மே தின சூளுரை
ஒரு நாள் மே-இல் தொடங்கிய நம் தொடர்பு ஓராண்டு முடியுமுன் தொடர்பிழந்து மீண்டும் இந்த மே-இல் மேலுமான உறுதியோடு தொடங்குகிறோம்.
மேதினம். மேதினியறிந்த தினம். உழைப்பாளர்கள் உள்ஆழ்ந்து கொண்டாலும் உலகறிந்த இந்நாளில் பல வகை உலுத்தர்களும் உறிஞ்சர்களும் இதனில் ஊடுருவி கொண்டாடுவதாக குதூகளிப்பது விந்தையும், வேடிக்கையுமாகும். அத்தகையோரின் கொண்டாடும் நோக்கங்கள் வெளிப்பட்டால் அல்லது வெளிப்படுத்தப் பட்டால் கொண்டாட்டத்தின் தரமும் தன்மையும் அம்பலமாகிவிடும்.
1886 ஆம் ஆண்டில், அமெரிக்காவில் எட்டுமணி நேர வேலை இயக்கம் எழுப்பிய மாபெரும் வெடியயாலி தான் உலகை அதிரச் செய்த பேரொலியானது. அது திடீரென வெடித்ததல்ல, 1800 ‡ களின் தொடக்கத்திலிருந்தே கனன்றும், அவிந்தும், புகைந்தும், எரிந்தும் கொண்டிருந்ததின் விளைவுதான் 1886 இல் ஜீவாலை விட்டெரிந்தது.
சுக போகத்திற்கு சொந்தக்காரர்கள், சுய ஜீவனத்தில் பங்கப்பட்டோர் என்ற நிலை தோற்றுவிக்கப்பட்ட பின்னர் மேதைகள் மா‡ஏ கூறியது போல எழுதப்பட்ட சரித்திரங்கள் அனைத்தும் வர்க்க போராட்டத்தின் சரித்திரங்கள் தானே? இந்திய துணைக் கண்டத்தில் பகலவன் பெரியார் குறிப்பிட்டது போல, இந்திய தீபகற்பத்தின் வரலாறு ஆரியர் - திராவிடர் அல்லது பார்ப்பனர் - சூத்திரர் போராட்டத்தின் வரலாறுதானே?
சுரண்டுவோர் - வறண்டவர், ஆதிக்கவாதிகள் - அடிமைவாசிகள், ஆள முனைவோர் -தாழக் கிடப்போர் என்ற பிளவும், பேதமும் உரு பெற்ற பின், பாட்டாளிகள் - படாடோபக்காரர்கள், உழைப்பாளிகள் - உறிஞ்சாளிகள், மடமையில் வீழ்த்தப்பட்ட மக்கள் திரள், மகிமையால் உடமைபெற்ற சிறு கும்பல் என்ற சூழல் வலுவுற்றது.
இதன் விளைவு பாட்டாளிகள் , வெகு மக்கள் திரள் தங்கள் பசி போக்க, உயிர் வாழ, நான் நாம் ஆன நோக்கம் ஈடேற, உருகுலைந்த நிலை களைந்து உணர்வுகள் உயர, அசைவுக்கசைவு போராட வேண்டியவர்களாக களம் தள்ளப்பட்டனர். கரையேற களம் தொடரும் திசைவழியில் தொடக்க அறிகுறிகள் மேதினம்.
அமெரிக்காவில் பட்டறைகளும், ஆலைகளும் பெருமளவில் பெருத்து, உழைப்புச் சுரண்டல் அகமும் புறமுமாக கொடூர தன்மை கொண்டு தலைவிரித்தாடிய போது, வேலை நேர குறைப்பு என்ற உணர்வில் 8மணி நேர வேலை என்ற கோரிக்கை, 1884 ஆம் ஆண்டு அமெரிக்கா ‡ கனடா கூட்டமைப்பின் 4 ‡ வது மாநாட்டில் பரிந்துரைக்கப்பட்டு, 1885 ஆம் ஆண்டு கூட்டமைப்பு மாநாட்டில் தீர்மானிக்கப்பட்டு, வீரமும் தீரமுமிக்க தொழிலாளர்களின் எழுச்சியாக உருபெற்று, உரம் கொண்டு, 1881 முதல் தொடர்ந்து வளர்ந்த தொழிலாளர்களின் போர்ப்படைப் போக்கில் பரிணமித்து, 1886 மே 1 -இல் அமெரிக்க நாட்டு அனைத்து தொழிற்சாலைகளிலும் வேலை நிறுத்தங்கள் தொடங்கி, தொடர்ந்தன. ஏறத்தாழ 12 இலட்சம் பாக்டரிகளில் 4 இலட்சம் பேர் வேலை நிறுத்தம் செய்தனர்.
அதன் முத்தாய்ப்பாக அமெரிக்க சிகாகோ நகரில் ஆலை சங்குகள் ஓலமிட மறுத்தன. புகைப் போக்கிகள் புகைக்காது நகைத்தன. சிகாகோ நகர உழைப்பாளர்கள் விழித்தனர் எழுந்தனர். எழுச்சியுற்றனர். கிளர்ந்தனர். களமிறங்கினர். உறுதி உத்வேக உற்சாகத்தோடு ஒற்றுமை கண்டனர். அனைத்து தொழிற் பகுதிகளிலிருந்தும் ஆதரவு குவிந்தது.
பாட்டாளிகளின் பகைவர்களோ வேலை நிறுத்தத்தை ஒடுக்க, தலைவர்களை, சிறையில தள்ள, முடிந்தால் தீர்த்துக் கட்ட, தொழிலாளர்களின் இயக்கத்தை ஒழித்துக் கட்ட திட்டமிட்டனர். வேலை நேரத்தை குறைத்தால் தொழிலாளர்கள் சோம்பி, சூதாடி, சுகம் கெட்டு, குடித்து குடியழிவர் என விகட நியாயம் பேசினார்கள். இராணுவம் போலிஸ் தயார் செய்யப்பட்டது. அந்த அரசாங்க அடியாட்களோடு அந்தரங்க உறவாடிய டெரன்ஸ் பவுடர்லி என்ற தொழிற்சங்கத் தலைவன் துரோகியானான். அணிகளும் புரிந்து கொண்டு அவனை அந்நியப்படுத்தியது.
1886 மே - 3 ஆம் தேதி மெக்கார்மிக் ரீப்பர் ஓர்க்ஸ் தொழிலாளர்களின் வேலை நிறுத்தத்தை முறியடிக்க கருங்காலிகள் பயன்படுத்தப்பட்டனர். கருங்காலிகளின் எச்சில் கூட்டத்தை கட்டமைந்த தொழிலாளர்களின் போர்ப்படை தடுத்து நிறுத்தியது. போலிஸ் குண்டர்கள் தடியடி நடத்தினர். 6 தொழிலாளர்கள் கொல்லப்பட்டனர்.ஏராளமானோர் காயமடைந்தனர்.
இந்த போலிஸ் அராஜகத்தை கண்டித்து, மே 4 இல் ஹேமார்ட் திடலில் ஒரு கண்டனக் கூட்டம். சுமார் 5 ஆயிரம் ஆண் பெண் குழந்தைகள் குழுமினர். 200 பேர் கொண்ட ஆயுதப்படை சுற்றி வளைத்தது. நான்கு தலைவர்கள் உரையாற்றினர். உழைப்பாளர் உள்ளங்களில் உணர்வும் உறுதியும் நிறைந்தது. கூட்டம் அமைதியாக நடந்தது.
எக்காலத்தும், எப்பக்கத்தும், அமைதியை மட்டும் விரும்பாத அநியாய போலிஸ் படை, திடீரென கூட்டத்தை கலைந்து போக உத்திரவிட, அவ்வக்கிரம போக்கை தலைவர்கள் மறுக்க, போலிஸ் ஏற்கனவே திட்டமிட்டடிருந்தபடி போலிஸின் கையாள், ரூடால்ப்ஸ்னா பெல்ட் என்பவன் ஒரு வெடிகுண்டை தூக்கி வீச, அதில் போலிஸ் ஒருவர் சாக, அதை சாக்காக்கி மக்கள் மீது தடியடியும் துப்பாக்கிச் சூடும் நடத்தப்பட்டது. 50 பேர் சுடப்பட்டனர். 200‡இக்கு மேல் காயமடைந்தனர். தொடர்ந்தன சிகாகோ போலிஸின் அக்கிரமம், அடாதுடி, அட்டுழியங்கள்.
தொழிற்சங்கத் தலைவர்கள் 8 பேர் மீது கொலை வழக்கு, நீதிமன்றம் என அழைக்கப்படும் வழக்கு மன்றத்திலே குற்றச் சாட்டு வழக்கு மன்றம் தண்டனை வழங்கும் மன்றம் தானே? உழைப்பாளர்கள் பிரச்சனையில் நீதிமன்றங்கள் எப்போதும் அ வை முன்னிணைத்து தானே நிற்கும். ஆகவே 8 பேருக்கும் தண்டனை. 7 பேருக்கு தூக்கு -பின் 4 பேர் தூக்கிலிடப்பட்டனர். ஒருவரை போலிசே கொன்றுவிட்டது. இருவருக்கு ஆயூள் தண்டனை‡ ஒருவருக்கு 15 ஆண்டு தண்டனை. ஆனாலும் ஒரு கொடுமை தெரியுமா? 1893 இல் அந்நாட்டு கவர்னர், இந்த வழக்கில் குற்றம் நிருபிக்கப்படவில்லை எனக் கூறி சிறைப்படுத்தப்பட்டிருந்தோரை விடுதலை செய்தார். தூக்கிலிடப்பட்ட 4 பேரை யார்தான் மீட்டுத் தருவார்?
1887 இல் அமெரிக்காவில் எண்ணற்ற வேலை நிறுத்த போராட்டங்கள், அதனை நசுக்க இராணுவ தாக்குதல். அரசையும் அரசு நிறுவனங்களையும் எதிர்த்து வீச்சு, விரிவு பெற்ற போராட்டங்கள். புதிய அனுபவத்தில் போர் குணமிக்க உணர்வு தொழிலாளர்கள் இயக்கம் முழுவதிலும் ஊடுருவி, வளர்ந்து உயர்ந்தது.
1889 இல் பிரன்ஞ்ச் புரட்சியின் - பாஸ்டில் சிறை உடைப்பு - நூறாவது ஆண்டு தினம் கொண்டாடவும், 25 ஆண்டுகளுக்குப்பின் சர்வதேச தொழிலாளர் அமைப்பை மீண்டும் ஏற்படுத்தவும் 2-வது அகிலம் கூட்டடப்பட்டது. அக்கூட்டம் உலகு தழுவிய ஆர்ப்பாட்டத்தை 1889 மே முதல் நாள் நடத்த முடிவு செய்தது. இதுதான் மே தின வரலாறு.
எனவே மேதினம் ஒரு போராட்ட தினம். போராட்ட உணர்வூட்டிய தினம். திட்டமிட்ட செயலில் தீவிரம் காட்டிய தினம். எதிரிகளையும், எதிரிகளின் சுயரூபத்தையும் அவர்கள் தூக்கியாடும் ஆயுதங்களையும் அடையாளம் காட்டிய தினம். ஏமாந்த நிலை கடந்து தடை உடைத்து நிமிர்ந்து நின்று, எச்சில் சலுகைகளுக்கல்ல, எங்கள் உரிமைகளுக்கு, விடுதலைக்கு, சுதந்திரத்துக்கு என போர் முரசு கொட்டிய தினம். புரட்சியின் பாதையில் சரியாகச் செல்லும் போது, எதிர் நிற்பது பகைவர்கள் மட்டுமல்ல, அவர்கள் நிழலில் பதுங்கியுள்ள துரோகிகளையும் , நம்மிடையே ஊடுருவியுள்ள அவர்களது உளவாளிகளையும் காலத்தில் கண்டறிய கற்றுத் தந்த தினம்.
இந்த உதாரண நாளை, பாட்டாளிகளின் பகைவர்களும், வரவுக்கு உறவைக் காட்டிக் கொடுத்த துரோகிகளும், வெளிக்கண்டு தலை நுழைத்து உறவாடிய உளவாளிகளும், எங்களது தினமும் மேதினம். நாங்களும் கொண்டாடுவோம் என குதூகலிக்கிறார்களே இது விந்தையா -வீம்பா? பித்துச் செயலா -எத்து வேலையா? நாநய காரியமா? -நாச காரியமா? எதுவாயிருப்பினும் ஏமாந்து போகாது எச்சரிக்கை கொள்வது பாட்டாளிகள் -படைப்பாளிகள் - போராளிகள் கையில்தான் இருக்கிறது.
1886 மே தினத்திற்குப் பின்அனைத்து நாடுகளின் பாட்டாளிகளும் கற்றுக் கொண்ட பாடமென்ன?
உழைப்பைச் சுரண்டுவார்கள். அதற்கு உரிய விலை கேட்டால் உதைப்பார்கள். உழைப்பால் தான் படைப்பு என புரிந்தவர்கள், பணத்தால் உழைப்பை விலை பேசுவார்கள். உழைப்பை உரிமையாக்க மறுப்பார்கள். உரிமைக்குரல் ஒலித்தால் குரல் வளையை நெறிப்பார்கள். உழைப்பின் மதிப்பைச் சிதைப்பார்கள். மானத்தின் மகத்துவத்தை பறிப்பார்கள். சலுகை கேட்டால் அடியாட்களை அனுப்புவர். உரிமை கேட்டால் போலிசை ஏவுவர். விடுதலை கோரினால் இராணுவத்தை முன் நிறுத்துவர். அடிமைத்தனத்தை ஒழிப்போம் என்றால் ஆதிக்க வலிமை எங்களிடம் என்பர். நாடு எங்களது என்றால் ஆட்சியதிகாரம் எங்கள் கையில் என்பர். அனைத்து ஆயுதங்களையும் பெற்ற எதிரிகளுக்கு எதிரான நாட்டுக்குச் சொந்தக் காரரான பாட்டாளிகள் போராளிகள் கையில் என்ன இருக்கிறது?
தன்னறிவு-தன்னம்பிக்கை-தன்னுறுதி-தன்னூக்கம் - தன்னடக்கம்-தன்னிழப்பு- தன்மானம் இத்தனையும் மொத்தமாய் கொண்ட ஓர்மை -ஒற்றுமை-உறவுப் பிணைப்பு. இதுதானே மூலதனத்தை எதிர்த்தொழிக்கும் மூலதனம். இந்த பாடம் தானே மேதினம் தந்த பாடம்.
1917 இல் ரஷ்ய பாட்டாளிகள் புரட்சியின் வெற்றி மே நாளில் சாட்சியமல்லவா? 1945 - இல் பெர்லினை வெல்வதில் பாட்டாளிகள் படை காட்டிய தீரம் மே தினத்தின் தாக்கம் அல்லவா? 1975-இல் வியத்நாம் விடுதலைப் படை சைகோனில் வெற்றிக் கொடி நாட்டியது மே தினத்தின் வெளிப்பாடல்வா? உலகில் அனைத்து நாடுகளின் உழைக்கும் வர்க்கம் விடுதலைப் போரில் ஊக்கமும் உத்வேகமும் பெற்று உயர்ந்து நிற்பது மேதினத்தின் போர்ப் படைப்பல்லவா? மொத்தத்தில் மா -ஏ- லெ-ஸ்- மா- ஹோ-பி-சே-கி-பெ-பி ஆகிய புரட்சியர்கள் பொறித்திருக்கும் முத்திரைகளில் மே தின வெளிச்சம் தெரியவில்லையா?
இந்த தினத்தை அரசியல் கோமாளிகளும், அடிவருடி இலாவணிக்காரர்களும், பதவிக் கூத்தாடிகளும், பலிகடா ப-பா -இக்களும் தங்களது மாறுவேடப் போட்டிக்கும், பொம்மலாட்ட காட்சிக்கும், பஐனைப் பாட்டுக்கும் கதாகாலட்சேப பேச்சுக்கும் பயன்படுத்தி குதிர்நுழைக்கும் எலியாக, கொள்ளையிடும் பெருச்சாளியாக, உருவெடுப்பதை வேரறுப்பது மே தின வேலைகளில் ஒன்றல்லவா?
இனியவர்களே! இந்த தளத்தில் நின்று இந்திய துணைக்கண்டத்தை -தமிழ்நாட்டை சற்று கூர்ந்து நோக்குவோம். இவ்வுலகில் வேறெங்கும் காணமுடியா பிறவி பேதம், பிறவி ஒடுக்குமுறை, பிறவி அடிமைத்தனம், பிறப்பெடுத்திருப்பது இங்கல்லவா? பிறவி அடிமையும் பிழைப்பில் அடிமையும் சூத்திரர்கள் பஞ்சமர்கள் பாட்டாளிகள் தானே? புரட்டு பிறப்பெடுத்த பார்ப்பனர்களும், திருட்டு உழைப்பில் உதித்த பெருமுதலாளிகளும்தானே எஜமானர்கள்? இவர்களது தேசியம் தானே இந்திய தேசியம்?
சூத்திரர்களும் பாட்டாளிகளும் படைப்பாளிகள். பேருச்சி பார்ப்பனர்களும் பெருஉடைமை முதலைகளும் பறிப்பாளிகள். படைப்பாளிகளின் மானத்தைப் பறித்து பறிப்பாளர்கள் ஈனப்பட்டனர். பறிகொடுத்த மானத்தை மீட்க ஈனப்பிறவிகளை எதிர்த்தொழிக்கும் வேகத்தை இம் மேதினம் ஊட்டுவது தெரிகிறதா?
பதவி குண்டின் மீது நின்று கொண்டு, பண குண்டையும், அணு குண்டையும் இரு கரங்களில் ஏந்தி பறிப்பாளர்கள் பந்தா காட்டினாலும் , படைப்பாளிகளின் மனித குண்டைக் கண்டு மருளுவதை உணர முடிகிறதல்லவா?
உரிமைக்கும் விடுதலைக்கும் சுதந்திரத்திற்கும் போராடும் வெகு மக்கள் திரள். வருண பேதம், ஜாதி பேதம், வர்க்க பேதம், பாலியல் பேதம் ஒழிக்கப்பட, பிறவி முதலாளி, கல்முதலாளி, பண முதலாளிகளை எதிர்த்து போரிட்டேயாக வேண்டும். அப்போரின் பரிணாமமே ஒரு புரட்சியில் முடியும்.
கடந்த காலத்தையும் எதிர்காலத்தையும் இணைக்கும் கொடி தானே நிகழ்காலம். ஆண்டுதோறும் , கடந்த கால வரலாற்றுச் சூழலில் படைப்பாளிகளும் போராளிகளும் திட்டமிட்ட பணிகளோடு பயணித்து முடித்து பட்டறிவில் வரலாற்றைப் பாடமாக்கி, எதிர்காலத்தில் சூழல் மாற்றத்திற்கும் செயலூக்கத்திற்கும் திட்டமிட்டு பயணத்தைத் தொடங்கச் செய்யும் இணைப்பு தினம் தானே மே தினம்?
தமிழகத்தின் நிலை என்ன? அரசியல் கட்சிகளின் கூத்துக்கள் - ஓலங்கள் - இலாவணிகள் - குழப்பங்கள் - சட்டமன்ற பெம்மலாட்டங்கள் - கோணல் மாணல் கூட்டுக்கள் - அதற்குள் வேட்டுக்கள் - சிகப்பு விளக்கு சேஷ்டைகள்- இது ஒரு புறம். ஆதிக்க வர்க்கத்தின் கொள்ளை - அதிகார வர்க்கத்தின் கொடுமை - அராஜகவாதிகளின் அட்டூழியம் ஆகியவற்றால் மக்கள் படும் அவதி மறுபுறம். வறுமை -பட்டினிச் சாவு-வேலை யின்மை- வாழ்க்கை முடக்கம் - கடனில் அடக்கம் - சபல வாழ்வு - சாவில் ஜீவனம் என நாச நிலை இன்னொரு புறம். போதாமைக்கு புயலின் தாக்கு - சுனாமியின் தகர்ப்பு - வெள்ளத்தின் அழிப்பு - இத்தனையும் மொத்தமாய் தமிழர்களுக்கு சவால் வினா எழுப்புகிறது. விடை உண்டா?
சிகாகோவில் தூக்கிலிடப்பட்ட போராளி ஸ்பைசின் சொன்னார்:
இன்று உங்களால்ல நெறித்தொழிக்கப்படும் எங்கள் குரலைக் காட்டிலும் எங்களது மெளனம் அதிக வலிமை பெறும் காலம் வந்தே தீரும்.
இந்தோனேசியாவில் தூக்கு கயிற்றை முத்தமிட்ட போராளி சுடிஸ்மான் சொன்னார்:
வாழ்வது போராடுவதற்கே- போராடுவது வாழ்வதற்கே, போராட மறப்பது மரணத்தில் நுழைவது.
போராளி மார்க்ஸ் சொன்னார்:
அடிமைத்தனத்தின் மரணத்திலிருந்துதான் புதிய வேகமுள்ள வாழ்க்கை மலர்ந்தது.
போராளி ஏங்கல்ஸ் கூறினார்:
பாட்டாளி வர்க்கம் முதன் முறையாக ஒரு கொடியின் கீழ் ஒரு இராணுவமாக ஒரே நோக்கத்திற்காக ஒழுங்குபடுத்தப்பட்டிருக்கிறார்கள். உலக நாடுகளிலுள்ள பாட்டாளிகள் வர்க்கம் ஒன்று பட்டிருக்கிறார்கள் என்ற உண்மையை எல்லா நாடுகளிலுமுள்ள முதலாளிகளும் , நில உடைமையாளர்களும் புரிந்து கொள்ளும்படி செய்து கொண்டிருக்கிறார்கள்.
போராளி பெரியார் சொன்னார்:
பொய்மைக்கும் புரட்டுக்கும் மெளன சாட்சியாயிருப்பதை விட புதுமைக்கும் புரட்சிக்கும் இரத்த சாட்சியாயிருங்கள்.
பெரியார்- பிரபாகரன் முழக்கங்கள்:
சுதந்திர தமிழ்நாடு எனது இலட்சியம் - புலிகளின் தாகம், தமிழீழத் தாயகம்.
தோழமையுடையோரே!
மேலே கண்ட போராளிகளின் போதனைகள், தேடும் வினாக்களின் விடைக்கு தொடுமுனை காட்டுகிறதல்லவா?
தமிழகத்தில் ஈனப்பிறவிகளால் தமிழர்கள் மானம் பறிக்கப்பட்டடிருக்கிறது. மானம் பறிக்கப்பட்டிருப்பவர்கள் ஈனர்களாகி விடவில்லை - விடக் கூடாது- விடமுடியாது.
தன்மானம் காக்க - பெண்மானம் மீட்போம்; இனமானம் காக்க மண்மானம் மீட்போம்; தன்மானம் - மனிதமானம் பிணைந்த சமூகம் காண்பதில் , காப்பதில் இனமானம் இசைவும் இணைவும் கொள்ளும்.
இன்றைய மே தினத்தின் மூலம் சுதந்திரத் தமிழ்நாட்டைப் பார்க்கிறோம். சுதந்திரத் தமிழ்நாட்டிலிருந்து மே தினத்தைப் பார்க்க வேண்டாமா?
விடமடல் - 13 நன்றி; தன்மானம்எம்மவரே! நம்மவரே!
No comments:
Post a Comment