட்டான். அவ்விதிப்படி அவை தோன்றும், வாழும், அழியும். மனிதனை அவனே படைத்தான். ஆத்மாவை படைத்து மனிதனுள் புகுத்தி அவனை இயங்க விட்டான். அந்த இயக்கத்திற்கு அவன் தலையில் விதியை எழுதி வைத்தான். தலை விதிப்படிதான் ஒவ்வொரு மனித வாழ்வும் நடந்து கொண்டிருக்கிறது. ஆத்மா அகன்ற உடல் பிரேதம்; உடலை விட்டு பிரியும் ஆத்மா, மேலுலகில் விசாரணைக் குட்படுத்தப்பட்டு சொர்க்கம் அல்லது நரக தண்டனை அளிக்கப்படும். சொர்க்க வாழ்வு, ஆத்மாவுக்கு சுகபோக வாழ்வு. தண்டனை பெற்ற ஆத்மா நரகம் அனுபவித்து பின் முன்வினைப் பயனை அனுபவிக்க, மீண்டும் மனித உடலில் புகுத்தப்பட்டு மறுபிறவியளிக்கப் படுமாம். இதற்கெல்லாம் ஆதாரங்கள் உண்டா? சாட்சியமுண்டா? என கேட்டுவிடக் கூடாது.
ஆண்டவன் அரூபி. ஆனால் பக்தர்களுக்கு காட்சியளிப்பான். இறைவன் ஏகாந்தன் ஆனால் எல்லாவற்றையும் படைத்தவன். கடவுள் அனைத்தையும் கடந்தவன். ஆனால் அனைத்திலும் நிறைந்தவன். அவனுக்கு காதில்லை-கேட்பான், வாயில்லை-பேசுவான், கண்ணில்லை-பார்ப்பான், நாக்கில்லை- ருசிப்பான், கரம் இல்லை-படைப்பான், காலில்லை- ஈரேழுலகமும் சுற்றி வருவான், உடலில்லை-உணர்வான், இந்த எதிர்புதிர் நிலை கொண்டு ஒன்றிருக்கிறது என்றால் ஏற்க கூடியதா? பரலோகத்தில் அவன் அரசாட்சி, இகலோகத்தில் அவன் திருவிளையாடல், உருவமேயற்றவன், ஆனால் ஆனாக அடையாளம் காட்டப்படுகிறான்.
இதுவெல்லாம் நம்பக் கூடியதா? அணுவிலும் இருப்பானாம் ஆனால் யாருக்கும் அகப்படமாட்டானாம். இவன் ஞானிகளை மட்டும் சந்திக்கின்றானாம். விஞ்ஞானிகளைக் கண்டால் தலைமறைவாகி விடுவானாம்.
ஆத்மாவை நம்புகிறவர்கள் ஆன்மீகவாதிகள். இருக்கிற உலகத்தை ஏற்றுக் கொள்ளுகிறவர்கள் உலகாயத வாதிகள். இதுதானே உண்மை.
இந்த ஆன்மீக வாதிகளுக்கு வேதாந்தம் வழிகாட்டி. ஆத்மா வழிநடத்தி, மூட நம்பிக்கை செயல்படுத்தி, அஞ்ஞான ஆளமைக்குட்பட்டவர்கள். ஆக்கலும் இயக்கலும், வளர்த்தலும், காத்தலும், அழித்தலுமாய் இருப்பவன் ஆண்டவனே என்ற அஞ்ஞானத்தின் மொத்த தொகுப்பாய் வேதாந்தம் இருக்கிற போது அறிவுக்கும், ஆய்வுக்கும், ஆய்வின் அளவுகோல்களுக்கும் என்னதான் வேலை இருக்க முடியும். சரித்திரமாக புராணங்கள், சட்டமாக சாஸ்திரங்கள், கட்டுப்படுத்த ஆச்சாரம், கடைபிடிக்க அனுஷ்டானம் என மூளை பறிப்பு செய்தபின் சிந்தனைக்கு இடமுண்டா? இத்தனைக்குப் பிறகும் இறைவன் இருக்கின்றான் என கூற முடியுமா? நிச்சயம் முடியாது, கடவுள் இல்லை, இல்லவே இல்லை என்பது உண்மை கண்ட பெரியாரின் கூற்றல்லவா?
கடவுள் இருக்கிறார் என்பதை எங்களால் நிரூபிக்க முடியவில்லைதான். ஆனால் அவர் இல்லை என உங்களால் நிரூபிக்க முடியுமா? என எதிர்கேள்வி போட்டு நம்மை மடக்க முனைகிறார்கள்.
பரிதாபத்திற்குரியவர்கள். இருப்பு இல்லாத வேறெதுவுமில்லை, இருப்பைத் தவிர வேறொன்றில்லை, இருப்புக்கு அப்பாலும் எதுவுமில்லை. இருப்பதெல்லாம் இருப்பு மட்டுமே என்பது நிரூபிக்கப்பட்டபின், அதுவல்லாத ஆண்டவனும் இல்லை தானே? அப்படியானால் ஆண்டவன் தோன்றியதெப்படி? இதனை வேதாந்தத்தால் விளக்க திராணியிருக்காது. ஆனால் ‘முரண்வாழ் இருப்பு முதல் வாத’த்தால் விளக்கிட முடியும்.
விஞ்ஞான அறிவும், விஞ்ஞான கண்டுபிடிப்புகளும் தோன்றி வளராத தொடக்க காலத்தில், மனிதனுக்கு முன் தோன்றிய இயற்கை மற்றும் இதர நிகழ்வுகளுக்கும், அதனையொட்டிய பல்வேறு பிரச்சினைகளின் தீர்வுக்கும், சோதனை சவால்களின் சந்திப்பிற்கும் விடை காண முடியாது தவித்த நேரத்தில் அவனுக்கு ஏற்பட்ட அச்சம், அறியாமை, ஆசையின் விளைவால் மனிதனால் ஆண்டவன் படைக்கப்பட்டான்.
அப்படி, தானே கற்பனையில் படைத்துக் கொண்ட ஆண்டவனை, அண்டசராசரம் அனைத்துக்கும் மீறிய சக்தி கொண்டவனாக சித்தரித்துக் கொண்டான். ஆனால் அவன் உண்மையிலேயே தான் படைத்துக் கொண்ட சமூகத்தின் ஆற்றல், வலிவு அனைத்தையும் விஞ்சியது என்பதை அறிந்தானில்லை.
வாழ்வில் எதிர்பட்ட சோதனைகள், எதிர் நோக்கிய சவால்களுக்கு தானே கற்பித்துக் கொண்ட ஆண்டவனிடம் கோரிக்கை வைத்து வழிபட்டான். அதற்கு இசைவாக சடங்கு சன்மானம் சம்பிரதாயங்களை வகுத்துக் கொண்டான்.
அந்த கால கட்டத்தில் கட்டாயத்தை முன்னிட்டு மனிதர்களிடையே தோன்றிய மார்க்கியவாதிகள் தங்கள் அறிதலுக்கும் புரிதலுக்குமான வழிகாட்டுதலுக்காக மனிதக் கூட்டத்தின் கட்டுப்பாட்டை நிலை நிறுத்த இல்லாததென தெரிந்தும் இறைவனை துணைக்கழைத்துக் கொண்டனர்.
ஆண்டவன் வழிபாடு, சடங்கு சன்மான சம்பிரதாயம் ஆகியவற்றின் மொத்தமும் மார்க்கவாதிகளின் போதனைகளும் மார்க்கங்களும் ஒன்றுடன் ஒன்று கலப்படம் செய்யப்பட்டு மதமாக ‘உரு’ கொடுக்கப்பட்டது. அந்த மதம் வேத சாஸ்திர புராணங் களால் போதையேற்றப்பட்டு பக்தி, பிரார்த்தனை, வேண்டுதல், பரிகாரம் என மயக்கமூட்டும் கருவியாக பயன்படுத்தப்பட்டது. நாளாவட்டத்தில் அரசியலுக்கு, ஆட்சியதிகாரத்திற்கு ஆதரவாக ஆட்களை திரட்டும், மக்களை கவரும் மாயவலையாகவும், வெகுமக்கள் திரளை வெறுமையாக்கிடவும், உழைக்கும் மக்களை உறுஞ்சி அடிமையாக்கிடவும், உடமையாளர்களுக்கு கவசமாகவும் வளர்க்கப்பட்டது. இது பற்றியெல்லாம் வேறொரு சந்தர்ப்பத்தில் விரிவாகப் பார்க்கலாம்.
ஆதிக்க வெறிகொண்ட சுகபோகிகளான சுரண்டல் கூட்டம், கூலிக்கு ஆள்பிடித்து வேதாந்தத்தையும் ஒரு சித்தாந்தமாக வியாக்கியானம் செய்யத் துடித்தது. ஆத்மா தான் மனிதனுக்கு உணர்ச்சி ஊட்டுகிறது. உணர்ச்சியின் மூலம்தான் அவனால் உலகை காண முடிகிறது. உணர்ச்சி இல்லையேல் உலகு இல்லை. இல்லாத மாயா உலகை இருப்பதாக மாயை காட்டுவது உணர்ச்சி தான், ஆத்மா தான், என எதார்த்தத்தை தலைகீழ் புரட்டி தத்துவம் என்பது வேதாந்தமே என விளக்கம் தருகின்றனர்.
இப்படிக் கூறுவதற்கு சான்றுகள் இல்லை. சாட்சியமில்லை. இதவல்லாத கண் மூடி நம்பிக்கை இருந்தால் தான் அதை கண்டிட முடியுமென்றால் அது மூட நம்பிக்கை தானே? வேதாந்தத்தை மூடத்தனம் என கூறிட சித்தாந்தத்திடம் ஆதாரம் உண்டா? என வினவுகிறார்கள்.
உலகம் இருப்பதால் உணர்ச்சி தோன்றுகிறதா? அல்லது உணர்ச்சி இருப்பதால் உலகம் இருப்பதாக தெரிகிறதா? இதுதானே கேள்வி. உலகம் இருப்பது உண்மை. அது உணர்ச்சிக்கு புறத்தே இருக்கிறது.
புறத்திலிருக்கும் உலகம் புலன் உறுப்புகளில் ஏற்படுத்தும் தாக்கம் உணர்ச்சி. நிஜம் தான் நிழலாக பிரதிபலிக்கிறது. நிழல் நிஜத்தை தோற்றுவிப்பதில்லை, நிஜம் எப்போதும் நிரூபனத்திற்குட்பட்டது. ஆதிமுதல்‘ இருப்பே’ நிஜம், இருப்பின் பிம்பமே உணர்ச்சி, அதன் விளைவே எண்ணம். அதன் வளர்ச்சியே கருத்து. கருத்து சிந்தனை உலையில் வார்க்கப்பட்டு செயலாகவும், அறிவாகவும் வடிவம் பெறுகிறது. அறிவால் செழுமைப்படுத்தப்பட்ட உணர்ச்சி உணர்வாகிறது, செழுமைப்படுத்தப்படாத உணர்ச்சியின் வளர்ச்சி வெறியாகிறது.
முரண் வாழ் இருப்பு முதல் வாதம் பற்றிய இந்த குறிப்பு இப்போதைக்கு போதுமானது, இந்த சித்தாந்த கண்ணாடியில் மனித சரித்திரத்தைப் பார்க்க வேண்டுமல்லவா?

நமது சித்தாந்தம் பெரியாரீயம்
இணைமிகு தோழா!
நாம் ஏற்றுக் கொண்டிருக்கும் தத்துவம் பெரியாரியம். நமது சித்தாந்தப் பார்வை பெரியாரீயமே. பெரியாரீயம் என நாம் உச்சரிக்கும் வார்த்தையின் இலக்கண வரையரை, இந்தியத் துணை கண்டச் சூழலில், ‘செழுமைப்படுத்தப்பட்ட மார்க்ஸீயமே பெரியாரீயம்’ என்பதாகும்.
‘இயக்கவியல் பொருள் முதல் வாத’மும், அவ்வியக்கவியல் பொருள் முதல் வாதத்தைப் பிரயோகித்து பிரபஞ்ச தோற்றம் வளர்ச்சி, நிகழ்வுப் போக்குகள் பற்றி ஆய்ந்து வெளிப்படுத்திய ‘வரலாற்று பொருள் முதல் வாத’மும் இணைந்த சித்தாந்தமே மார்க்ஸீயம்.
‘வரலாற்று பொருள் முதல் வாத’ப் பார்வையில் சமூகப் புரட்சியை கண்டறிய முற்பட்ட மார்க்ஸ், அன்றைய வரலாற்றுக் கட்டத்தில் வளர்ச்சி மட்டத்தில் உயர்ந்திருந்த ஆங்கில பொருளாதாரத்தையும், பிரன்ஞ்ச் சோஷலிஸத்தையும், ஜெர்மன் தத்துவத்தையும் ஆய்வுக்கு எடுத்துக் கொண்டார்.
உலக வரலாற்றில் கருத்து முதல் வாதத்திலிருந்து மயிரிழைத் தொடர்பையும் முற்றாகத் துண்டித்துக் கொண்டு பாய்ச்சல் வேகத்தில் புதிய வடிவம் பெற்ற புரட்சி சித்தாந்தமே இயக்கவியல் சித்தாந்தம். இந்த பெரும்படைப்பின் கர்த்தாதான் காரல்மார்க்ஸ். புதிய படைப்பின் அவசியத்திற்கான காலக்கட்டத்தின் கட்டாயத்தில் தனது பாத்திரத்தின் பங்கை குறையும் குறைவுமின்றி செலுத்திய படைப்பாளியாக மார்க்ஸ் இருந்தார். எனவே அதனை மார்க்ஸீயம் என்கிறோம்; இது தானே உண்மை.
மார்க்ஸீயம் உலக வரலாற்றில் விஞ்ஞானத்தால் உறுதிப்படுத்தப்பட்ட புரட்சி சித்தாந்தம். இச்சித்தாந்தம் சமூக வரலாற்று வளர்ச்சிப் போக்கில் மேலும் மேலும் செழுமைப்படும், செழுமைப்படுத்தப்படும். இடையில் அதைக் கொச்சைப்படுத்த குறுக்கீடுகள் எதிர்பட்டாலும் காலப்போக்கில் அவை முறியடிக்கப்பட்டு அது செழுமைப்படும்; படுத்தப்படும். முன்னோக்கித் தொடரும். ஆனால் அழியவோ அழிக்கப்படவோ முடியாத புறநிலை உண்மையின் பிரதிபலிப்பு. பிரபஞ்சத்தின் அடிப்படை வளர்ச்சி விதிகளுக்கு சித்தாந்தம் விதி விலக்காக முடியாதல்லவா?
உலக முழுதிலுமுள்ள புரட்சியாளர்கள், புரட்சியமைப்புகள் இச்சித்தாந்தத்தை தங்களது ஆயுதமாகக் கொள்வதில் வியப்பிருக்க முடியாது. அவ்வாயுதத்தின் தகுதி, தரம், தன்மை, தெம்பு, திறன் ஆகியவை அவ்வப்போதைய அதன் பிரயோகத்தை அனுபவ உரைகல்லில் உரசி உறுதிப்படுத்திக் கொள்வது புரட்சியாளர்களின், புரட்சியமைப்பின் கடமை.
‘இயக்கவியல் பொருள் முதல்வாத சித்தனைப் போக்கு’ தன்னை ஒரு சித்தாந்தமாக, ஒரே சித்தாந்தமாக நிலைநாட்டிக் கொண்டுவிட்டது. இதற்கு நேரிடை எதிரும் புதிருமான சிந்தனைப் போக்கு, வெற்று நம்பிக்கையை மட்டும் அடிப்படையாக்கி, அறிவியல் ரீதியான அஸ்திவாரங்கள் ஏதுமற்ற, தர்க்க ரீதியாகவும், விஞ்ஞான ருசுப்பித்தலாலும் முறியடிக்கப்படக் கூடிய நிலைமையில், அழிவு ஜீவியம் கொண்டுள்ள சிந்தனைப் போக்காகும். இந்த ஆன்மீக கருத்து முதல் வாத சிந்தனைப் போக்கும், ஒரு சிந்தனைப் போக்குதானே என்ற முறையில் சிலர் இதனையும் ஒரு சித்தாந்தமாக சித்தரித்து விடுகின்றனர். இதையுமொரு சித்தாந்தம் எனக்கூறி குழப்பிக் கொள்வதை அல்லது குழப்பிவிடுவதை விட இதனை தெளிவாக அடையாளப்படுத்த வேதாந்தம் என பச்சையாக சொல்லிவிடுவது தெளிவாக இருக்குமல்லவா?
இந்த வேதாந்தம் வரலாற்று வளர்ச்சிப் போக்கில் தன்னை தக்கவைத்துக் கொள்ள துடிக்கும்; அல்லது தட்டுத் தடுமாறி நியாயம் கற்பித்து, தப்பித்து வாழ முயலும். ஆனால் எதிர்காலத்தில் அழிந்து போகவோ அல்லது அழிக்கப்படவோ கூடிய சவக்குழி ஜீவியம் கொண்டதேயாகும். பிரபஞ்சத்தின் வளர்ச்சியில் அடிப்படை விதிகளுக்கு வேதாந்தமும் விதிவிலக்காயிருக்க முடியாது. காலம் கடந்தவைளும், காலத்தில் தன்னை தகவமைத்துக் கொள்ள முடியாதவைகளும் காலத்தில் காலத்தால் அப்புறப்படுத்தப் படுவதும், அழித் தொழிக்கப்படுவதும் காலத்தின் கட்டாயமல்லவா?
மார்க்ஸீயம் என்பது செழுமைப்பட்டுக் கொண்டும், செழுமைப்படுத்தப்பட்டுக் கொண்டுமிருக்கிற ஒரு சித்தாந்தம் என்பது தெளிவு. அந்தந்த நாட்டுச் சூழலை, அந்தந்த தேசிய இனங்களின் வாழ்வியலை சரியாகப் புரிந்து கொண்டு மார்க்ஸீயத்தைப் ‘பொருத்துவது’ தான் ஒரு புரட்சியாளனின் - முரண்வாழ் இருப்பு முதல் வாதியின் திறனாகும். பொருத்துவது என்பது ‘ஒரு வழி நடத்தி ஒரு வழிகாட்டுதலை சரியாக கண்டறிந்து வகுத்துக் கொள்ளும் கோட்பாட்டை உருவாக்கிக் கொள்வது’ என்று பொருள். இந்த கோட்பாடே, ‘செயல் நடத்தியாக’ பரிணமிக்கும் என்பது புரிந்து கொள்ளக் கூடியதே.
இந்த அடிப்படையில் ஒரு நாட்டின் பிரத்தியோகச் சூழலை புரிந்து, அதனில் சரியாக பொறுத்தி, மார்க்ஸியத்தைச் செழுமைப் படுத்திய புரட்சியாளர்கள் உலகின் பல நாடுகளில் தோன்றியிருக்கிறார்கள்; வழி நடத்தியிருக்கிறார்கள், வாகை சூடியிருக்கிறார்கள் என்பது வரலாறு.
அந்த வகையில் இந்திய தீபகற்ப சூழலின் சிறப்புத் தன்மைகளை கண்டறிந்து, அதில் தனது கோட்பாடுகளைச் சரியாக பிரகடனம் செய்தவர் பெரியார் அவர்கள்.
இந்தியா ஒரு துணைக் கண்டம்; ஒரே நாடாக ஒருபோதும் இருந்ததில்லை; ஒரே இனமாகவும் மக்கள் இல்லை, ஒரே கலாச்சாரத்தை மட்டும் கொண்டிருக்கவில்லை; ஆங்கிலேயர்கள் தங்கள் காலனிப் பகுதிகளை ‘இந்தியா’ என பெயரிட்டழைத்தனர்; இந்திய தீபகற்பத்தின் பூர்வீகக் குடிகள் திராவிடர்கள்; இங்கு வந்து புகுந்த முதல் அந்நியர்கள் ‘ஆரியர்கள்’.
இந்திய தீபகற்ப பூர்வீக குடிகளை ஒரு பண்பாட்டு ஆக்கிரமிப்பின் மூலம் பெரும்பான்மையினரை கூறுபோட்டு சிறுபான்மையினராக உருகாட்டி, சிறுபான்மை யினரான தங்களின் சுரண்டலையும், ஆதிக்கத்தையும், நலனையும் ஸ்திரமாக நிலை நாட்டிக் கொள்ளத் தக்க விதத்தில், சமூக ஒழுங்கமைப்பு என்ற முறையில் ஒரு சமூக சீர்குலைவை திட்டமிட்டு அரங்கேற்றி முடித்தனர்.
வருண சாதி பிளவுகளை வர்க்கப் பிரிவுகளோடு சாதுரியமாக நுழைத்திறுக்கி, இந்துமதக் கட்டுக் கோப்புக்குள் வைத்தனர். தொழில் ரீதியாக உருகொடுக்கப்பட்ட சாதிகளை பிறவி ரீதியான ஜாதிகளாகவும், ஜாதி ரீதியான தொழில்களாகவும் கட்டமைத்தது பார்ப்பனத்துவ மாபாதகக் கொடுமை; அது போலவே பெண்ணுரிமை யிழக்கடிக்கப்பட்ட பெண்ணடிமைத் தனத்தை ஆண் உடைமையாக பெண்ணை ஆக்கிவிட்ட கொடுஞ்செயல் பார்ப்பனத்துவத்தின் கொடூரம்.
இந்த சாதிகள் வருணத்திற்குட்பட்டது. இந்த வருணங்கள் இந்து மதத்திற்குட்பட்டது. இந்து மதம் கடவுள்களுக்கு கட்டுப்பட்டது. கடவுள்கள் வேத, மந்திர, சாஸ்திர, ஆச்சார, அனுஷ்டானங்களுக்குள் அடக்கப்பட்டது. இந்த வேத மந்திர சாஸ்திர வகையறாக்கள் பார்ப்பனர்களின் ஆளுமைக்கு உட்பட்டது என பார்ப்பனர்கள் தங்களது சுரண்டல் ஆதிக்கத்தை ஸ்தாபித்துக் கொண்டனர்.
அவ்வாதிக்க ஆளுமையில் சிக்கிய ஜாதிகளில் தோன்றி வளர்ந்த உடமை வர்க்கங்கள், தங்களது வளர்ச்சிக்கு பார்ப்பனர்களோடு சமரசம் செய்து கொண்டு, பார்பனத்துவ நிலப்பிரபுத்துவ, முதலாளித்துவ சுரண்டல் ஆதிக்கத்திற்கு ஏதுவான சமூகமாக ஸ்திரப்படுத்திக் கொண்டனர்.
அன்றைய உலக மற்றும் இந்திய தீபகற்பச் சூழலில், எதிர்கால உறவுகளையும் கருத்தில் கொண்டு, ஆங்கிலேயர்கள் ஆட்சியதிகாரத்தை, பார்ப்பனர்கள் பெருமுதலாளிகள் தலைமையிலான காங்கிரசிடம் கை மாற்றிக் கொடுத்தனர். இதுதான் 47 ஆகஸ்ட் 15ல் நடந்தது.
தங்கள் கைகளில் கிடைத்த ஆட்சியதிகாரத்தை பார்ப்பனர்களும் பெரு முதலாளிகளும் பத்திரப்படுத்திக் கொள்ள, இந்திய தேசிய பக்தியை புகட்டுகின்றனர். இந்திய தேசிய வெறியை ஊட்டுகின்றனர். இந்திய தேசியம் இந்துமத தேசியம், இல்லாத இந்த தேசிய மாயையிலிருந்து தமிழர்களை விடுவிக்க, தமிழின உணர்வை ஊட்டி, தமிழ்த் தேசியத்தை மீட்க, காக்க, நிலைநாட்ட, ‘நாம் தமிழர்கள், நம் நாடு தமிழ்நாடு; சுதந்திர தமிழ்நாடு நமது லட்சியம்’, என பிரகடனம் செய்து, பொய்மைக்கும் புரட்டுக்கும் மௌன சாட்சிகளாய் இருப்பதை விட்டு, புதுமைக்கும் புரட்சிக்கும் இரத்த சாட்சிகளால் மாறுங்கள் என தமிழர்களுக்கு அறை கூவல்விடுத்து மக்கள் இயக்கம் கண்டவர் பெரியார்.
இந்த சுருக்கமான வரை கோட்டில், இந்திய துணைகண்டத்தில், ஆன்மீக கருத்து முதல்வாதம் அல்லது வேதாந்தம் கொடி நாட்டி கொக்கரிக்க எடுத்துக் கொண்ட வடிவம் பார்ப்பனீயம்; பார்ப்பனத்துவ, முதலாளித்துவ, மதவாத சிந்தனைப் போக்குகளின் திட்டவட்ட வடிவம் கொண்டது தான் பார்ப்பனீயம், பார்ப்பனீயத்தை எதிர்த்தொழிக்கவும், வருண, வர்க்க பாலியல் பேதமற்ற சமத்துவத்திற்கான சமூக புரட்சியை உருவாக்கவும் வழி காட்டுவது தான் பெரியாரீயம். இந்தியச் சூழலில், ‘ஆன்மீக கருத்து முதல்வாத சிந்தனைப் போக்கு’ வளர்ச்சியின் உயர்ந்த கட்ட வேதாந்தம், ‘பார்ப்பனீயம்’; இதற்கு நேர் எதிரான ‘இயக்கவியல் பொருள் முதல் வாத சிந்தனைப் போக்கினது வளர்ச்சியின் சித்தாந்தம் செழுமைப்படுத்தப்பட்ட மார்க்சிய’மான பெரியாரியம்; இதில் என்ன குழப்பம்?.
பெரியாரீயம் ஒரு பூர்ஷ்வா சித்தாந்தம், அதற்கும் மார்க்சீயத்திற்கும் சம்பந்தமில்லை, அது வர்க்க போராட்டத்திற்கு எதிரானது. அதன் கடவுள் மறுப்பும் பார்ப்பன எதிர்ப்பும் புரட்சிக்கு எதிரானது என மார்க்ஸீய வியாபாரிகளான பல சில சிவப்புகளும், மார்க்ஸீயம் வேறு, பெரியாரீயம் வேறு, இந்தியாவில் மார்க்ஸீயம் எடுபடாது. அது அந்நியநாட்டு சித்தாந்தம், உலக சித்தாந்தம் பெரியாரீயம் தான். அதனை இந்தியா பூராவும் உலக முழுதும் எடுத்துச் செல்வதே இப்போதைய உடனடிப் பணி என பெரியார் நாமாவளிகளான பல கருப்புகளும் தான் மக்களைக் குழப்புகிறார்கள். ஆனால் பரிதாபம்! தேர்தல் மேடைகளில் மட்டும் ஓங்கி குரலெடுத்து, ஒரிஜினல் சிவப்பும், ஒரிஜினல் கருப்பும் ஒன்று சேர்ந்து விட்டது. வெற்றி எங்கள் பக்கமே என வெற்றுக் கூச்சல் போடுவதில் அவர்களுக்கு கொஞ்சம் கூட லஜ்ஜையில்லை.
ஒன்றை மட்டும் மனதில் ஆழமாக பதியவைத்துக் கொள் தோழா! சித்தாந்தம் அறிந்தவர்களானாலும், அறியாதவர்களானாலும், மேதைகளானாலும், பேதை களானாலும், படித்து பட்டம் பெற்றவர்களானாலும் படிப்புவாசனையே அற்றவர் களானாலும் இத்தகையோர் உள்ளிட்ட எவரொருவரது எத்தகையதொரு செயலுக்குப் பின்னாலும் சித்தாந்தமோ அல்லது வேதாந்தமோ ஒளிந்து கிடக்கிறது என்பது திட நிச்சயம்.
மற்றொன்று சித்தாந்தவாதிகள் என தங்களை சித்தரித்துக் கொள்ளும் சிலர், சித்தாந்த வழியிலான இலட்சியம், நோக்கம், கொள்கை, கோட்பாடு, நிலைபாடு ஆகியவைகளைப் பிரித்து பார்க்கவும் அவற்றினூடேயான சித்தாந்த இழையோட்டத்தை துண்டுபடாது துல்லியமாய் பார்க்கவும் பயிற்சியின்றி ஒன்றாய் போட்டுக் குழப்பிக் கொள்ளுகிறவர்களும் இருக்கிறார்களே என்ன செய்வது?இந்த விஷயங்கள் பற்றியெல்லாம் பின்னால் பார்ப்போம்.
புரியாத புதிரல்ல சித்தாந்தம்
புரியாத புதிரல்ல சித்தாந்தம்
இணைமிகு தோழா!
சித்தாந்தம் என்பது பற்றி சென்ற கடிதத்தில் கொஞ்சம் தொட்டோம். இப்போதும் அது பற்றிய ஒரு குறிப்பை அறிந்து கொள்ள முயற்சிப்போம்.
சித்தாந்தங்கள் பற்றி முழுதும் அறிந்த, அறிய முயன்ற அல்லது தொட்டுப் பார்த்த தொட்டுவிட்ட அல்லது ஆய்ந்த விளக்கமறிந்தவனாக நான் இல்லை.
அறிய முடியாதது எதுவுமில்லை. ஆனால் அறிய வேண்டியதோ ஏராளம் உண்டு என்ற சிந்தனையோட்டம் என்னை உந்தியதால், சித்தாந்தங்கள் பற்றியறியவும் அது பொருந்தும் என்ற துணிவுதான் அதுபற்றி கொஞ்சம் சொல்லத் தூண்டுகிறது. நீங்களும் அதுபற்றிச் சுயமாக சிந்தியுங்கள். சூழலில் ஊன்றி நின்று அறிந்தவற்றை வைத்துக் கொண்டும் சிந்தியுங்கள். நீங்கள் படித்த, பட்ட, கற்ற, ஆய்ந்த நிலைகளிலிருந்தும் சிந்தியுங்கள்.
சித்தாந்தம் என்பதைப் பற்றிச் சொல்லுகிறவர்கள், அது ஏதோ புரியாத, புரிந்துக்கொள்ள முடியாத, மதிநுட்பம் தொழில் நுட்பமுள்ளவர்களால் மட்டுமே புரிந்து கொள்ளக் கூடிய புதிராகக் கூறுவதை நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். அதனை விளக்கப் பயன்படுத்துகிற வார்த்தைகளும் ஒரு திட்டவட்டமான இலக்கண வரையரையோடு கூடியவை என்பதை விளக்கிவிட்டுக் கூறாமல் விளக்கப் பயன்படுத்திய வார்த்தைகளுக்கு குயுக்தியான வியாக்யானம் கூற முற்படுவது, பார்க்கிறவர்களுக்கும், கேட்கிறவர்களுக்கும் ஒரு சமயம் மலைப்பைத் தட்டிவிடுகிறதோ என நினைக்க வேண்டியுள்ளது.
எப்படியோ நடக்கட்டும், நாம் முடிந்த அளவு முனைவோம். முயல்வோம். சித்தாந்தம் என்பது மூளை இயக்கத்தின் விளைவு. இவ்விளைவின் பயனே அறிவு. ஒன்றை அறிந்து கொள்ளக்கூடிய பார்வைத் தொடக்கம்; ஒன்றை கண்டறிந்து கொள்ள சேகரிக்கப்படும் விடை தொகுப்புகளுக்கான வினா தொடுப்பு; சிந்தனைக்கும் அறிதலுக்குமான உந்து சக்தி; செயலுக்கான வழிகாட்டி; செயல் முடித்தோரின் ஆய்ந்தறிவால் செழுமை பெறும். வழி நடத்தி, அது சரியான, முறையான, ஒழுங்கான வழியில் அடையாளப்படுத்தப் படவில்லை என்றால் அது செழுமைப் படுத்தப்படுவதற்கு மாறாக சேதப்படுத்தப் படுவதாகவும் முடிந்து விடும் அபாயம் உண்டு. அவ்வளவு தான்.
இதுகூட ஏதோ சுற்றி வளைப்பது போல தோன்றக்கூடும். அறிவு என்பது மூளை இயக்கத்தின் விளைபயன். விஞ்ஞானம் என்பது ஒழுங்கு படுத்தப்பட்ட, முறைப் படுத்தப்பட்ட அறிவு. சித்தாந்தம் அல்லது தத்துவம் என்பது உண்மைக் கண்டறிவு - உண்மையைக் கண்ட அறிவு. உண்மை ஆய்ந்தறிவு - உண்மையை ஆய்ந்த அறிவு, கண்டறிவு ருசுப்பித்தலோடு கூடிய அறிவு. ஆய்ந்தறிவு விளக்கத்தோடு கூடிய அறிவு. செயலறிவு பரிசோதனையோடும் அனுபவத்தோடும் கூடிய அறிவு. இம்மூன்றின் மொத்தமே பகுத்தறிவு. சீரமைக்கப்பட்ட பகுத்தறிவால் கருத்துருவாக்கப்பட்ட வெளிப்பாடே செயலுக்கான கோட்பாடு. இவ்வறிவு வடிவங்களுக்கெல்லாம் அடிப்படையாகி இவ்வடிவங்களிலெல்லாம் இழையோட்டம் கொண்டு பிரகாசிக்கும் உண்மை என்கிற புறநிலை எதார்த்தங்களின் சரியான புரிதலே சித்தாந்தம்.
செயல்வடிவிலான போராட்டம் செயலறிவான பட்டறிவால் கருத்து வடிவிலான சித்தாந்தத்தை உறுதிப்படுத்தி, தூக்கிப்பிடித்து வழிகாட்டியாகவும், வழி நடத்தியாகவும் கொண்டு முன்னோக்கிப் பயனிப்பது தான், சித்தாந்தத்திற்கும் செயலுக்குமான பரஸ்பரம் - பாச நேசப்பிணைப்பு - இறுக்க நெறுக்க உறவு. புரிகிறதா தோழா?
இந்த சித்தாந்தங்களைப் பற்றி இவ்வளவு பேசுகிறோமே இந்த சித்தாந்தம் நமக்கு அவசியம் தானா? ஆம், அறிந்திட வேண்டிய அவசியத்தால் அறியப்பட்டது தானே சித்தாந்தம். அறியக்கூடிய அவயவங்கள், அறிய உதவு சாதனங்கள், அறியக்கூடிய அறிவு வளர்ச்சி, அறியக் கூடிய அக்கரை கொண்ட உழைப்பு ஆகியவை மனிதனிடமிருந்தாலும், இவற்றை எல்லாம் அறியவும், இன்னும் அறிய வேண்டியுள்ள ஏராளமானவற்றை அறியவும், மனித சமூகம் இயற்கையை எதிர்த்து போரிடவும், வெல்லவும் தனது ஆளுமைக்குட்படுத்தவும் அறிவது என்பது தவிர்க்கப்பட முடியாதிருப்பதால் அறிதலுக்கான பேராயுதம் அவசியமல்லவா?
இந்த அவசியம் கூட, மனித சமூகம் தனது தேவைப் பூர்த்திக்கும், தேவையானவற்றை உற்பத்திச் செய்து கொள்ளுவதற்கும், உற்பத்தி உழைப்பை ஒழுங்குபடுத்திக் கொள்ளுவதற்கும், முன்னோக்கிய வாழ்க்கைப் பயணத்திற்கும் , மொத்தத்தில் மனித சமூகம் பாதுகாப்போடு வாழ்வதற்கு, இயற்கையை எதிர்த்து போராடித்தானே ஆக வேண்டும். உன்னையறிந்து, உனக்கு வேண்டியதெதும் எனக்கு அப்பால் இல்லை என்றுணர்ந்து, அனைத்தையும் உள்ளடக்கியுள்ள என்னையறிந்து, முடிந்தால் உனக்கு வேண்டியதை என்னிடமிருந்து எடுத்து வளர்ந்து கொள் என இயற்கை விடுக்கும் சவாலை புரிந்து, செயல்பட மனித சமூகம் அறிந்து கொள்ள வேண்டியது அவசியமல்லவா? சித்தாந்தத்தின் அவசியம் புரிகிறதா?
சித்தாந்தம் என்பது மனித அறிவுக்கு ஊற்றுக்கண்; மனித வாழ்விற்கு உந்து சக்தி; மனித உறவுக்கு ஊட்டச்சத்து; மனித உழைப்புக்கு திசைக்காட்டி; மனித பாதுகாப்புக்கு காவல் கவசம்; யார்? ஏன்? என்ன? - எது? எங்கே? எப்போது? எப்படி? எதற்கு? எவ்வளவு? என்ற தேடல்களுக்கான விடைமானி. அதனிடம் தப்பிக்க முடியாமல் சிக்கிடும் உண்மைகளை வெளிப்படுத்தும் ஒளி ஒலி வீச்சு.
இயற்கை, சமூகம், சிந்தனை இவற்றை உள்ளடக்கியது பேரண்டம்; பேரண்டத்திற்கு அப்பால் எதுவுமில்லை; இப்பேரண்டத்தையும், இது உள்ளடக்கியுள்ள ஒவ்வொன்றையும், அதனில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிகழ்வுப் போக்குகளையும், அதனில் நடைபெறும் போராட்டங்களின் தன்மைகளையும், அதன் வளர்ச்சிப் போக்கையும் அறிந்து, புரிந்து விளக்குவதற்கு பேராயுதம் சித்தாந்தமே. பல்வேறு துறை விஞ்ஞானங்களுக்கும் விஞ்ஞானமாக விளங்குவது சித்தாந்தமே.
உண்மை ஒன்றே என்பது போல, உண்மை உணர்வுக்குப்புறம்பே இயங்கிக் கொண்டும் மாறிக் கொண்டும் இருக்கும் நித்தியமான ஒன்று என்பது போல அந்த உண்மையைக் கண்டறியும் சித்தாந்தமும் ஒன்றே. இதில் போட்டுக் குழப்பிக் கொள்ள வேண்டியதில்லை. உண்மையைக் கண்டறிந்து, புரிந்து விளக்குவதற்கு மாறாக, பொய்யை உண்மையாக சித்தரிப்பதும், அதனை நியாயப்படுத்துவதும் சித்தாந்தமல்ல; உண்மைக்கு விரோதமாக அப்பட்டமான பொய்யை உண்மையாக அடையாளப்படுத்த அடம்பிடிப்பது வேதாந்தம். அதுவும் ஒரு சிந்தனைப் போக்கு என்ற பார்வையால் வேதாந்தமாகவும், சித்தாந்தமாகவும் சித்தரிக்கப்படுவதால் ஏற்படும் சிக்கல்களை சித்தாந்தவாதிகளாக கூறப்படுவர்கள் புரிந்து கொள்ளாமல் அமுத்தப்படுத்து கிறார்களே? ஆனால் அதற்கும் காரணம் இருக்கவேச் செய்கிறது; பிரிதொரு நேரத்தில் பார்ப்போம்.
சித்தாந்தம் ருசுப்பித்தலுக்கான விஞ்ஞான சாட்சியங்களோடு இயங்குகிறது. அது விளக்குவதற்காக தர்க்க நியாயங்களோடு இயங்குகிறது. ஆனால் வேதாந்தம், அறியாமை வழி வந்த அச்சம், மடமையாலும் முழு கற்பனை யூகங்களாலும், வார்த்தை ஜால மாய் மாலங்களாலும் தலை காட்டுகிறது. நிரூபனங்களுக்கும் தர்க்க நியாயங்களுக்கும் இடமில்லாமல் முழுக்க முழுக்க மூட நம்பிக்கையொன்றேயே மூலதனமாக்கிக் கொண்டு வியாபாரம் நடத்துவது வேதாந்தம். சித்தாந்தம் செயலக்கு வழிகாட்டி என்றால் வேதாந்தம் வெறும் திண்ணைப் பேச்சே. செயலின் முடமாக்கி.
சித்தாந்தமும் வேதாந்தமும் இருவேறுபட்ட எதிரும், புதிருமான சிந்தனைப் போக்குகள். ஒன்றை ஒன்று இறுதி வெற்றி கொள்ள ஜீவ மரண போராட்டங்களை நடத்துகின்றன. இறுதியில் சித்தாந்தம் வெல்லும். வேதாந்தம் மடிந்து மறைந்தொழியும். சித்தாந்தம் தன்னை மேலும் மேலும் செழுமைப்படுத்திக் கொண்டு உயர்ந்து முன்னேறிச் செல்லும்.
இன்றைய காலகட்டத்தில் சித்தாந்தத்திற்கும், வேதாந்தத்திற்கும் இடையில் ஊசலாடும் எண்ணற்ற சிந்தனைப் போக்குகள் இருக்கின்றன. இவையெல்லாம் நாளாவட்டத்தில் காலப்போக்கில், முட்டி மோதி, தட்டுத் தடுமாறி தாக்குப்பிடிக்க முடியாமல் மறைந்தோ அல்லது மேற்சொன்ன இரண்டில் ஒன்றில் இணைந்தோ, கரைந்தோ போய்விடும், நிலையற்ற சிந்தனைப் போக்குகளேயாகும்.
பேரண்டத்தைப் புரிந்து, விளக்குவது தானே சித்தாந்தம், இயற்கை, சமூகம், சிந்தனையை உள்ளடக்கியதுதானே பேரண்டம். இயற்கையின் தோற்றம், நிகழ்வு, வளர்ச்சிப் போக்குகளை விளக்குவதற்கு மூல முதல் ‘பொருள் அல்லது இருப்பு’ என்கிறது சித்தாந்தம்; ஆனால் வேதாந்தமோ ‘ஆண்டவன்’ என்கிறது.
சமூகத்தின் தோற்றம் நிகழ்வு வளர்ச்சிப் போக்குகளை விளக்குவதற்கு மூல முதல் ‘பொருளாதாரம் அல்லது பொருள் உற்பத்தி’ என்கிறது சித்தாந்தம். ஆனால் ‘ஆத்மா’ என்கிறது வேதாந்தம்.
சிந்தனையின் தோற்றம் நிகழ்வு வளர்ச்சிப் போக்குகளை விளக்குவதற்கு மூல முதல் மூளை அல்லது புறநிலை எதார்த்தம் என்கிறது சித்தாந்தம்; ஆனால் ‘மனம் என்கிற உணர்வு’ என்கிறது வேதாந்தம்.
சுருக்கமாகச் சொன்னால் பேரண்டத்தை புரிந்து விளக்கவும், வாழ்க்கை போராட்டத்திற்கு வழிகாட்டவும், சித்தாந்தத்தின் பிறப்பு பொருள் என்ற இருப்பில் இருந்தா? அல்லது ஆண்டவன் என்ற உணர்விலிருந்தா? என்பது தான் விடை காணப்பட வேண்டிய வினா?
இந்த வினாவிற்கு விடையும், விடையளிக்கப்படுவதையும் அதற்கு பின்னர் நிற்கக்கூடிய சக்திகளையும், சற்று ஆழமாக ஆனால் சுலபமாக சற்று விரிவாக ஆனால் தெளிவாக பார்க்க வேண்டுமல்லவா?
நவம்பர் 2003-தன்மானம்

புதிய சமூகத்தின் இரத்த சாட்சிகள் புரட்சியாளர்கள்

மொட்டு பருவத்திலான ஒரு போராளியின் பரிணாமம்தாள் விரிந்து காட்சியாகி மலர்ந்து மனம் தந்து, காயகி மரபு காட்டி, கனியாகி ருசி தந்து, வித்தாகி விருத்தியின் தாயாகும் ஒரு புரட்சியாளனின் தோற்றம். புரட்சியாளன் என்றால் சரித்திரம் உயிர் பெற்றது என்று பொருள். வரலாறு தன்னியக்கம் பெற்றது என்ற அர்த்தம். அத்தகைய புரட்சியாளர்களைக் கொண்ட முகாம் ஒன்றும் அமைந்துவிட்டால், புரட்சியின் மகிமையையும், மகத்துவத்தையும் புரியாதவர்களுக்கும், புரிந்த புரட்டர்களுக்கும் புரட்சி வேடதாரிகளுக்கும் புரிய வைத்திடும்.
இன்றைக்கு ‘புரட்சி’ என்ற சொல், ஒரு அர்த்தமற்ற அகராதி வார்த்தையாகவும், மலிவாக கிடைத்திடும் கடைச்சரக்காகவும், தகுதியற்றவர்களுக்கெல்லாம் தரக்கூடிய இலவச பட்டமாகவும், யார் வேண்டுமானாலும் எடுத்து எக்கிலோ, கக்கிலோ, கொண்டையிலோ செருகி அழகு காட்டும் காகிதப் பூவாகவும் அசிங்கப் படுத்தப்படுவதை பார்க்க முடிகிறதல்லவா? கொடுமைதான்!
புரட்சி என்றால் என்ன? குறிப்பிட்ட நேர்மறையும், எதிர்மறையும் கொண்ட ஒரு வடிவம், தனது வளர்ச்சிப் போக்கில் அமைதியான இயல்பு அல்லது பரிமாண மாற்றங்களைக் கொண்ட பரிணாமம். அவசியமாகவே மற்றொரு குறிப்பிட்ட கட்டத்தில் அழித்தாக்கலுக்கான திடீர் வேகத்தோடு கூடிய பாய்ச்சலில் முடியும் பண்பு அல்லது அடிப்படை மாற்றம் ‘புரட்சி’ என்பதாகும்.
புரட்சிக்குப் பின்னான புதிய வடிவம், பழைய வடிவத்திலிருந்து முற்றாகத் துண்டித்துக் கொண்ட, முற்றாக மாறுபட்ட ஆனால் தனக்கே முற்றிலும் பொருத்தமான அகப்புறக் கட்டமைப்புக்களை கொண்டதாக அமைந்திடும். இவ்வடிப்படை மாறுதல் அழித்தாக்கலின் போது ஏற்பட்ட திடீர் பாய்ச்சல் வேகத்தின் பலனல்லவா? அது தானே புரட்சியின் மையம்?
இப் பேரண்டத்தில் எவ்வொன்றில், எத்துறையில் இப்புரட்சி நடந்தாலும் அந்த திடீர் பாய்ச்சல் வேகத்தை மையமாக கொண்டிருக்குமல்லவா? அமைதியாக நடைபெறுவது பரிணாமம். பாய்ச்சலில் முடிவது புரட்சி. இதுதானே? ஆனால் வீரவசனங்களை மேடைகளில் ஒப்புவிக்கும் அரசியல் நடிகர்கள் கூறுகிறார்களே ‘‘அமைதிப்புரட்சி’’ அதற்கு அர்த்தம் என்ன தோழா?
புரட்சிக்கு துணை நிற்க, துரிதப்படுத்த, உண்மையாக தன்னை முற்றிலும் ஒப்படைத்துக் கொண்டிருப்பவன் புரட்சியாளன். புரட்சியை சண்டை சச்சரவாக, தர்க்கம் தகராறாக, வம்பு தும்பாக, கலக்கம் கலகமாக சித்தரிக்கின்ற அரசியல் ஜோக்கர்கள்தான், புரட்சியாளர்களையும் வம்புக்காரர்களாக, சண்டைக்காரர்களாக, கலகக்காரர்களாக கொச்சைப்படுத்த துணிகிறார்கள். ஆனால் புரட்சி என்ற போர்வையை தாங்கள் மட்டும் போர்த்திக் கொள்ள கொஞ்சம் கூட வெட்கப்படுவதில்லை. மூச்சுக்கு முன்நூறு தடவை ‘‘ஆமாம்’’ போடும் ஜால்ராக்களுக்கும் அது அருவெறுப்பாகப்படுவதில்லை எப்படியோ தொலையட்டும். அனால் காலம் கவனித்துக் கொண்டிருக்கிறது. காரணம் காலம் கனிந்து கொண்டிருப்பதால்.
ஒன்றின் வளர்ச்சிப்பாதையில், பாய்ச்சல் கட்டம் புரட்சி என்கிற போது அது முற்போக்கு தன்மை பெற்றதாகவே அமைந்திடும் என்பது புரிகிறதல்லவா? வளர்ச்சி பின்னோக்கியும் செல்லாது, பாய்ச்சல் பதுங்கி, படுத்துறங்கவும் செய்யாது தோழா!
முற்போக்கு என்றால் காலம் கடந்தவைகளை எதிர்த்து அழித்து, காலத்தில் தன்னை தகவமைத்து, தன்னிறுத்தி காலத்தில் வரவேண்டியவைகளை கண்டறிந்து ஊக்கப்படுத்தும் போக்கு அல்லவா? ஆனால் காலங்கடந்தவைகளை ஆதரித்து காத்து காலத்தில் தடுமாறி, தறிகெட்டு, காலத்தில் வரவேண்டியவைகளை தடுத்து எதிர்க்கும் தன்மை தானே பிற்போக்கு இந்த அளவு கோலில் ஊன்றி நின்று பார்த்தால், முற்போக்கு தன்மை கொண்ட புரட்சிக்காரனையும், பிற்போக்குத் தன்மை கொண்ட புரட்டுக்காரனையும் அடையாளம் கண்டு கொள்ள முடியும். இத்தகைய புரட்டுக்காரர்கள் தங்களைத் தாங்களே புரட்சியாளர்களாக கொஞ்சம்கூட லஞ்ஜையின்றி கூறிக் கொள்வது, ஏனோ அவர்களுக்கு அசிங்கமாகப்படவில்லை; படாது, தனலிலே பிறந்து தன்னிழப்புக்குத் தயாராகி வரலாற்றில் ஜீவிக்கும் புரட்சிக்காரன் எங்கே! அசிங்கத்திலே பிறந்து, ஆபாசத்திலே வளர்ந்து, அழிவுக்கு அச்சாரம் பெற்றுவிட்ட புரட்டுக்காரன் எங்கே! அவர்களை விட்டுத் தள்ளு தோழா!
பேதப்பட்ட சமூகத்தில் வாழுகின்ற, அறிந்து, தெரிந்து, தெளிந்து, புரிந்து, விளக்கிடும் திறன் கொண்டிருப்பதாக சொல்பவர்கள் கூட பேதமற்ற சமூகத்தின் எதார்த்தங்களை ஜீரணிக்கும் பக்குவத்தை பெறமுடியாமல் தவிப்பதை நீ அறிவாயா? ஆனால் புரட்சியாளர்கள் அந்த அஜீரணக் கோளாறுக்கு ஆட்படுவதில்லை. ஏனெனில் அவர்கள் தெளிவான சித்தாந்தத்தை தெரிந்து கொண்டிருப்பவர்கள் மட்டுமல்ல, சித்தாந்த தெளிவுள்ளவர்களாகவும் இருப்பதால்; சித்தாந்தம் செயலுக்கு வழிகாட்டி என்று கருதுபவர்கள் மட்டுமல்ல அந்த வழிகாட்டலில் வழிநடத்தும் திறன் கொண்டவர்களாகவும் இருப்பதால், தெளிவான சித்தாந்தத்திற்கும் சித்தாந்த தெளிவிற்கும், வழிகாட்டலுக்கும் வழி நடத்தலுக்கும் இடையிலான நூலிழை வேறுபாட்டை புரிந்து கொண்டிருப்பவன் புரட்சியாளன். புரிகிறதா தோழா!
சித்தாந்தம் என்பது சிந்தனைத் தொகுப்பின் சாராம்சம். சிந்தனை மூளை இயக்கத்தின் விளைவு; அந்த மூளை இயக்கத்தின் விளைபயன் அறிவு; அறிவின் ஊற்றுக் கண் சிந்தனை; அறிவுக்கு உந்து சக்தி சித்தாந்தம்; உந்து சக்தியால் ஊக்கப்படுத்தப்பட்ட, ஈடுபாட்டால் உறுதி செய்யப்பட்ட அறிவு பகுத்தறிவு; அத்தகைய சித்தாந்தவாதி, பகுத்தறிவாளன் தான் புரட்சியாளன்.
சித்தாந்தம் செயலக்கு வழிகாட்டி என்பதை அறிந்த புரட்சியாளன், செயலற்ற சித்தாந்தம் ‘‘ஊருக்கு உபதேசம்’’ என்ற ஊதாரிகளுக்கும், சித்தாந்தமற்ற செயல் ‘‘ஊரையடித்து உலையில் போடும்’’ உன்மத்தார்களுக்கும் மட்டுமே உரித்தானது என்பதை உணர்ந்த புரட்சியாளன், அணுகிடும் போதும், வழி நடத்தும் போதும், சித்தாந்தத்தை வரிக்கு வரி, வார்த்தைக்கு வார்த்தை, இலக்கண வரையரையற்ற அகராதியை நம்பி, பிடித்துத் தொங்கிக் கொண்டிராமல், அதற்கு இன்றைய நீதிபதிகள் பாணி விளக்கங்களை தர முந்திக் கொண்டிராமல், நிலவுகின்ற சூழலைப் புரிந்து அதில் சித்தாந்தத்தைப் பொருத்தி உருவாக்கிடும் கோட்பாடுகளாலும் அக்கோட்பாட்டு வழி செயல்களாலும் சித்தாந்தத்தை செழுமைப்படுத்தி, வழிநடத்தும் வகையறிந்தவனாயிருக்கிறான்.
சித்தாந்தம் ஏன் தேவைப்படுகிறது? தேவையின் அவசியத்தால் தானே அது உரு பெற்றது. பேரண்டத்தை புரிந்து கொள்ள, விளக்கிட, மாற்றிட அது அவசியப்பட்டது. அதனை ருசுப்பிக்க, உறுதி செய்ய, சான்று பகர சாட்சியமாக நிற்பது விஞ்ஞானம், பேரண்டத்தின் அனைத்து துறைகளிலும் அவ்விஞ்ஞானத்தைக் கண்டறிந்த, பிரகடனம் செய்த விஞ்ஞானிகள் வரலாற்றில் காலத்தால் அடையாளம் காட்டப்படுகிறார்கள். சமூக விஞ்ஞானிகளும் அப்படித்தான் உருவாகிறார்கள். அவர்கள் சமூக புரட்சியாளர்களாக விளங்குகிறார்கள். அவர்கள் சித்தாதங்களையும், கோட்பாடுகளையும் புரிந்து கொண்டு அதனைச் செழுமைப்படுத்துபவர்களாகவே வாழ்கிறார்கள். அப்புரட்சியாளர்களின் சமாதியில் பிறப்பெடுப்பவர்களே அவர்களது வாரிசுகள். வழிவரும் தலைமுறையினர். புதிய சமூகத்திற்கு, புரட்சியாளர்கள் ரத்த சாட்சிகளாகவும், புதிய வரலாற்றின் ரத்த வரிகளாகவும் வாழ்கிறார்கள்.
இன்னொரு வேடிக்கை கேள்விப்பட்டாயா தோழா! வாரிசுகளை தன்வாழ்நாளிலேயே அடையாளம் காட்டிவிட வேண்டும் என துடிப்பவர்களும், வழிநடத்த வந்தவர் வாழும் காலத்திலேயே அடுத்த வாரிசு ‘‘நான் தான்’’ என அடையாளம் காட்டச் சொல்லி அரித்தெடுப்பவர்களும், அப்படிக் காட்டச் செய்துவிட வேண்டும் என அல்லும் பகலும் அலைமோதி கிடப்பவர்களும், அப்படிச் செய்ய வைப்பதற்காக எதையும் செய்ய சித்தம் கொண்டு தெரு நாய்களாக மட்டுமல்ல வெறிநாய்களாக அலையும் இன்றைய சமூகத்தில் சொத்துக்களை அபகரிக்கவும், சுகங்களை சூறையாடவும், கிடைத்ததை வாரிச்சுருட்டவும், அகப்பட்டதை அள்ளிக் கொள்ளவும், அடையாளம் காட்டப்பட நடக்கின்ற வாரிசு சண்டையை, அதனால் எழுகின்ற ஒலத்தை, புலம்பலை, ரத்தத்தால் அடையாளப் படுத்தப்படும் புரட்சியாளர்களின் வரலாற்றோடு கனவிலும் ஒத்திட்டு விடாதே தோழா!
பெரியார் தமிழகத்து மக்களைப் பார்த்துச் சொன்னார் பொய்மைக்கும், புரட்டுக்கும் மௌன சாட்சியாயிருப்பதை விட புதுமைக்கும், புரட்சிக்கும் ரத்த சாட்சியாய் மாறுங்கள் என்று.
ஓகோ! அது மக்களைப் பார்த்து, புரட்சியாளர்களைப் பார்த்தல்லவா சொன்னார்? என்று கேட்பவர்களை அடையாளம் தெரிகிறது. கொள்ளையர்களோடு கூட்டு சேர்ந்து, பங்கு போடுவதிலும், பாகப் பிரிவினை செய்து கொள்வதிலும் சண்டையிட்டுக் கொள்பவர்களுக்கு பெரியார் சொல்லவில்லைதான். ஆனால் உன் சண்டையை மறைக்க ஊர் சண்டைக்கு வரக்கூடாதல்லவா?
இந்திய துணைக்கண்டத்தில் இன்றைய புரட்சியாளனின் சித்தாந்தம் ‘பெரியாரீயம்’ என்பதை உரக்ககூவிடு தோழா! ஏன்?
அக்டோபர் 2003, தன்மானம்

மனித உருவில் புதிய வடிவமே போராளி
மனித உருவில் புதிய வடிவமே போராளி
இணைமிகு தோழா!
பாசறையில் பக்குவம் பெற்று களவாழ்வில் செயல்திறன் கொண்டு, பயிற்சியும் பக்குவமும் ஒரு சேர்ந்த வடிவமாய் போராளி உருவெடுக்கிறான். உண்மை, உழைப்பு, உறுதி, துணிவு, தொண்டு, இழப்பு, இத்துனையும் மொத்தமாய் கலந்த வடிவமல்லவா போராளி.
போராளி தெருச் சண்டைக்காரனல்ல, வீண் வம்புக்காரனல்ல, எத்தர்களின் எடுபிடிகள் அல்ல; அரைவேக்காடுகளின் அடியாட்கள் அல்ல; தன்னிச்சையாய், தான் தோன்றியாய், பட்டதையும் கெட்டதையும் செய்பவன் அல்ல; இரவல் மூளைக்கு ஏங்குபவனும் அல்ல; இறுமாப்பு கொண்டவனுமல்ல.
போராட்ட வடிவத்தை புதுவடிவமாய் கொண்டவன்; உருவத்தில் மனித உருவே கொண்டிருந்தாலும், அவனது உள்ளடக்கத்தில், தன்மைகளில் புதிய வடிவத்திற்கான அகக்கட்டமைப்பைக் கொண்டிருப்பவன். அவனது பேச்சுக்கள், எழுத்துக்கள், செயல்பாடுகளில், குறிப்பாக அவனது அணுகுமுறைகளிலும், அனுபோகத்திலும், அர்ப்பணிப்புக்களிலும் அவ்வுள்ளடக்கத்தின் பண்பாடுகள் பிரகாசிக்கும்.
இயற்கையை எதிர்த்து தன்னந்தனியனாகப் போராட முடியாத சூழலில்தான், தன்னந்தனியனாக தனது தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள முடியாது என்ற சூழலில்தான், தனது தேவைப்பூர்த்திக்கான பொருள் உற்பத்திகளை தன்னந்தனியாக செய்திட முடியாது என்ற சூழலில்தான் சமூகம் உருவெடுப்பது கட்டாயமாயிற்று என்பதை புரிந்திருப்பவன் போராளி.
தன்னந்தனியாக இருந்தாலும் சமூகத்தின் அங்கம் என்பதைப் புரிந்து சமூகத்திற்காக உழைப்பதும், சமூகம் அவனது தேவைகளைப் பூர்த்தி செய்வதும் அதில் பேதங்களுக்கு இடமில்லை என்பதையும் உணர்ந்திருப்பவன் போராளி.
இன்றைய சமூகம் வருணத்தால், சாதி மதங்களால், வர்க்கத்தால், பாலியல் வாழ்வால், பிளவுபட்டு, பேதப்பட்டு, உழைக்காமல், சமூக உழைப்பை உறிஞ்சி, சுரண்டி, திருடி ஆதிக்கபுரியில் வாழும் ஒரு கும்பலும், - உறிஞ்சிப்பட்டு, சுரண்டப்பட்டு, உரிமைகள் பறிக்கப்பட்டு, அடிமையாக்கப்பட்டுக் கிடக்கும் பெரும்பகுதி சமூகம், மொத்தமாய் சீர்குலைந்து கிடப்பதை தெரிந்து கொண்டிருப்பவன் போராளி.
தனி சிலரின் ஆதிக்க அராஜக வாழ்விற்காக, பெரும்பகுதி உழைக்கும் சமூகம் ஜீவனத்திற்கு பிழைக்க வேண்டிக்கிடக்கும் சூழலை, தலைகீழ் மாற்றிட, உழைப்பிற்கே மதிப்பு, உழைப்பின் படைப்பே சமூகம், அங்கே உளுத்தர்கள் நடமாட்டத்திற்கு வேலையில்லை என்பதை உணர்ந்து, உணர்த்திட தன்மானியாக உருவெடுத்திருப்பவனே போராளி.
அந்த போராளி தன்தேவை, தன்வாழ்க்கை, தன்விருப்பம் என்கிற நான், எனது, எனக்கு என்றவற்றையெல்லாம், நாம், நமது, நமக்கு என்ற சமூக வட்டத்திற்குள் அடக்கிக் கொண்டவன்; எனவே அவனிடத்தில் அர்ப்பணிப்பைக் காண முடியும்.
ஆனால், தான், தனது, தனக்கு என்ற தன் ஆசை, தனியாத ஆசையாகி பேராசையாய் உருவெடுத்து, தனியாதிக்கத்தை, சுரண்டலை ஒரு காலும் இழக்கமாட்டேன் என தடிதூக்கி நிற்கும் கும்பலிடம் அன்பு, பண்பு, பாசம், பரிவுகளைப் பார்க்க முடியுமா? அர்ப்பணிப்பு களுக்கு அங்கு என்ன வேலை?
ஒரு போராளி வாழ்க்கைப் பள்ளியில் தன்னை ஆயுட்கால மாணவனாக இணைத்துக் கொண்டிருப்பவன்; ‘எல்லாம் தெரிந்த ஏகாம்பரம் பனங்கொட்டையை கரடி முட்டை’ என்று கதைத்த கதை போல அல்லாமல் தன்னடக்கத்தை தலைமேல் கொண்டவன்; ஆனால் அவனிடம் தலைசாய்த்து, தண்டனிட்டு, கொத்தடிமைக்கு உத்திரவாதமாக்கிக் கொள்ளும் சோரகுணம் ஒருபோதும் தலைகாட்டாது. அவன் உல்லாசிகளுக்கும், சல்லாபிகளுக்கும் உயிர்க்கொல்லி.
பட்டம், பதவி, அதிகாரம், ஆணவம் என கூத்தடிக்கும் கூட்டத்திடம் சமூகம் சிக்கிச் சீரழிவதை கண்டு கொண்ட பின்பும், அந்த அக்கிரம, அநியாயக் கூட்டம் போராளிகளை அடையாளம் கண்டு அழித்தொழிக்க கங்கணம் கட்டி புறப்படுவதை கண்ணெதிர் கண்ட பின்பும், உணர்ச்சி கூட தட்டாமல் கிடப்போரை என்ன சொல்லுவது?
மந்தம், பிரமை, பிரேமை, சபலம், சஞ்சலம் என்பதா? மண்டூகம், மடத்தனம், மரமண்டை, மரக்கட்டை, சூடு சொரணை ரோஷம் இழந்த பிரேதம் என்பதா? இப்படிக் கிடப்பவர் களுக்கும் சேர்த்துத்தான் தன்னிழப்புக் கவசத்தை தரித்துக் கொண்டிருக்கிறான் போராளி என்பதாவது இவர்களுக்கு புரிய வேண்டாமா?
ஒரு போராளி தன்வாழ்நாளின் ஒவ்வொரு நாளும், கற்றலும் கற்பித்தலுமான நாட்கள் என உறுதிபூண்டிருப்பவன். அவன் யாரிடமிருந்து கற்கிறான்? தன்னோடு சமூகத்தில் வாழும் மக்களிடமிருந்துதான்; யாருக்குக் கற்பிக்கிறான்? தன்னோடு சமூகத்தில் வாழும் மக்களுக்குத்தான். என்ன தோழா? வேடிக்கையாயிருக்கிறதா? ஆம்! அந்த போராளிக்கு ஆசிரியர்கள் மக்கள்; மக்களுக்கு போதகர் அந்த போராளி. உண்மையல்லவா?
அந்த போராளி கற்கும் போது மக்கள் தளமாயிருக்கிறார்கள்; போராளியின் போதனைக்குப் பின்தளமாயிருந்த மக்கள், களமாய் மாறி வரலாறு படைக்கிறார்கள்.
இந்த பட்டறிவுப் பாடம், பணக் கொழுப்பும், தலைக் கொழுப்பும் கொண்ட கூட்டத்திற்கு புரியுமா? ஒரு காலும் புரியாது. அவர்கள் விலைக்கு வாங்குவதில் வல்லவர்கள்; பழக்கப்பட்டவர்கள்; போராளிகளையும் விலைபேசி விடலாம் என நினைப்பதில் வியப்பில்லை. ஆனால் போராளிகள் விலைபோக மாட்டார்கள். விலை கொடுத்தே வெல்வார்கள். யாரோ போராளி விலை போய்விட்டானாம் என்ற புரளி கேட்டால், அடித்துக் கூறலாம் அவன் போராளி அல்ல என்று.
ஏமாந்த பலர், எச்சில் பிழைப்புக்கு நடிப்பவர்களை பக்குவம் பெற்றவர்களாகவும், தில்லுமுல்லு தெகிடுதித்தம், ஏடாகூடம், இசகு பிசகில் கை தேர்ந்தவர்களை செயல் வீரர்கள் என்றும்; மானம் மரியதையிழந்து பேரம் செய்து பிழைக்க வந்தவர்களைப் போராளிகள் என்றும் விளம்பரம் செய்து பழக்கப்பட்டவர்கள் அல்லவா எதிரிகள். போராளி ஒருகாலும் பேமாளியாக மாட்டான்; கோமாளி ஒருகாலும் போராளியாக முடியாது. அரிதாரம் கலையும் போது அல்லது கலைக்கப்படும் போது அடையாளர் காணப்படுவார்கள்.
ஒரு போராளி வார்த்தைகளை ஆளுமையோடு வெளிப்படுத்தும் ஆற்றல் கொண்டவனே தவிர, வார்த்தைகள் தன்னை பேச அனுமதித்து, வாய்ச் சவடால், வாய்க்கொழுப்பு, வக்கனை பேசுபவனல்ல; சித்தாந்தவாதிகள் என்ற பெயரில் சித்த பிரமை கொண்டு உளறுவதையும், முற்றும் தெரிந்தவர்கள் என்ற போர்வையில் முழு மோசடி சொற்பட்டங்கள் பறக்கவிடுவதையும், செய்வதெல்லாம் சமூக துரோகம் தவிர வேறல்ல என தெரிந்தும், அதனை நியாயப்படுத்த வார்த்தை ஜாலமாடுவதையும் மலிவாகப் பார்க்க முடிகிறதல்லவா?
ஆனால், போராளி குறைவான பேச்சு, நிறைவான செயல்; தேவையற்று பேச்சே இல்லை. செயல், செயல், செயல் மட்டுமே என சமூகத்திற்கு உழைக்கும் பாட்டாளி; படைப்பாளி.
முழு சமூகமும் அவனை ஏற்றுக்கொண்டிருக்கிறதா என அவனுக்கு கவலையில்லை. அப்படி ஏற்கும் காலம்வரை காத்திருக்க வேண்டிய கட்டாயமும் அவனுக்கு இல்லை. கொண்ட ஈடுபாட்டில் தனக்கு லாபமா நஷ்டமா என கணக்கு பார்க்கவும் அவன் விரும்பவில்லை. அவன் கொண்ட பார்வை ஒரே பார்வை; புதிய சமுதாயத்தை, தலைகீழ் மாற்றம் கொண்ட சமூகத்தை, பேதமற்ற சமூகத்தை உருவாக்குவது. அதில் மரணம் என்றால் அவனுக்கு மகிழ்வே. காரணம் அவனை தொடர்ந்து வரும் போராளிகள் அவனது சமாதி மீது காலூன்றி நிற்க, தளமாகிவிட்டானல்லவா?
அவனுக்கு பயமில்லை; ஓய்வில்லை; மூப்பில்லை; சாவில்லை; இந்த இல்லாமைகளை இல்லாததாக்கிக் கொண்டவனல்லவா போராளி; எப்படி?
எதிர்பார்த்தே ஆயத்தமாய் செயலில் இறங்குகிறான்; எனவே அதனை எதிர்நோக்கும் போது அச்சமில்லை; வாழ்வையே போராட்டமாக்கிக் கொண்டவன். போராட்ட மாற்றத்தில் அயர்வைக் களைந்து விடுகிறான். இளசாயிருந்தவன் பட்டறிவால் இளமை பெறுகிறான்; உடலால் முதமையடைந்தாலும் உள்ளத்தால் முதிர்ச்சி பெறுகிறான்; அவனுக்கு வயதென்ன குறுக்கீடு? உயிர் வாழும்போது வரலாறு படைக்கின்றான். உயிர் போனப்பின் வரலாற்றில் வாழ்கிறான் அவனுக்கு ஏது மரணம்?
போராளி நிராயுத பாணியல்ல; சிந்தனை எனும் கூர்மையான ஆயுதத்தோடும், செயல் என்ற உடலோடு ஒட்டிவிட்ட கவசத்தோடும், புரட்சி அமைப்பு என்ற எதிரிகளும் துரோகிகளும் எண்ணிக்கூட பார்க்க முடியாத அரனோடும் அய்க்கியம் கொண்டவனல்லவா போராளி.
அமைப்பு என்றவுடன், ஆதாயம் தேட, எத்திப் பிழைக்க, ஏமாற்றிச் சுரண்ட, பணம் பட்டம் பதவி என்ற முதலீட்டில் சூதாட்டம் நடத்த, சமூக விரோத, துரோகக் காரியங்களுக்கு போர்வையாக்கிக் கொள்ள போட்டுக் கொள்ளும் கூடாரம் அல்ல.
கருத்தால், செயலால், நோக்கத்தால், உணர்வால் ஒன்றிவிட்ட போராளிகளால் உறுதிசெய்யப்பட்டு, அப்போராளிகளுக்கு உத்திரவாதம் அளிக்கும் உயிர்த் துடிப்புள்ள முகாமே அப்புரட்சியமைப்பு. பண்பு மாற்றம் பெற்ற பாசறையே அது.
தெளிவான சித்தாந்தம்; வலிவான இலட்சியம்; வளமான கொள்கை; பலமான அமைப்பு; தளமாக மக்கள்; களம் காண சகாக்கள்; இம் மொத்தத்தின் கூடடு சக்தியை, ஆற்றலை, திறனை எது கொண்டு அளக்க வேண்டும்? அளக்க முடியும்?

புரிந்திடு - பொருந்திடு - மாற்றிடு - போராடு

தமிழர் தன்மானப் பேரவை - களப்பணியாளர்களை உருவாக்கியளிக்கும் பாசறை என்பதையறிந்தே, அர்ப்பணிப்புத் தன்மையோடு அதில் நுழைந்து, கற்றும் பெற்றுமான பக்குவத்தில் தன்னந்தனியாக அல்லாது, குழு உணர்வு கொண்ட வடிவமாக கூட்டுணர்வு கொண்ட குழுவாக நாம் ஒவ்வொருவரும் ஆக்கப்பட்டிருக்கிறோம் என்பது நம் உறவையும், உறைவிடத்தையும் உணர்த்துகிறதல்லவா?
கருத்து, செயல், சிந்தனையில் மேலும் வலுவாகிட, வடிவுற, சிந்தனையால் செயலை ஒழுங்குபடுத்தி, செயலால் சிந்தனையைச் செழுமைப்படுத்தி களப்பணியில் ஈடுபடும் போது நம் திறன் வெளிப்படுகிறது. அச்செயல் திறனைக் கொள்ளும்போது தான், நாம் செயல் வீரர்களாக தகுதி பெறலாம். அந்த திறனைப் பெறுவது என்பது களப்பயிற்சியில்தான் கருவுற்று வளரத் தொடங்கும். கூட்டுணர்வோ அல்லது குழு உணர்வோவான வடிவம் தான், கையிலெடுக்கும் அல்லது ஈடுபடுத்திக் கொள்ளும் ஒரு பிரச்சனையில், எதிர்படும் அல்லது எதிர்கொள்ளும் ஒரு பிரச்சனையில், எதிர்வரும் அல்லது எதிர்நோக்கும் ஒரு பிரச்சனையில் தீர்வு காண அது எடுக்கும் நிலைப்பாடே வெற்றிக்கு அடிப்படையாகும்.
நிலைப்பாடற்ற ஈடுபாடு, உணர்ச்சி வயப்பட்டதே தவிர உணர்வு வயப்பட்டதல்ல. உணர்ச்சி அளவு மாற்றத்தால் ‘வெறி’ யாகிவிடும். வெறி தோல்விக்கு அறிகுறி. உணர்ச்சி, அறிவால் செழுமைப்படுத்தப்பட்டால் அது உணர்வாகும். உணர்வு அளவு மாற்றத்தால் ‘எழுச்சி’யாகிவிடும். எழுச்சி வெற்றிக்கு அறிகுறி. அத்தகைய நிலைபாடுகளை எடுக்கக்கூடிய திறன்தான் தகுதி பெற்ற செயல் வீரர்களை அடையாளம் காட்டுகிறது.
அச்செயல் வீரர்கள் களப்பயிற்சியில் காணும் வாழ்வு களவாழ்வு, களவாழ்வு களவு வாழ்வல்ல, மாறாக கட்டமைந்த வாழ்வு, அது கட்டிலறையில் களிப்பூட்டும் காம போக வாழ்வு அல்ல. மாறாக சுய இழப்புக்கு பக்குவப்பட்ட சுய மரியாதை வாழ்வு, அது அராஜக, அலங்கோல, அடாவடி வாழ்வல்ல, மாறாக அர்ப்பணிப்புத் தன்மை கொண்ட அரவணைப்பு வாழ்வு. இதுதானே நம் வாழ்வாக இருக்க வேண்டும்.
நிலைபாடு எடுப்பது என்றால் என்ன? வாழ்கின்ற சமூகத்தில், நிலவுகின்ற சூழலை சரியாகப் புரிந்து கொண்டு, அச்சூழலில் தன்னைச் சரியாக பொருத்திக் கொண்டு, இலட்சிய நோக்கிற்குகந்த சூழலை உருவாக்க நிலவுகின்ற சூழலை மாற்றவும், இச்சூழலில் தோன்றியுள்ள பிரச்சனைக்கு தீர்வு காணவும் போராட எடுக்கும் முடிவே நிலைபாடு.
சூழலைப் புரிந்து கொள்வது, சூழலில் பொருத்திக் கொள்வது, சூழலை மாற்றுவது, நிலைபாடு கொள்வது, போராடுவது ஆகிய அம்சங்களைக் கொண்டதே செயல்திறன். இச்செயல் திறனை கொண்டவனே செயல்வீரன். இச்செயல்வீரர்களாக நாம் ஆக வேண்டாமா?
சூழலை புரிந்து கொள்வது என்றால், தான் கண்டதை, கேட்டதை, சுவைத்ததை, சொன்னதை, பட்டதை, படித்ததை, யூகத்திலும், கற்பனையிலும் கலவை போட்டு சிருட்டித்தக் கொள்வது என்று கருதுகிறவர்கள் உண்டு. அவர்கள் அஸ்தி வாரமில்லாமலே அறுபது மாடி கட்டப்பார்ப்பவர்கள்.
இயற்கை, சமூகம், சிந்தனை ஆகியவற்றை உள்ளடக்கிய பேரண்டத்திற்கப்பால் எதுவும் இல்லை. எப்போதும் இருந்ததில்லை. இதற்குட்பட்டு இருப்பவை எதுவும் ஏகாந்தமாய் இருப்பதில்லை. எப்போதும் இருக்க முடியாது. இருப்பதை எதுவொன்றும் படைத்ததில்லை, ‘இருப்பு’ ஒன்றிற்கே படைக்கும் ஆற்றல் உண்டு. இது என்ன புதிர் என்று எண்ணுகிறாயா? இது பற்றி இன்னொரு சந்தர்ப்பத்தில் பார்ப்போம். இங்கே சுட்டிக்காட்ட விரும்பியது, மனிதன் உள்பட எந்தவொரு இருப்பும், தன்னந்தனித்து ஏகாந்தமாய் இருக்கவில்லை. விரிந்த அல்லது குறைந்த பரப்பில், இடைவிடாது ஒன்றோடொன்று பாதிப்பு நிகழ்த்திக் கொண்டிருக்கும் எண்ணற்ற சுற்றுச் சார்புகளுக்கு மத்தியில் தான் இருக்க முடியும். இருந்து தீர வேண்டும். சமூகத்தின் நிலையும் இதுதான் என்பதையேயாகும்.
அந்தச் சுற்றுச்சார்புகளை, அவற்றிற்கிடையேயும், அவற்றோடும் உள்ள முரண்பாடுகளை எத் தன்மையான எவ்வகை முரண்பாடுகள் என்பதை, அம்முரண்பாடுகளுக்கிடையேயான போராட்டங்களை, அப்போராட்டத்தின் தன்மைகளை, வடிவங்களை, ஒட்டு மொத்தமாக புரிந்து கொள்வதுதான் சூழலைப்புரிந்து கொள்வது என பொருள்.
எதனை, நிர்மாணிக்கும் லட்சியத்தோடும், நோக்கத்தோடும் களம் வந்தோமோ, அதனை நிர்மாணிக்கத் தக்கச் சூழலை உருவாக்கவும், அதற்கு எதிராக நிலவுகின்ற சூழலை மாற்றிடவும், அந்த மாற்றத்திற்கான போராட்டத்தை நடத்திடவும், இருக்கின்ற சூழலை புரிந்து கொள்ள வேண்டியது தவிர்க்க முடியாதது. தட்டிக்கழிக்கவும் கூடாதது.
இப்பேரண்டத்திலுள்ள எந்தவொன்றும் இயங்காதிருப்பதில்லை. இருப்பின் இலக்கணமே இயக்கம். இயங்கி வருகின்ற எந்தவொன்றும் மாறாதிருப்பதில்லை. மாறாதிருக்கும் ஒன்று மாற்றம் மட்டுமே. மாறுகின்ற எந்தவொன்றும் வளராதிருப்பதில்லை. மாற்றத்தின் வடிவமே வளர்ச்சி, வளர்ச்சி, எக்காலும் பின்னோக்கி சென்றதில்லை, முன்னோக்கி மட்டுமே செல்லும். முன்னோக்கிய வளர்ச்சியை தற்காலிகமாக தடுக்கலாம், தேக்கலாம், முடக்கலாம் ஆனால் அதனை அழித்திட முடியாது. அந்த தற்காலிக தேக்கம்கூட வளர்ச்சி, அந்த தடுப்பை உடைத்தெறிய எடுத்துக் கொள்ளும் அவகாசமே தவிர வேறல்ல. இதை மட்டும் இப்போதைக்கு மனதில் பதியவைத்துக் கொள்வோம். இது பற்றி பிறிதொரு சமயத்தில் பார்ப்போம்.
நிலவுகின்ற சூழலை மாற்ற போராடுவது நமது கடமையல்லவா? இந்தச் சூழலில் வாழ்கின்ற சுற்றுச் சார்புகளிலே நாமும் இருப்பதால் இது நமது கடமையாகிறது. கடமை உரிமையின் மறுபக்கமல்லவா? அது துண்டாடப்பட்டு கிடக்கும் சூழலில் உரிமையை பெறுவது கடமையாகிறது. உரிமையை பெற்றாலே விடுதலை கிட்டும். விடுதலை கிடைத்தாலே சுதந்திரம் மலரும். கடமையும் உரிமையும் இரண்டறக் கலந்ததல்லவா சுதந்திரம். எனவே சுதந்திர தாகம் சூழலை மாற்ற, போராட சக்தியூட்டுகிறது.
தனிநபர் நலனுக்கும் ஆதிக்கத்திற்கும் சுரண்டலுக்குமான அநியாய, அட்டூழிய, அடாவடி நடவடிக்கைகளைக் கூட போராட்டம் என சித்தரிக்கும் கேவலமான போக்கை இன்றைய காலத்தில் பார்க்கிறோமல்லவா? அதுவெல்லாம் பேயாட்டமே தவிர போராட்டமல்ல.
ஒரு சமூகப் பார்வையோடும், லட்சிய கண்ணோட்டத்தோடும், உரிமை, விடுதலை, சுதந்திரத்திற்கான உணர்வோடும், அர்ப்பணிப்புத் தன்மையோடும், திட்டமிட்டு, ஒழுங்குப் படுத்தப்பட்டு, வரையறுக்கப்பட்டு நடத்தப்படும் மோதுதலே போராட்டம். இதன் உயர்ந்த கட்டமே போர்.
நிலவுகின்ற சூழலை புரிந்து கொண்டு, அதை மாற்றுவதற்காக நடத்தப்படும் போராட்டத்தை எங்கிருந்து நடத்துவது? மாற்றப்பட வேண்டிய சூழலின் மையத் திலிருந்தே, மாற்றத்தை விரும்பாத, மாற்றத்தை தடுக்கக்கூடிய நிலவும் சூழலை பாதுகாக்கின்ற சுற்றுச் சார்புகளுக்கு மத்தியிலிருந்து கொண்டே அச்சூழலை மாற்றப் போராடியாக வேண்டும். நிலவுகின்ற சூழலில் தன்னைப் பொருத்திக் கொண்டு இந்த போராட்டத்தை நடத்தியாக வேண்டும்.
நீ உற்றுப் பார்ப்பது புரிகிறது. ஆம், களவாழ்வு கடினமானதுதான், களப்பணியை கண்டு மலைப்பவர்கள் அதற்கு பயிற்சி பெறாதவர்கள், பெற விரும்பாதவர்கள் அவ்வாழ்வை நடத்துவது கடினம்தான். ஆனால் அது நமக்கல்லவே.
வாழ்க்கையை போராட்டமாக, போராட்டத்தை வாழ்வாக அமைத்துக் கொண்டு, ஓய்வின்றி போராட்டத்திலும், ஓய்வு கொள்வது போராட்ட மாற்றத்திலுமாக வாழ்வு கொண்டால் நமக்கென்ன மலைப்பு, களைப்பு.
சூழலில் பொருத்திக் கொள்வது என்றால் என்ன? நிலவுகின்ற சூழலில் தான், தனிமைப்பட்டு விடாமலும், நிலவுகின்ற சூழலில் தன்னை கரைத்துக் கொள்ளாமலும், நிலவுகின்ற சூழலில் தனது தனித்துவத்தை இழந்துவிடாமலும் இருந்து கொண்டு அச்சூழலை மாற்றப் போராடுவது என்று பொருள்.
தனித்துவத்தின் மகத்துவத்தை எடுத்துணர்த்தி, அதன் பக்குவத்திற்கு உதாரணமாய் தன்னை அமைத்துக் கொண்டு, அந்த உறுதியின் பால் சுற்றுச் சார்புகளை ஈர்த்தெடுத்து, நிலவுகின்ற சூழலை நிரந்தரப்படுத்த, நியாயப்படுத்தும் உதிரிகளை ஓரங்கட்டி, ஒதுக்கித்தள்ளி, அந்த உதிரிகள் ஒன்றுபட்டு எதிரிகளாய், ஏவல் பூதங்களாய் எதிர்பட்டால், எதிர்த்து நின்று அவர்கள் உக்கிரமமாகி ஓங்காரமிட்டால் எந்த அக்னி பரீட்சைக்கும் ஆயத்தமாகி, சூழல் மாற்றமே புதிய வாழ்வின் வடிவ மாற்றம் என உணர்வு பெற்றோரை ஒருமை கொள்ளச் செய்து, அவர்கள் நம்பிக்கை கொள்ளவும், அவர்களை நம்பவுமான நிலைமையை உருவாக்குவது தானே புதிய சூழலுக்கான கரு.
இந்த பொருந்துதலை புரிந்து கொள்ளாமல், தனிமைப்பட்டு போகிறவன் நடைப்பிணம், தன்னை கரைத்துக் கொள்ளுகிறவன் மிதவை பிணம், தனது தனித்துவத்தை இழந்தவன் தற்கொலைப் பிணம்.
புதியச் சூழலின் கருவை உருவாக்க ஒருவனால் குத்தப்படும் முத்திரை, எத்தனையோ, சோதனை, சவால்களை, இன்னல், இடையூறுகளை, கசப்புக்கள், இழப்புக்களை எதிர்கொண்டு பெற்ற வெற்றியல்லவா? அந்த வெற்றிக்குரியவன்தான் செயல் திறன் கொண்டவன். செயல்வீரன். அத்தகைய செயல் வீரர்களின் எளிய குடிலாக, உறுதிப் படுத்தப்பட வேண்டியது தானே தமிழர் தன்மானப் பேரவை.
புரிகிறதா? ஏன் விழிக்கிறீர்கள்? நாம் மக்களிடமிருந்து கற்றுக் கொண்டதை தானே நினைவுபடுத்துகிறேன்.
ஆகஸ்ட் 2003, விடுமடல்-4

களப்பணிக்கு மூலதனம் பணமா? பக்குவமா?
களப்பணிக்கு மூலதனம் பணமா? பக்குவமா?
இணைமிகு தோழா!
தன்மானச் சமுதாயத்தைச் சமைப்பது என்ற லட்சியத்தோடும், இன நலம், இன பாதுகாப்பு, இன கண்ணோட்டம், இன உரிமை என்ற பார்வையிலான சமூக, அரசியல், பொருளாதார பண்பாட்டுக் கொள்கைகளோடும், இன விடுதலை என்ற இழையோட்டமான நோக்கத்தோடும் ஒரு இனமானப் புரட்சியின் மூலம் ஒரு இனமானக் குடியரசை நிறுவுவதற்கான திசை வழியில், தமிழின மக்களை ஓரணியில் திரட்டுவதற்கான பெரும் பணியில் நாம் ஈடுபட்டிருக்கிறோம்.
இப்பணிக்கான பாதை, சொகுசு வாழ்வு, சுகபோக குடியிருப்பு, மேனா மினுக்கிகள் புடைசூழ எச்சில் வாழ்க்கைக்கு தன்னையே விற்றுவிட்ட எடுபிடிகள் முன் ஓட, எஜமான விசுவாசிகள் பின் தொடர, சிகப்புக் கம்பள விரிப்பின் மீதான நடை, ‘துட்டு’ என்றவுடன் தட்டுகெட்ட மட்டரகப் பேர்வழிகளின் துதிபாடல் போன்றவைகளோடு கூடிய ராஜபோக பாட்டையல்ல.
அதற்கு முற்றிலும் மாறான, கல்லும் முள்ளும் நிறைந்த, கரடுமுரடான, நாட்டினுள் நடமாடும் காட்டு மிருகங்கள் எதிர் கொண்டுபாய, தன் மீதும் தன் குடும்பத்தின் மீதும் இம்முனைத்தாக்குதல்தான் என சொல்ல முடியாத எம்முனைத் தாக்குதலுக்கும் ஈடு கொடுத்து நடமாடி, ஒரு தலை கீழ் மாற்றம் காண, நீண்ட நெடிய தூரம் கடந்தாக வேண்டிய, அல்லல் தொல்லைகளும் அவதிகளும் நிறைந்த பாதை.
இந்த பாதையில் பயணம் செய்ய நினைக்கும் போதே ஒரு பூதாகாரமான அச்சம், ஒரு தேக்கம், ஒரு விரக்தி, ஒரு சபலம் மனதைக் குடையும். அதற்காகவே எதிரிகளால் திட்டமிட்டே ஏற்படுத்தப்படும் சலனங்கள், எடுத்து வீசப்படும் எச்சில் இலைகள், அவ்விலையில் காணப்படும் எலும்புத் துண்டுகள், மோக, ரசிக வாழ்க்கைக்கு கவர்ந்திழுக்கக் காட்டப்படும் மோகினியாட்டங்கள் போன்றவை எல்லாம் சேர்ந்து ஒரு நப்பாசையூட்டும்; மனதை ஊசலாடச் செய்யும்; நமக்கேன் தொல்லை; ஊர் வம்பு; இருப்பதையும் கிடைப்பதையும் கூட இழந்து, இந்தத் தலைமுறையில் முடியுமா என தெரியாத ஒன்றிற்காக ஏன் கஷ்டம்; நாமுண்டு நம் வேலையுண்டு நம் வீடு உண்டு என கிடந்திடுவோம் என்றெல்லாம் தடுமாறச் செய்யும்.
அந்த நிலை வந்துவிட்டால் தனி நலம் தலைதூக்கி, சமூகம் பற்றிய சிந்தனை மங்கி, சமூகம் வாழாமல் தான் மட்டும் வாழ்ந்திட முடியும் என கருதி, அந்த வாழ்வு எப்படியும் இருக்கலாம் என எண்ணி இறுதியாக எதிரிகளுக்கு அடிமைப்படும் நிலைக்கு தள்ளப்படுவார்கள் என்பது அனுபவப் பாடம். இப்படி சமூகத்திலுள்ள ஒருவொருவரையும் வீழ்த்தி விட்டால் சமூகமே தமது சுரண்டலுக்கும் ஆதிக்கத்திற்கும் அடிபணிந்து கிடக்கும். வருணத்தால், வர்க்கத்தால் பேதப்பட்ட சமூகம் சேதப்படாமல் பாதுகாக்க நினைக்கும் சுரண்டும் கும்பலின் சுகபோக வாழ்விற்கு அடித்தளமாகும் என்பது அவர்கள் கற்ற அழிவுப் பாடம்.
இப்படிச் சமூகம் என்ற பார்வை மங்கி தான் மட்டுமே என்ற குருட்டுத்தனம் ஏற்பட்டுவிட்டால், ‘நாம்’ என்கிற உணர்வு மறைந்து ‘நான்’ என்ற உணர்வு தலைதூக்கி விட்டால், அது வரலாற்றுக்குச் செய்யும் துரோகம். எதிர்கால சந்ததிகளுக்கும் தலைமுறைக்கும் தோண்டி வைக்கும் சவக்குழி என்பது மட்டும் திட நிச்சயம்.
மக்களைத் திரட்டும் பணி பற்றி மற்றொரு சந்தர்ப்பத்தில் பார்ப்போம். இந்த கடிதத்தில் நான் சொல்ல வந்ததது அந்தப் பணிக்கு இந்தச் சமூகத்தில் நாம் நம்மை பக்குவபடுத்திக் கொண்டோமா? அப்படி பக்குவப்படுத்திக் கொண்டவர்களின் பாசறையாக தமிழர் தன்மானப் பேரவை உருவாக வேண்டும் என உறுதி கொண்டுள் ளோமா? என்பது குறித்துத்தான், அப்படி நம்மை பக்குவப்படுத்திக் கொள்ள வேண்டும்; பேரவையை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும் என சொல்லத்தான்.
அய்ம்புலன்களால் அறிதல் தொடங்கி, பால பாடங்களைப் பட்டறிவால் கற்றுக் கொண்டு, பட்டறிவாளர் பாடங்களைப் படிப்பறிவால் புரிந்து கொண்டு, பரிசோதனையறிவால் படிப்பினைகளைப் பெற்றுக் கொண்டு, பழக்க அறிவால் பயிற்சியில் உறவு கொண்டு, மொத்த ஆய்ந்தறிவால் பகுத்தறிவை எட்டிவிட்டால் நாம் பக்குவத்தை தொட்டு விடுவோம். பகுத்தறிவு என்பது வெறும் ஆறாவது அறிவு என்று மட்டும் அர்த்தப்படுத்திக் கொள்ளக் கூடாது. அந்த பகுத்தறிவின் பாதையைத்தான் சிந்தனைப்போக்கு, சித்தாந்தம் எனக் கூறுகிறோம். சித்தாந்தம் செயலுக்கு வழிகாட்டி; செயலுக்கு வழிகாட்டாத சித்தாந்தம், வேதாந்தம் அல்லது வறட்டுத்தனம். சித்தாந்த தெளிவற்ற செயல் ஆச்சாரம் அல்லது குருட்டுத்தனம்.
இந்த அடிப்படையில், தமிழர் தன்மானப் பேரவை ஏற்றுக் கொண்டிருப்பது, இந்திய துணைக்கண்டத்தில் செழுமை படுத்தப்பட்ட மார்க்ஸீயமே, ‘‘பெரியாரியம்’’ என்ற சித்தாந்தம். நம்முடைய ஒவ்வொரு செயலுக்கும் பின்னால் பெரியாரீயம் உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறதா அல்லது நழுவிடப்பட்டிருக்கிறதா என புரிந்து கொண்டால் நாம் பக்குவத்தை தொட்டுவிட்டோம். செயலுக்கு பின்னால்தானே சித்தாந்தம் செழுமைப் படுத்தப்பட்டிருக்கிறதா என்பதை புரிந்து கொள்ள முடியும். அது மட்டுமல்ல செயலுக்குப் பின்னால்தான் செய்த தவறுகள் கூட தெரியும். அந்தத் தவறுகளை சீக்கிரத்தில் புரிந்து கொண்டு சுலபமாக திருத்திக் கொள்வதுதானே புத்திசாலித்தனம். தவறு செய்வது மனித இயல்பு. தவறே செய்யாதவன் செயலே புரியாதவன். தவறை சரிபடுத்திக் கொள்ளாமல் நியாயப்படுத்தி விடாக்கண்டனாக இருப்பவன் தெரிந்து தவறு செய்த குற்றவாளியாவான். அவன் பெரியாரீயத்தின் விரோதியாகவும் மாறிவிடுகிறான்.
இப்படி பக்குவத்தைத் தொட்டுவிட்டால் மட்டும் போதாது. மக்களை ஈர்த்தெடுத்து, வென்றெடுத்து வழி நடத்த வேண்டாமா? அதில்தானே நமது பக்குவத்திறன் வெளிப்படும். அல்லது பக்குவத்தை தொட்டு...தொட்டு விட்டதாயல்லவா முடியும்?
அப்படி மக்களை ஈர்த்தெடுப்பது என்பது ஒரு மாயாஜால வித்தைக்காரன் மோடி வைத்தெடுப்பதை பார்க்க கூடும் கூட்டமா? ஒரு கம்பங்கூத்தாடி பிச்சையெடுக்க சிறு பிள்ளைகளைத் தயார் செய்து, நடத்திக் காட்டும் கண்கட்டு வித்தைகளைப் பார்க்க சேரும் கூட்டமா? சர்வ நோய்களுக்கும் சர்வரோக நிவாரணி இந்த அற்புத லேகியம் என கதையளக்கும் மருந்து விற்பவனைச் சுற்றி நின்று பேதலிக்கும் கூட்டமா?
அது மட்டுமல்ல, சோற்றுக்கில்லாமல் சோர்ந்து நின்றாலும் முட்டி மோதி, முண்டியடித்து சினிமா கொட்டகையில் நுழைந்து அனுபவிக்க முடியாததையெல்லாம் பார்த்து ரசித்து, ஏக்கப் பெருமூச்சு விட்டு வீடு திரும்பும் கூட்டமா? அல்லது அரசியல் மேடைகளுக்கு எதிரே கூடி உட்கார்ந்து, எனக்கல்ல ஊருக்கு உபதேசம் என்று உரக்கக் குரலெடுத்து கர்ஜிக்கும் வீர வசனங்களைக் கேட்டு, எல்லோரும் தட்டுகிறார்கள் நானும் தட்டினேன் என கை தட்டிவிட்டு எழுந்து ஒட்டிய மண்ணையும் ஓங்கி தட்டிக் கொண்டே, கேட்டதை மறந்துவிட்டு நாளைப் பாட்டைப் பற்றிய சிந்தனையில் மூழ்கித்திரும்பும் கூட்டமா? அல்லது, தேர்த்திருவிழாவில் தெய்வ தரிசனம் பெற சென்று, நெரிசலில் சிக்கி மிதிபட்டு, கண்ட இடங்களில் இடிபட்டு, இடிப்பதற்காகவே வந்தவர்கள் இஷ்டபூர்த்தி செய்வதை கண்டு, விடுபட்டு, கையூட்டு பெறாதவர்கள் நாட்டில் எங்குமே இல்லை; அதற்கு கடவுளும் விதிவிலக்கல்ல என காணிக்கைச் செலுத்தி விட்டு, உயிரைக் காக்க ம...ரையும் கொடுத்து, கருதிய காரியம் கைகூடும் என்ற ஆசையில் குடும்பத்துடன் குதூகலிக்கிறார்களே அந்த கூட்டமா?
அல்ல ... அல்ல... தோழா! அதுவெல்லாம் வென்றெடுக்கப்பட்ட கூட்டமல்ல. வீணர்களின் வலையிலே சிக்கிச் சீரழியும் பெருங்கூட்டம். அது வரலாறு படைக்கும் கூட்டமல்ல. வழி தெரியாது தடுமாறித் தவிக்கும் கூட்டம். நாம் சொல்லுவதோ வரலாறு படைக்கும் கூட்டம். எண்ணிக்கையில் அல்ல என்றாலும் எண்ண உறுதியிலும் எதிரிக்கு எதிரான எழுச்சியிலும் திரளும் படை. திக்கெட்டும் இருள் சூழ திணறிக்கிடப்பவரை திசைமாறி, வழிமாறி தட்டித்தடுமாறி, தடம் மாறி, தறிகெட்டு நிற்பவரை ஓரணியில் திரட்டும் படை. அந்த படையைப் படைக்கும் படைப்பாளியாக, நாம் திறன் கொண்டால் தான் நாம் பக்குவத்தை தொட்டுவிட்டோம் என்பதோடல்லாமல் நாம் பக்குவத்தை பெற்று விடலாம் என்ற நிலை வரும்.
இதற்கெல்லாம் மூலதனம் வேண்டாமா? முதலீடு செய்ய வேண்டாமா? அதில் ஆதாயம் பெருக்க வேண்டாமா? என சிலர் கேட்பது புரிகிறது. ஆம் தோழா! வேண்டும். நிச்சயம் வேண்டும், அவசியம் வேண்டும். கண்டிப்பாய் வேண்டும்.
பணமா? பதவியா? அதிகாரமா? பகட்டு பங்களா வாழ்வா? ஏடுபிடிகள் கூட்டமா? குண்டர்கள் கும்பலா? இந்த மூலதனங்களுக்கெல்லாம் நம்மிடம் வழியுமில்லை; அதுவெல்லாம் நம் வழியுமல்ல; நம் வாழ்வுமல்ல. நாம் பெற வேண்டிய மூலதனங்கள், தன்னறிவு, தன்னம்பிக்கை, தன்னுறுதி, தன்னூக்கம், தன் முயற்சி, தன்மானம், தன்னடக்கம் அவ்வளவுதான், அவ்வளவே தான்.
பாதாளம் வரை பாயும் பலம் பெற்ற பணம், ஒருவனது தன்னுறுதியைத் தாண்டி அடியெடுத்து வைத்திடுமா? எதையும் செய்திட முடியும் என்று எக்காளமிடும் பதவி, ஒருவனது தன்னம்பிக்கைக்கும் முன் தலைகாட்ட முடியுமா? எவராயிருந்தாலும் அடக்கி ஒடுக்க முடியும் என கொக்கரிக்கும் அதிகாரம் ஒருவனது தன்ஊக்கத்திற்கு முன் தலைதூக்க முடியுமா? கூலிக்கு மாரடிக்கும் குண்டர்களின் கூட்டமெல்லாம் தன்னிழப்பு தன்மை கொண்ட தொண்டர்களிடம் தாக்குபிடிக்குமா? எஜமானர்களின் ஏவல் நாய்களான எடுபிடிகளெல்லாம், தன் முயற்சி கொண்ட தன்னறிவுக்காரனிடம் தலை நிமிர்ந்து நின்றிடுவாரா? பங்களா, பகட்டு, படாடோப வாழ்வெல்லாம் தன்மான வாழ்வின் கால் தூசியை அண்ட முடியுமா? எண்ணிப்பார் தோழா! உண்மை வரலாறும், உலக நடப்புக்களும் உணர்த்துவது இதைத்தானே? இந்த மூலதனங்கள் நம்மிடம் இல்லையா? கருத்தாலும், கரத்தாலும் உழைக்கும் ஏழை எளிய இனமக்களின் புதையலாய் இவை கிடப்பதை உணர முடியவில்லையா? சற்று நிதானமாகத் தோண்டிப் பார்த்தால் கண்டறிய முடியாததா? அதனை கையில் எடுத்துவிட்டால் அதனை எதிர்கொள்ளும் சக்தி ஒன்றுண்டா?
இம் மூலதனங்களை உணர்ந்துவிட்டாலும், கண்டு விட்டாலும், எடுத்து விட்டாலும் நாம் தாண்டிக் குதிக்க மாட்டோம்; தறிகெட்டு ஆட மாட்டோம்; தான் தோன்றியாய் நடக்க மாட்டோம்; தலைகனம் கொள்ள மாட்டோம். காரணம் இம் மூலதனங்களின் சொந்தக்காரன் ‘‘தன்னடக்கம்’’ உள்ளவன் என்பதால் தன்னடக்கம் தான் இம் மூலதன பொக்கிஷத்தை பாதுகாக்கும் பெட்டகம். இம்மூலதனத்தை நாம் பெற்றுவிட்டால், பக்குவத்தை பெற்றுவிட்டோம் என்பது உறுதியாகிவிடும்.
இம்மூலதனச் சொந்தக்காரர்களைக் கொண்ட பாசறை தான் தமிழர் தன்மானப் பேரவை. அந்த பாசறையில் நுழைந்தவர்கள்தான், பயிற்சியால் தனது பக்குவத்தை உறுதிசெய்து கொண்டு மக்களைத் திரட்டும் பணியில் ஈடுபடக்கூடிய களப் பணியாளர்கள். அந்தக் களப்பணியாளர்கள் தான் செயல் வீரர்களாக, போராளிகளாக, புரட்சியாளர்களாக வரையறுக்கப்பட்ட பயிற்சிக் கோட்டை நோக்கி, அதைத்தாண்டி முன்னேறுவார்கள்.
அந்தக் களப்பணியாளர்களுக்கு ஓய்வில்லை, மூப்பில்லை, பயமில்லை, சாவில்லை, எப்படி?

படியுங்கள்! பரப்புங்கள்! பலப்படுத்துங்கள்
படியுங்கள்! பரப்புங்கள்! பலப்படுத்துங்கள்!
இணைமிகு தோழா!
எதிர்பார்த்து கிடந்த வீட்டில், ஒரு குழந்தை பிறப்பெடுத்திருக்கிறது. அந்த குடும்பத்திற்கு எவ்வளவு மகிழ்ச்சி!
சில ஆண்டுகள் ஏங்கிக் கிடந்து, பின் பத்து மாதங்கள் பாரம் என தோன்றாமல் தூக்கிச் சுமந்து, படாத அவதிகளையெல்லாம் பட்டு முடித்து கடைசி பத்து நொடிகளில் தனித்துவம் பெற்ற குழந்தை வீறிட்டு குரல் எழுப்பியதைக் கூட அரை மயக்கத்தில் செவிமடுத்து, வயிற்றில் கிடந்த போது கூட அக்குழந்தை வெளிவர நடத்திய போராட்ட உணர்வை மனதில் அசை போட்டபடியே பூரித்து கிடந்தாள் அந்த தாய்.
‘குவா’ சத்தம் கேட்டதில் அந்த குடும்பத்திற்கு எவ்வளவு மகிழ்ச்சி. பிள்ளை பிறப்பெடுத்த செய்தி, பிரிந்து கிடந்த அக்குடும்பத்தினரை பிணைத்தது. முரண்பட்டுக் கிடந்த உற்றார், உறவினர்களை உறவில் நெருக்கம் கொள்ளச் செய்தது. எட்டவே நின்று வேடிக்கைப் பார்த்த அக்குடும்ப நண்பர்களை இடைவெளி உணர்ந்து கிட்ட நெருங்க வைத்தது. பகைபட்டு அக்குடும்பத்திற்கு எதிராக நின்ற பலரையும் கூட, அர்த்தமற்று பகைத்துக் கொண்டோமோ, அதில் நியாயமிருக்கிறதா? என சிந்திக்கச் செய்தது. இப்படியெல்லாம் ஒரு பந்த பாச சூழலைத் தோற்றுவிக்கிறது அக்குழந்தைப் பிறப்பு.
ஆனால், அக்குடும்ப ஒழிப்பையே தன் குறியாகக் கொண்ட எதிரிகள், என்ன! குழந்தை பிறந்திருக்கிறதா? அந்த குட்டி பிள்ளைதாச்சியாயிருந்தாளா? குழந்தை உயிருடன் தான் இருக்கிறதா? எந்தவொரு வின்னமுமில்லாமலா பிறந்திருக்கிறது? எதிர்பார்க்க வில்லையே! என ஏக்கப் பெமூச்சு விட்டு, எதிர்கால வாரிசு முளைத்துவிட்டதோ என பொங்கிப் பொருமுவதிலும், வெம்பிப் புலம்புவதிலும் வியப்பிருக்க முடியாதல்லவா?
அக்குழந்தை சுகமாகவும், சுமூகமாகவும் வெளியுலகைக்காண உற்ற துணையாக உதவிகள் புரிந்த மருத்துவச்சியும் மகிழ்ந்தாள். அதோடு கடமையைத் தொடர்ந்தாள். குழந்தை வெளிவந்தாலும் தாயின் உடலோடு கொண்ட பிணைப்பை ஒட்ட வைத்துக் கொண்டிருந்த தொப்புள் கொடியை வெட்டி விட்டு அதன் மீதுள்ள கழிவுகளை அகற்றி தொட்டில் நீரில் தேய்த்துக் கழுவி, தலைகீழாக தூக்கிவந்து கிடத்தி துடைத்து, அங்க வடிவங்களெல்லாம் குறைவும் குறையுமின்றி இருக்கிறதா என நோட்டமிட்டு சரிபார்த்து, கை,கால், காது, மூக்குகளை நீவி, மண்டையைக் கூட உருட்டி விட்டு, சற்று கை, கால்களை உதைத்துக் கொண்டு அலறட்டுமே என அதனை சீண்டிவிட்டு போராட தகுதி பெற்ற குழவிதான் என்ற மனநிறைவில், அப்படியே அள்ளிவந்து தாயின் அருகில் கிடத்தி, அவள் மார்பை இழுத்து அக்குழந்தையின் வாயில் நுழைத்து முதல் அறிமுகத்தை செய்து வைக்கிறாளே அந்த செவிலித்தாய், அவள் மனவோட்டத்தை புரிந்து கொள்ள முடிகிறதா?
ஆனால், அக்குடும்ப எதிரிகளோ தன் முகாமில் கூடி யோசிக்கிறார்கள். என்ன தெரியுமா? தாய்ப்பாலின் ருசியும், உணர்வும், ஊட்டமும் அக்குழந்தைக்கு கிடைக்கு முன் அதனை மரித்திட, அல்லது மாற்றிட அல்லது மறைத்திட ஏதாவது செய்தாக வேண்டுமே. அது அந்தச் செவிலித்தாயின் துணையோடு தானே முடியும், அவளை தங்கள் செல்வாக்கு, பணம், பயமுறுத்தல் போன்ற ஏதாவதொன்றால் சரிகட்டிவிட முடியுமா? என பேதலித்து, சரிக்கட்டியாக வேண்டும் என முடிவெடுத்து, அதற்கேற்றவனை தூதனுப்பி அவனும் அந்தச் செவிலியிடம் ஆசைகாட்டி பேரம் தொடங்கிய போது தான், அந்த தாயும் சேயும் மருத்துவ மனையைவிட்டு பாதுகாப்பாக இல்லம் சென்றுவிட்ட செய்தி கிடைத்தது.
ஏமாந்தவர்கள் எரிச்சலுறுவதும், எரித்துக் கரித்துக் கொட்டுவதும், பண்பும், பாசமும் கொண்ட செவிலி, இப்படியும் இருப்பார்களா மனிதப் பிசாசுகள். இத்தகைய பேரத்தில் மயங்குகிற செவிலிப் பேய்களும் உண்டோ? என எண்ணி வேதனைப்படுவதும் வியப்புக்குரியதல்ல தோழா!
வீடு வந்த அந்த குழந்தை, தன் உணர்வுகளை ஓலத்தால் வெளிப்படுத்தி, தேவைப்பூர்த்திக்காக கை, கால்களை உதைத்துப் போராடி, அதுவே அதற்கு உடற்பயிற்சியாகவும் அமைந்து, சூழலை புரிந்து கொள்ள முடியாத நிலையில், அப்போராட்ட சூழலில் வளர்ச்சியுற்று, சிரிக்கக் கற்றுக் கொண்டு, மல்லாந்தே கிடந்த அக்குழந்தை, சொந்த முயற்சியில் குப்புறக் கவிழ்ந்து, மூக்கடிப்பட்டு, தாயின் தடவலால் ஆறுதல் பெற்று, நெஞ்சால் ஊர்ந்து, பின் நிமிர்ந்து, அமர்ந்து, நகர்ந்து அடுத்து மண்டியிட்டு, இடம் பெயர்ந்து, எழுந்து விழுந்து மீண்டும் எழுந்து தள்ளாடி நின்று, தடுமாறி நடந்து உணர்ச்சியால் உந்தப்பட்டு பொக்கைவாய் திறந்து சிரிக்கிறது.
இதுவெல்லாம் சுற்றியுள்ளவர்களை குதூகலப்படுத்துகிறது. உற்று நோக்குபவர்களை உறவு கொள்ளச் செய்கிறது. அருகிலிருப்பவர்களை ஈர்த்திழுக்கிறது. அதை அவர்கள் கட்டியணைத்து, தூக்கி முத்தமிட்டு ஏதோ கொஞ்சுகிறார்கள். அதற்கு புரியவில்லை. அத்துணையும் கவனித்துக் கொண்டிருக்கும் அதன் தாயோ, அக்குழந்தையின் எதிர்கால எதிர்பார்ப்புக்கள் குறித்து கனவு காண்கிறாள். கனவிலே ஆழ்ந்துவிட்ட அத்தாயை, சூழல் நினைவுக்கு கொண்டு வருகிறது. கனவு நினைவா? அல்லது நினைவு கனவா? என தெரியாது தயங்கியவளை கடமை செயலக்கிழுக்கிறது. புரிந்து கொள்ள முடிகிறதா தோழா!
அந்த குழந்தைதான் நம்முன் பிறப்பெடுத்திருக்கும் ‘தன்மானம்’. ‘தன்மானம்’ என்ற குழந்தையை சிந்தையில் இறுத்தி இதுவரை நீ மேலே படித்தவைகளோடு பொறுத்தி மீண்டும் ஒரு முறை வரிவரியாகப் படித்துப் பார். அந்த வரிகளுக்கும், அதிலுள்ள வார்த்தைகளுக்கும் புதிய பொருள் ஏதாவது தென்படுகிறதா?
படித்து முடித்து விட்டு பட்டறிவுக்கும் சம்பந்தமில்லாத யூகங்களில் மூழ்கிவிடாதே! பரிசோதனையறிவுக்கு புறம்பாக கரை கடந்த கற்பனையில் ஆழ்ந்து விடாதே, உனக்கு ஒரு பழமொழி தெரியுமல்லவா? ‘உண்மை உள்ளிருந்து வீட்டு வாசலுக்கு வருமுன் வதந்தியும், யூகமும் ஊரையே ஒரு சுற்று சுற்றிவிட்டு வாசலுக்கு வந்துவிடும்’ என்பது பழமொழி ஆனால் உண்மையை கண்டறிந்து, ஊக்கத்தில் உறுதி கொண்டு களத்தில் கடமையாற்ற கற்றுக் கொள்வோம்.
அறிய முடியாதது எதுவுமில்லை. ஆனால் அறிய வேண்டியதோ நிறையவுண்டு. செய்ய முடியாதது எதுவுமில்லை, ஆனால் செய்ய வேண்டியதோ நிறையவுண்டு, என்ற கூற்றில் பொதிந்துள்ள ஆழமான அர்த்தங்களை அறிந்திட ஆழமாகவே சிந்திப்போம்.
கற்றறிவு கை கொடுக்க, பட்டறிவின் வெளிச்சத்தில் கடமையாற்ற புறப்படுவோம். தோல்வி என்பது எக்காலும் நம்மை அண்ட முடியாது. வெற்றியில்லை என்பது தோல்வியல்ல. வெற்றி மட்டுமே நமக்குச் சொந்தம்.
இந்த உணர்வில் ‘தன்மானம்’ தொடர்ந்து வெளிவரட்டும், தன்மானம் படியுங்கள். பரப்புங்கள், பலப்படுத்துங்கள், நாம் அதை இழக்க முடியாது, கூடாது. அது நம்மை இழக்காது, நம்மோடு ஒட்டிப் பிறந்தது. ஒன்றிவிட்டது. குறுதியோடு கூடிவிட்டது. கருத்துக்குத் தெளிவூட்டும் களப்பணிக்கு வழிகாட்டும், ‘தன்மானம்’ உயர்த்திப் பிடிக்க வேண்டிய பேரவையின் பேராயுதம்.
சூன் 2003-விடுமடல் -2 , தன்மானம்

அனுகலா? முனகலா?
அனுகலா? முனகலா?
இணைமிகு தோழா!
விடுமடல் தொடங்கியதிலிருந்து இதுவரை, முழுக்க முழுக்க நம்மவர்களுக்கே எழுதினேன்; சித்தாந்தம், செயல்வழி, நடைமுறை, அனுகுமுறை போன்ற அமைப்பம்சங்களில் ஓரளவு அறிவுபெற இந்த மடல்கள் பயன்பட்டிருக்கும் என நம்புகிறேன். அதுவும் குறிப்பாக, அமைப்பையே வாழ்விடமாக்கிக் கொள்ளுவதற்கான அர்ப்பணிப்பு முறையே வரலாற்று வாழ்க்கையாகும் என்பதால், அமைப்பெற்ற பேராயுதத்தின் அவசியமும், அதனில் ஏற்படுத்திக் கொள்ளும் எச்சரிக்கையோடு கூடிய பிணைப்பும் முக்கியத்துவமுடையதாகும். அதனை கொஞ்மேனும் நீங்கள் புரிந்து கொள்ள எனது மடல்கள் உதவியிருக்குமானால் எனக்கு நிரம்ப மகிழ்ச்சி.
அத்தகைய எனது நம்பிக்கையையும் மகிழ்ச்சியையும் உறுதிப்படுத்திக் கொள்வது, நீங்களும் ஒரு நபர் என்ற முறையிலான உறவில் அல்ல; உங்களது செயல்முறையில் கிடைத்த அனுபவத்தை பகிர்ந்து கொள்ளும் போது ஏற்படும் புரிதலால் உருக்கொள்ளுவதாகும். ஆந்த வாய்ப்பையும் ஒரு அமைப்பில் மூலமே நாம் பெறமுடியும்.
நம் எதிரிகளையும், நண்பர்களையும், துரோகிகளையும் வரையறுத்துத் தந்து, உதிரிகளுடனான மோதுதலையும், நண்பர்களுடனான உறவு முறையையும், துரோகிகளை தாமதமின்றி, அடையாளம் கண்டு, அப்புறப்படுத்தும் துரித வகைகளையும், நம் பலவீனங்களை நாம் புரிந்து எடுத்துக் கொள்ளும் எச்சரிக்கை முறைகளையும், நாம் நம் அமைப்பின் மூலமே கற்றறிந்து கண்டறிந்து, கடைபிடிக்கிறோம் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.
அமைப்பு, தற்காப்பு, தாக்குதலின் பிணைப்பே அங்கத்தின் உத்திரவாதத்திற்கு உறுதியாகும்; இதில் அமைப்பு, தவறியும் மறந்தும், கீழே வைத்துவிடாமல் தரித்திருக்க வேண்டிய பேராயுதமாகும்; இரவும் பகலும் கூட, நினைவிலும் கனவிலும் கூட அதனைவிட்டு நம்மை பிரித்திட முடியாது. அதனை நமதாக்கிக் கொள்ளுவதன் மூலம் நாம் அதனாகிவிடுகிறோம். அமைப்பு திசைபாதை வழிகளைப் பெற்றிருப்பதால், ஆயுதமாயிருக்கிறது என்பதை மறந்துவிட்டு, மதியிழந்து, அமைப்புக்கள் திசைபாதை வழிகளுக்கு எதிராகச் செல்லவைப்பது, செலுத்த முனைவது அதன் அழிவை நோக்கிய பயணமாயிருக்கும்.
ஆகவே அமைப்பு கட்டப்படுவதன் அவசியத்தை புரிந்து கொண்டிருப்பாய் என நம்புகிறேன். அமைப்பைக் கட்டுவதற்கு ஒருவர் பெற்றிருக்கக்கூடிய புரிந்து பொருந்தும் போக்கையும், நடை உடை பாவனைகளையும், நம்பகத் தன்மையும், திறனையும், தெளிவான பார்வையையும், திடமான வழிநடத்தலையும் மக்களுக்கு புரியவைப்பது அவரது அனுகுமுறைதானே?
அந்த அனுகுமுறை பக்குவத்தையும், திறனையும் பெறுவது, பயில்வது கடினமான வேலைதான்; அதைக் கற்றுத் தெரியாமல் அமைப்பில் பணியாற்றுவது முயற்கொம்புதான்; அதை அமைப்பிற்கு வெளியே அலைந்து கற்க முனைவதும் அதோகதி தான்; சோதனைகளைச் சமாளிக்கவும், வேதனைகளுக்கு தீர்வுகாணவும், சாதனைகள் படைத்திடவும் இந்த அணுகுமுறை பயிற்சி தான் அரணாயிருக்கும்.
இதுவிலை கொடுத்து வாங்குவதல்ல, ஏடுபடித்து எடுத்துக் கொள்வதுமில்லை, ஒரு குறிப்பிட்டச் சூழலை உள்ளாழ்ந்து புரிந்து கொண்டு, அதனை மாற்றும் செயலில் இறங்கி, எதிர்படுபவற்றை எதிர்கொண்டு ஜீரணித்து, உணர்ச்சி வயப்படாது கசப்பையும் உணர்வாக்கிக் கொண்டு, கொள்கை நிலை குலையாத நிலை எடுத்தால் எதிர்ப்பை வென்றெடுத்து அமைப்பிற்குட்படுத்திக் கொள்வதே அனுகுமுறை; அனுபவம் படிப்பினை தர, அப்படிப்பினை வெளிச்சம் காட்ட, அவ்வெளிச்சத்தை பார்வையாக்கிக் கொண்டு தடம்பதித்து பயனிப்பதை வழக்கமாக்கி பின் பழக்கமாக்கிக் கொள்வது, அதுவும் அமைப்பெற்ற பாசறையில் பயில்வது தான் அனுகுமுறை.
தன்னை மட்டும் முன்னிறுத்தி பயணம் தொடங்குவதல்ல; தனியார் சித்து, சீற்றத்தாலும், வீம்பு வீராப்பாலும் வெற்றிப் போல தோன்றுவதை விவரமான அனுகுமுறை என்று கருதிட வேண்டாம்; அது இறுதியில் விரக்தியிலும் வீழ்ச்சியிலுமே முடியும்.
ஒரு தோழரிடம், கடந்த காலத்தில் நிலவிய போராட்ட உணர்வுகளையும், கட்டுப்பாட்டுறுதிகளையும், செயலூக்க ஈடுபாடுகளையும் பற்றி கூறிக் கொண்டிருந்தேன். கேட்டுக் கொண்டிருந்த அவர் கூறினார் நீங்கள் பழயகாலம். உங்கள் காலம் என்று நினைத்துக் கொண்டு பேசாதீர்கள் இது அட்வான்ஸ் காலம் இந்த நாகரீகத்தை புரிந்து கொண்டு வாழ வேண்டும் என எனக்கு போதித்தார். வேடிக்கைத்தானே?
பழய காலத்திலிருந்து முன்னோக்கிய சமூகவளர்ச்சி காலகட்டத்தில் இன்று இருக்கிறோம் என்பது உண்மைதான்; இக்காலகட்டத்தை புரிந்து கொண்டு மாற்ற வேண்டும் என்று அவர் கூறியிருந்தால் சரியான கருத்தோட்டம் தான். ஆனால் அதை புரிந்து கொண்டு அதில் வாழ வேண்டும் என ஆசைப்படுகிறார். அதாவது இக்காலகட்டத்தோடு ஒத்து அய்க்கியம் கொள்ள வேண்டும் என்கிறார். இது நியாயமா?
ஏதோ ஒருவகை போராட்ட உணர்வு, கட்டுப்பாடு, செயலூக்கத்திலிருந்து கடந்த காலகட்ட வளர்ச்சி புரட்சி உணர்வு, உறுக்குக் கட்டுப்பாடு செயலூக்கத் திறன் கொண்ட உதிர்காலத்தை சென்றடைய கடந்து செல்லும் இக்கால கட்டத்தில் புதிய ஒவ்வாத அம்சங்களை ஒழித்துவிட்டு, புவ்வுதலுக்குரியவற்றை இணைத்துக் கொண்டு, மேலும் உத்திரவாதமான உதிர்காலம் நோக்கிய பயணம் என்பதை மறந்துவிடக் கூடாது.
இந்த நிலையில் சரியான போர் உணர்வையும், கட்டுப்பாட்டையும் செயலுறுதியையும் உறுதிப்படுத்த முனைவதற்கு மாறாக, இவ்விடைக் காலகட்டமே நம் வாழ்நாளில் நிரந்தர காலம் என கருதி அதிலேயே தன் ஆஜிளைக் கழிக்க வழி தேடினால், உதிர்கால வாழ்வுக்கான சிந்தனை சீக்கு ஏற்படுத்தி, இக்கால வாழ்வு என்று படுத்த படுக்கையாகி, என் காலம் இனி அந்திம காலம்தான் என பிதற்றுவதில் தான் கொண்டு போய்விடும்.
ஆகவேதான், நம் வாழ்க்கைப் போராட்டம் தொடர, நமது அனுகுமுறையிலும் மாற்றம் காணவேண்டும். அதற்கு கடந்த கால அனுபவத்தை பாடமாக்கிக் கொண்டுதானே எதிர்காலம் செல்லத் தக்க அனுகுமுறையை இந்த காலத்தில் வடிவமைத்துக் கொள்ள வேண்டும்.
சேறும் சகதியும், கள்ளும் முள்ளும், காடும் மேடுமான பாதையில் பயனித்து நம் மூதாதையர் பெற்ற அனுபவங்களை, கொண்டிருந்த உண்ர்வை, ஏற்படுத்திக் கொண்ட கட்டுப்பாட்டை, தூக்கிச் சுமந்த செயலூக்கத்தை புறக்கணித்துவிட்டு, பறக்கும் ரயில், பாய்தோடும் விண்கோள்; அண்டத்தில் தங்கிடும் விண்தளம்; என்ற அட்வான்று காலத்தில் பிறந்தோம் என்றாலும், இதுவே நிரந்தரமானது இங்கே உணர்வும் வேண்டாம்; கட்டுப்பாடும் வேண்டாம்; செயலூக்கமும் வேண்டாம்; வளமான வாழ்வு போதும் என கருதிட முடியுமா? இந்த ‘அட்வான்ஸ்’ காலத்தில் உலகில், கண்டங்களில், நாடுகளில் வாழும் மனிதர்கள் வளமான வாழ்வு வாழ முடியுமா? முடிகிறதா? அதைப் பெருவதற்கே போராட்ட உணர்வும், கட்டுப்பாடும், செயலூக்கமும் மக்களுக்கு வேண்டுமல்லவா?
நவீனகாலம் - அட்வான்ஸ் காலம் என்று காலத்து வாழ்க்கை மக்களுக்கு கிடைத்திருக்கிறதா? இக்கால சுகபோகத்தை மக்களால் அனுபவிக்க முடிகிறதா? மக்களுக்கான அட்வான்ஸ் காலத்தை அடைய வேண்டிய பயணத்தில் நாம் இருக்கிற இன்றை கால கட்டத்தில் நமக்கான பணியை மனதில் கொள்ள வேண்டும்; பாதை தெளிவாகும்.
சரி! விஷயத்திற்கு திரும்புவோம்; இன்றைக்கு நமது அனுகுமுறை எப்படி அமைய வேண்டும்? அதுதான் நாம் கற்றுத் தெளிய வேண்டிய பாடம். இது வேண்டும் போது விலை கொடுத்து வாங்கி விடலாம் என்ற கடைச்சரக்கல்ல; மந்திரவாதிகள் தரும் மாயக்கயிறு அல்ல; கணவில், கடவுள் காட்சியளித்து தந்திடும் பரப்பிரசாதம் அல்ல; உடைத்தால் கண்டிப்பாகக் கிடைத்திடும் என்ற லாக்கரும் அல்ல.
முதலில், நீ தன்னந்தனியனல்ல; அமைப்பென்ற ஆற்றலின் வடிவு; யார் பின்னாலும் ஓடும் எடுபிடியல்ல, எல்லோருக்கும் முன்னில் வழிநடத்தி செல்லும் திறனுரு; கூப்பிட்ட குரலுக்கு ஏவல்புரிய தண்டனிடும் அடிமையல்ல, நம்பிவந்து கூப்பிட்டோருக்கு நல்ல துணையாகி நிற்க வழி தெரிந்தவன். ஏதோ புகழுக்கும் பணத்திற்கும் பந்தா காட்டுபவனல்ல, பயன்படுவதற்காக பாடுபடுதல், பாதுகாப்புக்குரியது என்ற முத்திரை பதிப்பவன்; என்பதை மனதில் பதிய வைத்து செயலில் தடம் பதிக்க திடம் கொள்ள வேண்டும்.
அடுத்தவரை, அடர்திரளை அதிகாரம் ஆதிக்கம், அச்சுறுத்தல் அடாதுடிகளாலல்ல, அறிய, தெரிய, தெளிய, புரியவைப்பதால் ஈர்ப்பவன்; எதற்கோ ஏமாந்த ஏவிலியல்ல, எடுத்துக்காட்டாய் மற்றவர்கள் எடுத்துக் கொள்வதற்குரியவன் என்ற பக்குவத்தை பயிற்சியாய் பெற்றுவிட்டால் அனுகுமுறையின் வடிவே அதுதானே.
இதற்குபின்னும் புரியாமல் விழிப்பவர் யார்? அவர் விழிக்க வழியின்று உறங்கிவிட்டவர் தானே?
தன் முயற்சியிலும் தன்னுறுதியிலும் தன் நம்பிக்கையிலும் தன்னிழப்பிலும் தன்னை அய்க்கியப்படுத்திக் கொண்டு, அதனால் தன் சுபாவ, பிப்பியல்பாக கொண்டுவிடு தோழா! பின் எங்கும், எதிலும், எப்போதும், உன்னில், உன் உணர்வில், உன் நினைவில், உன் செயலில் அதனை அடையாளம் காண்பாய்; இது அமைப்பு வாழ்வால் மட்டுமே சாத்தியம்.
அங்கத்தைப் பங்கப்படுத்தி அமைப்பைக் கெடுப்பது ஆற்றல் இல்லை; நண்பனை விரட்டியடித்து எதிரியை பலப்படுத்துவது விவேகமல்ல; எதிரியை நண்பனாக எடைபோட்டு வலையில் சிக்குவது துணிவு அல்ல; நம்மவனை பிணைப்பாக்கி; நண்பனை அணையாது விலகாது வென்றெடுத் தீர்த்து; இயல்பான எதிரிக்கிடையான முரணை, கூர்மையுறச் செய்து; அவனுக்கும் நண்பனுக்குமான இடைவெளியை ஆழ, அகலப்படுத்தி; முனைப்புடன் முன்னோக்கிட நிலை எடுப்பதும், நிலை கொள்வதும், நிலை நிறுத்துவதும், தளம் அமைத்து களம் காண்பதும் தானே புரட்சியாளன் புரிந்து கொள்ளும் பாடம்.
அன்பு தோழா! மற்றொன்றையும் மனதில் பதியவைத்து கொள்ளுங்கள்: அதுவும் அனுகுமுறையில் போது, ஒவ்வொரு அசைவிலும் சிறுநீரகத்தின் தொடரோட்டம் போல, தவறுகளை சுத்திகரித்து வெளிச்சமாக்கிக் கொள்வது அவசியமல்லவா? இதற்கு கால அவகாசம் வேண்டாமா? என விளாச விணை எழுப்பிடக் கூடாது. செயலாற்றும் போது தவறுகள் ஏற்படத்தான் செய்யும்; கவலைப்பட தேவையில்லை; ஒரு பணி முடிந்து ஓய்வு என்பது பணியில் நடந்தவற்றை குறிப்பாக தன் அனுகுமுறையை அசைபோட்டறிந்து தவறைச் சரிபடுத்திக் கொள்ளும் நேரம் அல்லவா?
அரட்டையடித்து ஆட்டம் போடுவதும், குறட்டைவிட்டு குந்தகமிழைப்பதும் ஓய்வாகுமா? பொழுதுபோக்கு என்றால், முடிந்த காரியத்தை, முடித்துவந்த வளக தொகையறிந்து புரிந்து கொண்ட படிப்பினைகளை பொக்கிஷமாக்கிக் கொள்வது தானே? ஒருவன் தூங்குவதற்கு நேரம் தேவைதான்; மூளையின் சோர்வை போக்கிக் கொள்ள வேறுமாற்று இல்லாத நிலையில் அல்லது ஒரு பழக்கத்தில்; ஆனால் ஒன்று தூங்கிக் கொண்டிருக்கும் போதும் மூளை தன் வேலையை நிறுத்தி விடுவதில்லை.
அணுகலை முதலில் நாம் வழக்கமாக்கி, பின் பழக்கமாக்கிக் கொள்வது நமக்கு வலிபு. நாம் நடத்துவது வெறும் அசைவல்ல, போராட்டம். போராட்டம், போர் என்ற வார்த்தைகளை கண்டு யாரும் அஞ்சிட வேண்டியதில்லை, இதனை அச்சுறுத்தும் வார்த்தையாக ஆதிக்கவாதிகள் சித்தரிக்க முனைகிறார்கள்.
கருத்து, செயல், எழுத்து, பேச்சு இந்த முணைகளில் பலவேறு துறைகளில் நாம் எதிரிகளோடும், நண்பர்களோடும் போராட வேண்டியவர்களாகவும் இருக்கிறோம்; நமக்கு எதிரிகள் மக்களின் எதிரிகள் தான்; எதிரிகளோடு அவர்களை வீழ்த்துவதற்கு போராடுகிறோம். நண்பர்களோடு எதிரிகளுக்கும் நமக்குமிடையில் ஊசலாடாமல் நம் பக்கம் வென்றெடுக்க - ஈர்த்தெடுக்க போராடுகிறோம்; நாமே நம்முள் போராட்டம் நடத்திக் கொண்டிருக்கிறோம்; நம் பிணைப்பை பலப்படுத்தி, களையை களைந்துவிட்டு, முன்னோக்கி பயனிக்க வெளிச்சத்தையும், திடத்தையும் ஒருசேர பெறுவதற்கு போராடிக் கொண்டிருக்கிறோம், மக்களோடும் போராடுகிறோம், சமத்துவச் சமுதாயத்தை நிர்மானிப்பதில் சரியான பாதையில் நடைபோடும் புரட்சியாளர்களுக்கும், போராளிகளுக்கும் செயல்வீரர்களுக்கும் பொலிவான தளமாக மக்கள் அமைந்திட போராடுகிறோம்; ஆதிக்கச் சுரண்டல்காரர்களின் அடிமைத்தளமாக, அவர்களது சூதுவாது சதிகளுக்கு ஆக்கிரமிப்பிடமாக மக்களை வீழ்த்திவிட கூடாதல்லவா?
இவற்றில் நமக்கு தெளிவு வேண்டும். எதிரிகளைத் தனிமைப்படுத்தி, நண்பர்களை ஈர்த்தெடுத்து, பலம் பெற்று, மக்கள் தளத்தில் நின்று உதிரியை சந்திக்க களம் அமைக்க வேண்டியது போராளியின் மூச்சல்லவா?
தன்னை - தான் சார்ந்த அமைப்பை - தனிமைப்படுத்திக் கொண்டு எதிரியை வலுபெறச் செய்து, நண்பர்கள் அண்டிவிடாதபடி அடாதுடிகள் செய்து; மக்கள் மருண்டு ஒதுங்கியோடிச் செய்து, தன்னை முன்னிறுத்தி மக்களின் நம்பத்தை முற்றும் இழந்துவிட்டவரை போராளி என கோமாளி கூட கூறுவானா? இந்த அனுகுமுறை ஒருகாலும் போராளியின் அனுகுமுறையாகாது; ஆக முடியாது. இத்தகையவர்கள் வீரதீர பராகிரமமுடையவராகவோ அல்லது வல்லமை படைத்தவராகவோ வரலாறு அடையாளம் காட்டுமா? குல்லறையைக் கட்டிக் கொண்டு அதில் குடியிருப்பவன், கோட்டையிலமர்ந்து கோலோச்சுவதாக கூறுவது ஒரு காலத்தின் காட்சி தானே.
கருத்து, செயல், எழுத்து, பேச்சு ஆகிய கோணங்களிலான உலகின் உள்ளடக்கத்தில் நடத்தப்படும் போராட்டம் ஒவ்வொன்றும் ஒரு சிறப்புக்குரிய கலை அல்லவா? ஏல்லா கலைகளிலும் ஒருவர் தேர்ச்சி பெற முடியுமா அல்லது பெற்றிருக்கிறார் என்பதல்ல நம் ஆய்வு; அனைத்திலும் ஒருவர் சிறப்பு பெறுவது அப்புறமிருக்கட்டும்; ஒன்றினுள்ளேயே பெற்றுள்ள சிறப்புக்களிலும் வேறுபாடுண்டே. மனித சமூகத்தில் அங்கமாகிவிட்ட ஒவ்வொருவரிடமும் ஒரு தனிச் சிறப்புண்டு என்பதை மறுத்து விடக் கூடாது. நாம் இங்கு சொல்லவந்தது, பயனிக்கும் பாதையில் சந்திக்கும் ஒவ்வொரு போராட்டத்திலும் மேலே சொன்ன அனைத்து கோணங்களிலான போராட்டங்களுக்குமிடையேயான சிந்தனைப் போக்கின் இழையோட்டம் அறுபட்டுவிடக் கூடாது என்பதில் எச்சரிக்கையாயிருக்க வேண்டும்.
அனுகுமுறைத் திறனில் நடத்தும் போராட்டம், அனுபவத்தால் செழுமைப்படுத்தப்படும்; போராட்டம் என்றாலே திட்டமிடப்பட்ட, ஒழுங்குபடுத்தப்பட்ட, வரையறுக்கப்பட்ட மோதுதல் என்பது நீ அறிந்ததல்லவா? மோதல் என்று வந்துவிட்டால் பலம் பிரதான அங்கம் வகிக்கிறது. பலம் என்பது பண்முகத்தன்மை கொண்டதல்லவா? பலம் அறிதலும் ஒரு நுட்பமான கலைதான்; அதனை அறிய பலவழிமுறைகளை பலர் பலவிதமாக கடைபிடித்தாலும் அறிந்தவை உண்மையா என்பது உறுதி செய்து கொள்வதிலே தான் உள்ளார்ந்த திறன் பொதிந்திருக்கிறது.
மோதல் என்று வந்துவிட்டால் அதில் பலம் பிரதாக அங்கம் வகிக்கிறது என்பதை மறந்துவிடக் கூடாது; எதிரி, நண்பன், நீ, உன் அமைப்பு மக்கள் திறள் ஆகிய ஒவ்வொருவருக்கும், பலமும் உண்டு பலவீனமும் உண்டு; இந்தச் சமூகத்தில், உன் பலவீனத்தைப் போக்கி, உன் அமைப்பின் பலத்தை உறுதிப்படுத்தி, மக்கள் திரளின் பலத்தை எழுச்சியாக்கி, உன் நன்பணின் ஆதரவு பலத்தை வென்றெடுத்து, எதிரியை வீழ்த்தி, சமூகத்தை அடிப்படையாக மாற்றுவது தானே புரட்சி திட்டம் என்பது.
எதிரியின் பலம், பணம் எடுபிடிக்கும்பல் ஆதிக்கம் அதிகாரத்தில் போன்றவற்றில் இருக்கிறது. பலவீனம் அவர்களுக்குள்ளான முரண்பாட்டிலும், வெறிகொண்ட கோஷ்டி பூசலிலும் இருக்கின்றன. நண்பனின் பலம் அவனது கவர்ச்சியின் திரட்சியிலும், அளித்திடும் அபரிமித வாக்குறுதியிலும் இருக்கிறது; அவனது பலவீனம் இயல்பான தடுமாற்றத்திலும்; ஆதரவு தேடி அலைவதிலும் இருக்கிறது. உனது பலம் அமைப்போடு பிணைந்திருக்கும் உன் வாழ்வில் இருக்கிறது, உனது பலவீனம் தனிநலனிலும், தனிமைப்படுதலிலும் இருக்கிறது நமது பலம் கொள்கை, தன்னிழப்பாளர்கள் குழு களவாழ்க்கையில் இருக்கிறது; நமது பலவீனம் அமைப்பு தொளதொளப்பிலும், அர்ப்பணிப்புக்கு மாறாக ஆதாயத்தில் கருவெடுக்கும் துரோகத்திலும் இருக்கிறது.
எனவே ஒரு சமூகப் போராளி, தனது அமைப்பின் பலவீனத்தைப் போக்கிக் கொண்டு பலத்தில் ஊன்றி தடம் பதித்து, வெகுமக்கள் திரளின் எழுச்சித் தொடருக்கு முன் வகித்து, நண்பனின் பலப்பகுதியை பயன்படுத்தி ஆதரவாக்கி, எதிரியின் பலத்திற்கு தடைபோட்டு, அவனது பலவீனத்தில் தாக்குவது புரட்சியின் வெற்றியாகும்.
இதற்கு மேலும் சென்று, எதிரும் புதிருமான ஜீவியத்தை - நட்பு ஜீவியத்தை - நேர்மறை எதிர் மறை ஜீவியத்தை துல்லியமாக்கிக் காட்டி ஒவ்வொருவரின் பலம், பலவீனங்களை தோலுரித்து, அதனை தொட்டு, தட்டி, மோதி, முட்டி, வெட்டி எடுக்கும் பிணவறை சோதனை விளக்கத்திற்கு நான் போக விரும்பவில்லை; அது பாசறை போதனையில் பார்ப்போம்; இங்கே எழுதினால் நாக்கைத் தொங்கப் போட்டலையும் பினவாடையெடுத்த ஜீவன்களுக்கு தீனியாகிவிடுமல்லவா?
இத்தோடு இந்த விடுமடல் தொடரை முடித்துக் கொள்ளுகிறேன்; அமைப்பையும் அதனைச் சார்ந்த அனைத்தையும், உன்னிள் வாழ்வையும் அதன் பாதை வழி பயணத்தையும் ஓரளவாவது சொல்லிவிட்டதாக கருதுகிறேன்; தேவைப்பட்டால் எதிர்காலத்தில் தொடர்வோம்; இத்தோடு முடித்துக் கொண்டது முற்றுப் புள்ளியல்ல; இதனை ஒட்டி இனி தொடரவிருக்கும் விடுமடல்களை சில பெரும் சிந்தனை விளக்கங்களை சுருக்கமான பாடமாக்கி மனதில் இருத்தும் பணியில் ஈடுபடுவோம்.
அதனை முடித்த பின், நீ அவசரப்படுகிறாயே, அனைத்து மக்களும் அறிந்திட துடிக்கிறாயே, அந்த கட்டத்திற்கு வரலாம்; உன்னை ஆயத்தப்படுத்து; மக்கள் ஆயத்தமாகவே இருக்கிறார்கள்; நம்பகத் தன்மைக்கும், தலைமைக்கும் அவர்கள் காத்திருக்கிறார்கள்; அந்த காத்திருப்பை தொடர் பயணமாக்க நீ இனியும் காத்திருக்காதே இனிய தோழா! கற்றிடு பயின்றிடு அனுகலை; மங்கிடும் மறைந்திடும் முனுகலே.
சிந்தியுங்கள் - சந்திப்போம்!
அன்பு,
ஏ.ஜி.கே.

உயர்ந்த உணர்வே தோழமை உறவு
உயர்ந்த உணர்வே தோழமை உறவு
இணைமிகு தோழா!
இயக்கத்தைக் கட்டுவது பற்றி சென்ற கடிதத்தில் பார்த்தோம். இயக்கத்தைக் கட்டுவது ஒரு தனித்த செயலல்ல. இயக்கத்தைப் பாதுகாப்பதோடு பிணைந்த செயல். அதுபோலவே இயக்கத்தைக் கட்டுவதும் பாதுகாப்பதும் அதற்கு உணர்வூட்டுதோடும் வழிகாட்டுவதோடும் பிணைந்ததாகும்.
இந்த அம்சங்களில் ஏதோ ஒன்றைச் செய்வதை மட்டும் இயக்கத்தைக் கட்டுவதாக கருதிக் கொள்ளக் கூடாது. இதில் எவ்வொன்று இல்லாமலும் இயக்கத்தைக் கட்டிவிட முடியாது. இத்துணையம்சங்களையும் ஒருவரால் மட்டும் நிறைவு செய்துவிட முடியாது. இணைவும், இசைவுமான, விமர்சன, சுயவிமர்சனத்தை அஸ்திவாரமாகவும், ஆதரமாகவும் கொண்ட ஒரு குழுவால் மட்டுமே இதனைச் செய்திட முடியும். இதனை ஆழமாகவும் , அழுத்தமாகவும் புரிந்து கொள்ள தொடர்ந்து முயற்சிக்க வேண்டும்.
உணர்த்தலும் உணர்தலும் என்ற அஸ்திவாரத்தில் எழுப்பப்பட்ட இணைவும், இசைவுமான குழு என்பது பற்றி ஏற்கனவேயே நிறைய சொல்லியிருந்தாலும் இங்கும் ஒரு சிலவற்றை நினைவூட்டிக் கொள்ளுவோம். அந்த குழுதான் எதிர்கால விரிவாக்கத்தில் புரட்சிகர தலைமையின் வழிகாட்டுதலும் , வழி நடத்துதலும் தானே எதிர்காலத்தைப் படைப்பது.
அதாவது, நிலவுகின்ற சூழலை புரிந்து, அதனில் பொருந்தி, அந்தச் சூழலை மாற்றுவது தானே எதிர்காலத்தைப் படைப்பது. சூழலைப் புரிந்து கொள்ள தெளிவான சித்தாந்தம் வடிவிலான இலட்சியமும் வளமான கொள்கையும் தேவை. சூழலில் பொருத்திக் கொள்ள, அதிலிருந்து தனிமைப்பட்டு போகாதிருக்க சுயவிமர்சனமும், அதில் கலந்து கரைந்து விடாதிருக்க விமர்சனமும் தந்து தனித்துவத்தைப் பாதுகாத்துக் கொள்ள அனுபவ ஞானமும் தேவை. இதனைப் புரிந்து வாழ்பவர்களைக் கொண்டதே அந்தக் கருத்து செயல் உணர்வு கொண்டக் குழுவாகும்.
அந்த குழு இயக்கத்தைக் கட்டிப் பாதுகாக்க, உணர்வூட்டுவதும் வழிகாட்டுவதும் அவசியமாகும். நிலவுகின்ற எதார்த்தச் சூழலின் சரியான பிரதிபிம்ப உணர்வு என்பதால். நிலவுகின்ற எதார்த்தத்தைச் சரியாகப் புரிந்து கொள்வது உணர்வு பெறுதலாகும். அந்த எதார்த்தம் வின்னப்படாமல் அடுத்தவர் புரிந்து கொள்ளச் செய்வது உணர்வூட்டுவதாகும்.
ஒரு புரட்சிக் குழு ஒருமித்த உணர்வைப் பெற்றிருக்கும் போது தான், அது வெகு மக்கள் திரளுக்கு உணர்வேற்படுத்துவது சாத்தியமாகும். அது மாத்திரமல்ல. வெகுமக்களுக்கு உணர்வை ஏற்படுத்துவது என்பது இயக்கத்திற்கு மேலும் குழுக்களை அமைத்தல், இயக்கத்தை பாதுகாத்தல், இயக்கத்தைக் கண்காணித்தல் போன்ற வேலைகளை நிறைவேற்றுவது என பொருளாகும்.உணர்வுபூர்வமான அமைப்பு, வெகு மக்களின் உணர்வறிந்து இப்பணிகளை நிறைவேற்றுவதில்தான் இயக்கத்தின் வெற்றிய மைந்திருக்கிறது.
இந்த உணர்வேற்படுத்தலும் கொள்கை வழிப்பட்ட அகக் கட்டையும், செயல்வழிப்பட்ட புறவடிவதத்தையும் கொண்டதாக அமையும் போதுதான் அது காரியத்தின் - இயக்கத்தின் வெற்றியாய் பரிணமிக்கிறது. இதனை விளக்கிட கிளர்ச்சிப் பிரச்சாரம் ஆயுதமாய் பயன்படுகிறது.
உணர்வூட்டுவது என்பதை, வெறி ஏற்றுவதாக, உணர்ச்சி மயமாக்கி குறுக்குவழி செலுத்துவதாக கருதி விடக் கூடாது. உண்மையை உணர்த்துவதற்கு மாறாக, மூளைச் சலவையால் சிந்தனையை முடமாக்கி விடக் கூடாது. மெய்மையை உறுதிப்படுத்துவதற்கு மாறாக மேடைச் சலாங் கூடுகளால், உண்மையை ஊனப்படுத்திவிடக் கூடாது. மொத்தத்தில் , உணர்வேற்படுத்துவதற்கு மாறாக, உள்ளத்தில் விமேற்படுத்தி விடக் கூடாதல்லவா? ஆனால் அதைத்தான், இன்றைக்கு புரட்சிகர அரசியலாகக் கருதிப் புலம்பிக் கொண்டிருக்கிறவர்கள், புரட்சிக்கு புதைகுழி தோண்டிக் கொண்டிருப்பதை உணர மறுக்கிறார்கள்.
உணர்வூட்டுவது என்பது வியாபாரம் நடத்துவதல்ல. பேரம் பேசுவதல்ல. அதற்கு தேவை வழிகாட்டலே. வழி காட்டுவது என்பது வழி நடத்துவதை உள்ளடக்கிக் கொண்டிருக்கிறது. வழி காட்டாத வழி நடத்தலோ, வழி நடத்தாத வழி காட்டலோ, அரைகுறை பிரசவக் கதையல்லவா?
உணர்வூட்டுவதும், வழி காட்டுவதும், வழி நடத்துவதும் பிண்ணிப்பணைந்தவைகள். உணர்வூட்டுவதாகச் சொல்லி உணர்ச்சியை நிலை மிஞ்சி உசுப்பிவிடுவதும், வழிகாட்டுவதாகச் சொல்லி கலங்கரை விளக்கை உதாரணமாக்கி கல்சுவராக நின்று விடுவதும், வழி நடத்துவதாகச் சொல்லி இடம் மாறி, தடம் மாறி, பதறிச் சிதறி ஓடுவதும் இயக்கமாகி விடாது. ஆனால் இதுதானே இன்றைய அரசியலில் நாயகர்களின் நாடகப் பாத்திரமாக இருக்கிறது. இதனால் தானே மதிப்பிழந்தவர்கள் மக்களின் தலைவர்களாகவும் மதியிழந்து அத்தலைவர்களை நம்பிக்கையோடு நாடி, வடிவிழந்த கூட்டமும் அரசியலை அசிங்கப்படுத்திக் கொண்டிருக்க முடிகிறது.
உணர்வூட்டி, வழிகாட்டி, வழி நடத்த சாதனங்கள் தான் தீர்மானம். முடிவு. முழக்கம் என்பவைகளாகும். அமைப்பு ஒரு பேராயுதம் என்றாலும் அது ஆயுதங்களை தயாரிக்கும் ஆயுதம் என்பதை மறந்து விடக் கூடாது.
இயக்கம் வடித்தெடுத்துக் கொண்ட தீர்மானம் உணர்வூட்டவும் முடிவு வழிகாட்டவும், முழக்கம் வழி நடத்தவுமான வெளிச்சங்களாகும். இவ்வொவ்வொன்றுக்குமிடையேயான இழையோட்டம் அறுபட்டுவிடக் கூடாது. உணர்வூட்டுவது பிரச்சார போதனைகள் மூலமும், வழிகாட்டுவது கோரிக்கைகள் மூலமும் வழி நடத்துவது கட்டளைகள் மூலமும் செய்யப்பட வேண்டியவைகளாகும். விளக்கங்கள், வினாவிடைகள் மூலம் பிரச்சார போதனைகளும், விவாதங்கள் விமர்சனங்கள் மூலம் கோரிக்கைகளும், தற்காப்பு தாக்குதல், முன்னேற்றம் ஆகிய முனைப்பில் கட்டளைகளும் நிறைவேற்றப்பட வேண்டியவைகளாகும்.
இத்தனையும் பற்றிய மொத்தமான ஆய்வுகள், எடுத்த வேலை முடிந்து, கிடைத்த அனுபவத்தை வெளிச்சமாகக் கொண்டு, நடத்தப்பட வேண்டும். அதனில் விவாத நேரத்தில் கட்டளைகளுக்கோ, களத்தில் நிற்கும் போது விவாதங்களுக்கோ இடமிருக்கக் கூடாது. முடியாது. அது திட்டமிட்ட செயல்பாட்டை சீர்குலைத்து விடும். இதே நிலையைத்தான் அது அதைச் செய்ய வேண்டிய நேரத்தில் அது அதை செய்யாமல் விடுவதும் ஏற்படுத்தி விடும்.
இத்தனை வேலைகளையும் மொத்தமாக ஒருவர் செய்திட முடியுமா? இவ்வேலைகள் ஒவ்வொன்றிலும் ஒரே நபர் திறனுடையவராக இருக்க முடியும். என்றாலும், அத்தனையையும் மொத்தமாக ஒருவரே செய்ய முயற்சிப்பதும், அதனை அனுமதிப்பதும் இயக்கமாயிருக்காது. அமைப்பின் செயல் முறையாக அமையாது. மாறாக, அத்தனையையும் மொத்த குத்தகையாக எடுத்துக் கொண்ட தனிநபரின் தான் தோன்றித் தனமாகவும் தாதாக்களின் நடைமுறையாக மட்டுமே இருக்கும்.
சுருக்கமாகச் சொன்னால், அனைத்துமே நடத்தப்பட ஒரே வழி கட்டளையிடுவதும் அதனை அட்டியின்றி தட்டாமல் கடைபிடிப்பதும் என்ற வட்டத்தில் அடங்கி விடும். இதனை இராணுவக் கட்டுப்பாடு என்று கூட பெருமையாகச் சொல்லிக் கொள்வார்கள. அதனில் பலி கொடுக்கப்படும் அப்பாவிகளுக்கு தியாகிகள் என நாமம் சூட்டுவார்கள். என்றாலும் அவர்கள் தன்னிழப்பாளர்களாகி விட முடியுமா? கூலிக்கு வேலைக்கு அமர்த்தப்பட்டவர்களாகவும், வேலை செய்ய விலைக்கு வாங்கப்பட்டவர்களாகவுமே கருதப்படுவர்.
இத்தகைய காரியங்களை புரட்சிகர குழுக்களால் மட்டுமே செய்திட முடியும். அதனை வெற்றிகரமாகவும் செய்திட முடியும்.
அன்பு தோழா! புகை வண்டி இயக்கம் பற்றி நீ நன்றாகவே அறிவாயல்லவா? குறிப்பிட்ட ஒரு இடத்திலிருந்து குறிப்பிட்ட ஒரு எல்லையை அடைய இரயில் புறப்படுகிறது. அவசியத்தையும் காரணத்தையும் முன்னிட்டு அந்த இரயிலில் பயணிக்க விரும்புகிறார்கள். அதில் ஏறிக் கொள்கிறார்கள். பல தனித்தனி வண்டிகள் இணைப்பில் தொடராக்கப்படுகிறது.தொடர்வண்டியை இழுத்துப் போக என்ஜின் உண்டு. அதனை இயக்கிட ஓட்டுநரும் உதவியாளர்களும் இருப்பர். அத்தொடரின் கடைசி பகுதியில் நடத்துனரும் இருப்பார். எச்சரிக்கைச் சாதனங்களும் அவர் கைவசமிருக்கும். என்ஜின், பயணிகள், தொடர் ஓட்டம், இரயில் ஆகியவற்றிற்கென பாதுகாப்பாளர்களும் உண்டு.
எங்கெங்கே நிறுத்த வேண்டுமோ அங்கங்கே வண்டி நிறுத்தப்படும். இறங்குகிறவர்கள் இறங்குவார்கள். ஏறிக்கொள்கிறவர்கள் ஏறிக்கொள்வர். ஓட்டம் தொடரும். அந்த வண்டி ஓட்டம் தொடர்வதற்கு சில புற ஏற்பாடுகளும் உண்டு. பாதையை தெளிவாக்கிக் கொள்ள, அவ்வழியில் அனுமதிக்க, பாதைகளை பாதுகாக்க, ஒவ்வொரு கட்டத்திலும் வண்டியை வரவேற்க ஏறுகிறவர்கள், இறங்குகின்றவர்களை முறைபடுத்த, தொடர் ஓட்டம் தொடக்கம் முதல் எல்லை வரை சென்றடைவதை கண்காணிக்க, ஒழுங்குபடுத்த என அத்தனைக்கும் ஏற்பாடுகள் உண்டு.
இவை எல்லாம் இருந்தாலும் எதிர்படுகின்ற, எதிர் நோக்குகிற சில பிரச்சனைகளும் உண்டு. அவை சந்திக்கப்பட வேண்டியவைகளாகும்.
வண்டியில் பழுதுகள் ஏற்படலாம். அவை சரிபடுத்தப்படும். வழியில் தடைகள் வரலாம். அவை உடைத்தெறியப்படும். வண்டிக்கு விபத்துக்கள் ஏற்படலாம். எச்சரிக்கையோடு தவிர்க்கப்படும். தொடர் தேக்கப்படலாம். அது துடைத்தெறியப்படும். ஆனாலும் வண்டித் தொடர், தொடர் ஓட்டத்தில் தொடர்ந்து கொண்டே இருக்கும்.
வண்டியிலிருந்து சிலர் வலுகட்டாயமாக இறக்கப்படலாம். சிலர் வண்டியிலிருந்து இறக்கப்பட்டு ஒழுங்கு முறை நீதிக்கு முன் நிறுத்தப்படலாம். தண்டிக்கப்படலாம். ஓடும் வண்டியிலிருந்து வெளியே பாய்ந்து சிலர் தற்கொலையும் செய்து கொள்ளலாம். ஆனாலும் வண்டித் தொடரோட்டம் தொடர்ந்து கொண்டேயிருக்கும்.
ஓட்டம் ஒரு எல்லை நோக்கி என்றாலும், எல்லை எல்லையற்றது அல்லவா?
மேலே விவரித்த தொடர்வண்டியோட்டத்தின் ஒவ்வொரு சொல்லப்பட்ட, சொல்லப்படாத அம்சங்களையும் ஒரு புரட்சி அமைப்போடு ஒத்திட்டுப் பார் தோழா! நீ புரிந்து கொள்வாய்! அத்தனையும் உள்நுழைந்து விவரிக்க நான் விரும்பவில்லை. உளவாளிகளும் துரோகிகளும் அறிய ஆவலோடு ஆர்வம் பெறும். அதற்குள் நாம் செல்ல விரும்ப மாட்டோம். அவர்களது ஆசை நமக்குத் தெரியாததா?
ஆனாலும் அவர்களுக்கு பாடம் நடத்த அதெற்கெனறே ஆசான்கள் இருக்கிறார்கள். எதிரிகள், அவர்களைக் கொண்டு உளவாளிகளுக்கும் துரோகிகளுக்கும், காலம் தவறாமல், காலம் கடத்தாமல் பாடம் நடத்திக் கொண்டுதான் இருக்கிறார்கள். இவர்களுக்குத் தான் திருவள்ளுவர் சொன்னாரோ என்னவோ, கற்றதனாலாய பயனென் கொல், வாலறிவன் நற்றாள் தொழாள் எனின் என்ற குறளை. அதனைக் கற்ற அந்த உளவாளிகளும் துரோகிகளும், மக்களின் விரோதிகளான அந்த எஜமானர்களின் பாதங்களை நக்கிக் கொண்டும் தொழுது கொண்டும் இருக்கிறார்கள். நாம் கூட அந்தக் குறளைப் பயன்படுத்திக் கொள்வோம் ஒரு சிறு மாற்றத்தோடு, வாலறிவன் நற்செயல் புரிவானெனின் என்ற பார்வையில். இத்தோடு நிற்கட்டும். மேலே செல்வோம்.
சமத்துவச் சமூகம் நிர்மாணிக்கப்படுவதை இறுதி எல்லையாக்கிக் கொண்ட ஒரு புரட்சி அமைப்பு, முதல் கட்டமாக இனமானப் புரட்சியை வெற்றிகரமாக நிறைவேற்றும் நோக்கத்திலும், அதற்கான திசை வழியிலும் பயணிக்க தொடங்கியுள்ள போது, எதிர் வருகின்ற எண்ணற்ற பிரச்சனைகளுக்கு ஈடுகொடுத்து, எதிர் நீச்சலில் காரியங்களாற்றுவது எப்படி? என கேள்வி எழக் கூடும்.
புரட்சி அமைப்பு அதனை வெற்றிகரமாக நிறைவேற்றிடும். இது குறித்து ஏற்கனவே சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. என்றாலும் கொஞ்சம் கூடுதலாகப் பார்ப்போம்.
அமைப்பு, அதன் தட்டுகளிலும், மட்டங்களிலுமுள்ள குழுக்களுக்கு உள்ளும் புறமுமான வேலைப் பிரிவினைகளால் காரியங்களை வெற்றியாக்கும். வேலைப்பிரிவினை என்பது உண்மையோடும் ஒழுக்கத்தோடும் உறுதியோடும், துணிவோடும், அடக்கத்தோடும் செய்யப்பட வேண்டிய பொறுப்பு. அதுவும் இசைவோடு ஏற்றுக் கொண்ட கடமை. தானடிச்ச மூப்பாகவோ தன்னகங்காரத்தோடோ செய்யப் படுவதல்ல பிரிவினை செய்து கொள்ளப்பட்ட வேலை. மற்றவர்கள் பிரித்தேற்றுச் சென்ற வேலைப் பகுதிக்கு இடையூறு இன்றி, எடுத்த வேலையில் கொள்ளும் ஈடுபாடு மொத்த வேலைக்கும் ஒத்திசைந்த வகையில் முடித்திட வேண்டிய கடமையல்லவா?
அந்த வேலையை கொடுத்தது அமைப்பு. அமைப்பின் அவ்வேலையை பகிர்ந்து செல்கிறது. அந்த வேலை அமைப்பையும் அங்கத்தையும் இறுக பிணைத்திருப்பது மட்டுமல்ல, அந்த வேலையின் வெற்றிகர பூர்த்திதானே அமைப்பின் ஜீவ ஓட்டம். அந்த இறுக்கத்தில் எந்த ஒரு சுருக்கத்திலும் ஏற்படும் சறுக்கலும், தொய்வும், காயமும், மொத்த அமைப்பை பாதிக்கக் கூடும் என்பதையும், அந்த பாதிப்பு அங்கங்களுக்கும் பாதிப்பாகும் என்பதையும் எச்சரிக்கையோடு எண்ணத்தில் தாங்கி ஈடுபட வேண்டிய கடமையல்லவா வேலைப்பிரிவினை?
அப்படி வேலைப் பிரிவினையை ஏற்றுச் சென்றவர்கள், காலத்தில் கடமையாற்றி, பொறுப்பான பணிமுடிப்பை அமைப்பிடம் ஒப்புவித்து, நிறை வேற்றப்பட்ட வேலைகளை இணைத்து வடிவாக்கும் போது தானே பலாபலங்களை பார்த்தறிய முடியும். ஒவ்வொரும் பங்கேற்றுச் சென்ற வேலைகளில் ஈடுபட்ட போது ஏற்பட்ட அனுபவங்களையும் கூட்டாக பகிர்ந்து கொள்ளும் போது, அதுவும் அவ்வடிவத்தோடு இணைந்து ஒரு பாடமாகிறது. அமைப்பு அப்பாடத்தின் படிப்பினைகளைப் போதனையாக பகிர்ந்தளிக்கிறது போது, அங்கங்களின் திறனுக்கு மெருகூட்டி திறம்படச் செய்கிறது. அந்த திறன், அடுத்ததொரு வேலையை பகிர்ந்து செல்லும் போது, தெளிவான பார்வையோடும், திட்டவட்டமான புதிய வழிகளிலும் காரிய மாற்றிட, பக்குவத்தை அளிக்கிறது.
இதில் மற்றொரு அம்சமும் உண்டு. அங்கங்கள் பிரித்தெடுத்துச் செல்லும் வேலையில், ஓரிரு பகுதிகளில் ஏற்படும் பாதகமான விளைவுகள், இதர பகுதி வேலைகளின் வெற்றித் திறனால் சமன் செய்யப்பட்டு விடும். அதனால் பாதகமான விளைவு வெற்றியல்ல என்றாலும், தோல்வியாகி விடாது. அதுவும் கூட பாடமாகி எதிர்கால தொடர் வேலை. அதனை வெற்றியாக்கிவிடும் என்பது ருசுபிக்கப்பட்ட உண்மை.
இந்தச் சந்தர்ப்பத்தில் ஒரு கேள்வி எழும். ஒரு அமைப்பின் இத்தனை வேலைகளையும் நிர்வகிப்பது யார்? இவ்வினாவிற்கு விடை தேடி அலைய வேண்டியதில்லை. வேலைப்பிரிவினையில் பொறுப்பேற்று, கூட்டு உறவில் வேலைகளை முடித்து, வடிவம் தந்து கூட்டு அனுபவத்தில் பாடம் கற்று பக்குவம் பெற்று, கூட்டுச் சிந்தனையால் திறன் பெற்று, கூட்டாகவே விளைவுகள் ஏற்க துணிந்து விட்ட அமைப்பு, கூட்டு நிர்வாகத்தில் முத்திரைப் பதிப்பதில் என்ன கோளாறு? ஏது தடை?
பட்டதைச் சொல்ல ஒரு தலைவர். அதனை அட்டியின்றி ஏற்றிடும் எடுபிடிகள். காட்டிய பாதையில் செல்ல குழப்பிவிடப்பட்டிருக்கும் ஒரு பெரும் கூட்டம். மடமையில் ஆழ்ந்த மக்கள் அதிலிருந்து மீள முடியாமல் ஏதோ ஒரு கவர்ச்சியால் ஆழ்த்தி வைத்து ஆதாயம் கண்டிடும் கோஷ்டிகளின் கூட்டும் குடும்பமும் என்ற போக்கில் பண்ணை நடத்துவதல்ல அமைப்பு.
அமைப்பை நிர்வகிப்பதும் கூட்டு பொறுப்பிலான கூட்டு நிர்வாகம். பரஸ்பர நேசம். நம்பிக்கை, அக்கறை, மரியாதை, ஒத்துழைப்பதில் உறுதி கொண்ட குழு நிர்வாகத்தையும் வேலைப் பிரிவினையால் முறைப்படுத்தி முழுமைப் படுத்திக் கொள்ளும். அத்திறனை அக்குழு பெற்றிருக்கும்.
அக்குழுவிலுள்ள திறன் பெற்ற, திறன் பெற்றுக் கொண்டிருக்கிற, அமைப்பினுள் ஈர்க்கப் பட்டவர்கள் கொள்ளும் உறவு தோழமை உறவு. தலைமை அமைப்பானாலும் அமைப்பு மட்டங்களானாலும், வழிகாட்டுதலுக்குரிய அமைப்பானாலும் அவற்றில் அங்கம் பெற்ற அனைவரின் உறவுகளும் தோழமை உணர்வு கொண்டதே. திறன் வேறுபடலாம். பொறுப்புகள் வேறுபடலாம். உறுப்புகள் வேறுபடலாம். பயிற்சி பக்குவங்கள் வேறுபடலாம். ஆனால் உறவில் அவர்களுக்கிடையே வேறுபாடில்லை. இருக்க முடியாது. எல்லோரும் எல்லாவற்றிலும் திறன் பெற்றிருப்பது இயலாதது. இல்லாதது. எல்லாவற்றையும் பற்றிய ஒரு பொதுவான கண்ணோட்டமும், குறிப்பிட்ட துறையைப் பற்றிய ஆய்வாய்ந்த புரிதலும், எல்லாவற்றோடுமான ஒரு பொதுவான அணுகுமுறைப் பண்பும், குறிப்பிட்டத் துறையுடனான ஒரு ஆழமான அணுகுமுறைத்திறனும் கொண்டிருப்பது தான் இயல்பானது. சாத்தியமானது. என்றாலும் இந்த வேறுபாட்டால் தோழமை உறவிலும் உரிமையிலும் பேதமிருக்காது. இருக்க முடியாது. இருக்கக் கூடாது.
தோழமை உறவை, அறிந்து, தெரிந்து, தெளிந்து, புரிந்து கொண்டால் இயக்கத்தைக் கட்டுவதில், காப்பதில், கனலேற்றுவதில், களமிறக்குவதில், களம் காண்பதில் , களம் சந்திப்பதில், தளம் களம் இணைப்பதில் எவ்வித சங்கடமும் இல்லை. இயக்கம் வீச்சும் விரிவும் பெறச் செய்வதில் எவ்வித தடைக்கும் வழியில்லை. அப்படி ஏற்பட்டாலும் தாண்டிச் செல்லுவதில் தடையில்லை.
விடுமடல் - 19

Subscribe to:
Comments (Atom)